இவ்வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை சரிவடைந்ததன் காரணமாக, இந்த விலை குறைவு தொடர்ந்து பதிவாகி வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது, ஒரு லிட்டர் டீசல் €1.66 யூரோக்களுக்கு விற்பனையாகிறது, இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 2.7% குறைவாகும். அதே நேரத்தில், 95-E10 ரக பெற்றோல் €1.71 யூரோக்களுக்கு விற்பனையாகிறது, இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 2.5% குறைவாகும்.
உலக சந்தையில் ஒரு பரல் கச்சா எண்ணையின் விலை தற்போது 72.4 அமெரிக்க டொலர்களாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.9 டொலர்கள் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இவ்வருட தொடக்கத்திலிருந்து இதுவரை 16% குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.