Read More

யாழில் கத்திக்குத்து! ஒருவர் பலி! நால்வர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40) என்பவரே உயிரிழந்தவர்.

இவர்மீது தொடர்ச்சியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அதேநேரம், தாக்குதலை மேற்கொண்டவரை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உட்பட நான்கு பேர் மீதும் தாக்குதலாளி கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

- Advertisement -

காயமடைந்த நான்கு பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


À Jaffna, hier soir, dimanche, une attaque au couteau a entraîné la mort d’une personne et a grièvement blessé quatre autres, dont deux femmes. La victime décédée est Arputharasa Akilan, âgé de 40 ans, originaire du premier secteur de Pungudutivu.

L’individu a été attaqué à coups de couteau à plusieurs reprises, ce qui a entraîné son décès sur place.Par ailleurs, l’agresseur a également attaqué au couteau quatre personnes, dont deux femmes, qui tentaient de l’appréhender, avant de prendre la fuite.

- Advertisement -

Les quatre blessés ont été admis à l’hôpital universitaire de Jaffna.La police d’Oorkavalthurai a ouvert une enquête sur cet incident.

- Advertisement -