Thursday, March 12, 2026
No menu items!

யாழில் கத்திக்குத்து! ஒருவர் பலி! நால்வர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40) என்பவரே உயிரிழந்தவர்.

இவர்மீது தொடர்ச்சியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அதேநேரம், தாக்குதலை மேற்கொண்டவரை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உட்பட நான்கு பேர் மீதும் தாக்குதலாளி கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

காயமடைந்த நான்கு பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


À Jaffna, hier soir, dimanche, une attaque au couteau a entraîné la mort d’une personne et a grièvement blessé quatre autres, dont deux femmes. La victime décédée est Arputharasa Akilan, âgé de 40 ans, originaire du premier secteur de Pungudutivu.

L’individu a été attaqué à coups de couteau à plusieurs reprises, ce qui a entraîné son décès sur place.Par ailleurs, l’agresseur a également attaqué au couteau quatre personnes, dont deux femmes, qui tentaient de l’appréhender, avant de prendre la fuite.

Les quatre blessés ont été admis à l’hôpital universitaire de Jaffna.La police d’Oorkavalthurai a ouvert une enquête sur cet incident.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

பிரான்சில் சம்பள உயர்வுக்காக சம்பவம் செய்யும் ஊழியர்கள்!

பிரான்ஸ் ரயில் ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகள்இடம்பெறும் போது, ஊதியத்தில் மேலதிக கொடுப்பனவுகள் கோரி அவர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளஉள்ளதாக தெரிவித்துள்ளனர். இம்மாதம் 21 ஆம் திகதி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. சில RER சேவைகளும்,  மற்றும் ட்ராம்சேவைகளும் பாதிக்கப்பட உள்ளதாக தெரிகின்றது. ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பல தரம்புக்களுக்கு மாத சம்பளத்தை அரசு உயர்த்தி வரும்நிலையில்,இதனை காரணமாக வைத்து தமக்கும் சம்பளத்தை உயர்த்த சொல்லி வற்புறுத்தியே மேற்படிவேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. 21 ஆம் திகதி வேலை நிறுத்தம் இடம்பெற உள்ள நிலையில், மறுநாள் மே 22 ஆம் திகதி தொழிற்சங்கதலைவர்களுடன் SNCF நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

இலங்கையில் தங்க விலை வரலாறு காணாத உச்சம்!

கொழும்பு, ஏப்ரல் 17, 2025 – இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 17, 2025) வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது, உலகளாவிய தங்க விலை உயர்வுடன்...

பிரான்சில் வீடு வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

பிரான்சில் வீடு வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் பிரான்ஸில் வீடு வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.பாரிஸ்பிராந்தியத்தில் வீடுகளின் விலைகள் குறைந்துள்ளதாகவும் ஆனாலும் மக்களுக்கு அதனை வாங்குவதற்குரியசக்தி வலு குறைந்திருப்பதாகவும் அரசு சார்பில் நடாத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் வங்கிகளூடாக மக்களுக்கு இலகு கடன்களை வழங்கி வீடுகளை வாங்க மக்களுக்கு உதவி செய்யும்திட்டங்களை முன்மொழியவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதற்கு 6 மாத கால அவகாசத்தை அரசு கேட்டுள்ளது.

More Articles Like This