இவ்வேடிக்கையான உரையாடல் எமது மக்களின் சமூக சிந்தனையை எடுத்துக்காட்டுகிறது. பொதுவாக, மக்கள் தங்கள் தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு மட்டுமே பொது அமைப்புகளை அணுகுகிறார்கள். ஆனால், அந்த அமைப்பு எவ்வாறு இயங்குகிறது? அதன் முழுமையான செயல்பாடு என்ன? அதன் மீது அவர்கள் செலுத்தும் அழுத்தம் எப்படி நிர்வகிக்கப்படுகிறது? இவற்றைப் பற்றி பெரும்பாலானோர் சிந்திக்க மாட்டார்கள்.
இது ஒரு மருத்துவமனைக்குள் நிகழும் ஒரு சம்பவமாக தோன்றலாம். ஆனால், இதில் உள்ள அடிப்படை கோட்பாடு ஒட்டுமொத்த சமூக அமைப்புக்கும் பொருந்தும். மருத்துவம், அரசு, நீதி, போக்குவரத்து போன்ற எந்த அமைப்பையும் எடுத்துக்கொண்டாலும், பொதுமக்களின் செயல்பாடுகள் அவற்றின் செயல்திறனை நேரடியாகக் குறிக்கின்றன.
100 க்கு 99% ஆன நோயாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மனநிலை இதுதான்
.மக்கள் அவர்களுக்கு மட்டுமே பொருத்தமானதாக எதுவோ அதைத்தான் பார்க்கின்றனர். ஒரு மருத்துவர் rounds முடித்துவிட்டார் என்றால், ‘நமக்கு அவர் அனுமதி கொடுத்துவிட்டார், போகலாம்’ என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் rounds என்பது ஒரு மருத்துவமனை செயல்முறையின் முக்கியமான அங்கமாகும்.
rounds முடிந்த பிறகே அங்கு இருக்கும் மருத்துவர் எதிர்கால சிகிச்சை முறைகளை முடிவு செய்கிறார். நோயாளிகளுக்கு எக்கோ, ஸ்கேன், X-ray போன்ற பரிசோதனைகள் தேவையா, எந்த மாற்று மருத்துவரிடம் அனுப்ப வேண்டுமா, புதிய மருந்துகள் பரிந்துரைக்கப்பட வேண்டுமா என்பதெல்லாம் rounds முடிந்த பிறகு தீர்மானிக்கப்படும்.
ஆனால் மக்கள் இவை அனைத்தையும் புரிந்துகொள்ளாது, rounds முடிந்த உடனே ‘நம்மை அனுப்பி விடுவார்களா?’ என்ற சந்தேகம் எழுப்புகிறார்கள். சிலர் இன்னும் மேலே சென்று, ‘நான் வேலைக்குப் போக வேண்டும் என்னை வேகமாக அனுப்புங்கள்?’ என்று முயற்சியும் செய்கிறார்கள்.
இதில் அவர்கள் செய்யும் தவறு—ஒரு அமைப்பு எந்த விதத்தில் இயங்குகிறது என்பதற்கான புரிதல் இல்லாமை. இந்த அறியாமை மட்டும் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், அவர்களது அறியாமை, சமூக அமைப்பின் செயல்திறனை பாதிக்கும்படி செயற்படும்போது, அது ஒரு பெரிய societal failure ஆக மாறுகிறது.
தனிப்பட்ட தேவைகளை மட்டும் பார்க்காமல், அமைப்பின் சரியான இயக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம். ஆனால் மக்கள் அமைப்புகளை எப்படி பார்க்கிறார்கள்?
மக்கள் தனிநபர் பார்வை கொண்டுள்ளனர் – ஒரு மருத்துவமனைக்கு வந்தால், ‘எப்படியாவது விரைவாக சென்று விட வேண்டும்’ என்பதே நோக்கம். அதேபோல், அரசு அலுவலகங்களில் ‘என்னுடைய வேலை மட்டும் முடிந்துவிட்டாலே போதும்’ என நினைக்கிறார்கள். ஆனால் அமைப்பின் முழுமையான செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை.
அமைப்பின் பணிச்சுமையை புரிந்துகொள்ளமாட்டார்கள் – ஒரு மருத்துவருக்கு rounds முடிந்த பிறகு எவ்வளவு வேலை இருக்கிறது? அவர் discharge எழுதும் போது எவ்வளவு தகவல்களை கவனமாக பரிசீலிக்க வேண்டும்? ஒரு அரசு அதிகாரி ஒரு கோப்பை கையெழுத்திட்டு முடிப்பதற்கு முன் எவ்வளவு சட்டப்பூர்வமான தகவல்களை பார்த்திருக்க வேண்டும்? இவை அனைத்தும் பொதுமக்களால் புரிந்துகொள்ளப்படுவதில்லை.
கட்டுப்பாடு இல்லாத முறையில் அமைப்புகளை அழுத்துகிறார்கள் – மக்கள் தங்கள் தற்காலிக தேவைகளைப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் சமூக அமைப்பின் மீதான அழுத்தம் எவ்வளவு பெரியதோ, அதைக் கணிக்க மாட்டார்கள்.
மக்கள் குற்றவாளிகளா?
இந்த கோணத்தில், ‘மக்கள் தாங்களே ஒரு அமைப்பின் அழிவிற்கு காரணமா?’ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில், அவர்கள் அறியாமையால் அமைப்பின் செயல்திறனை பாதிக்கிறார்கள். ஒரு மருத்துவமனைக்குள் வருவோருக்கு rounds என்றால் என்ன? discharge என்றால் என்ன? மருத்துவர்களுக்கு எவ்வளவு வேலை இருக்கிறது? இவற்றைப் பற்றிய குறைந்தபட்ச அறிவு கூட இல்லை. இதனால், அவர்கள் தங்களது குறுகிய நோக்கில் மட்டுமே செயல்படுகிறார்கள்.
இங்கே வரும் மிக முக்கியமான கருத்து, மக்கள் ஒவ்வொருவரும் தனியாக தங்கள் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் ஒரு சமூக அமைப்பு தனிநபர்களின் கோட்பாட்டில் இயங்காது. அது ஒட்டுமொத்த சமுதாய நலனை முன்பாகக் கொள்ளும்.
இதை நாம் Wheel-Axis Theory மூலம் அணுகினால், மக்கள் தங்களே சக்கரமாக (wheels) செயல்படுகிறார்கள். ஆனால் அவர்களை கட்டுப்படுத்தும் ஒரு அச்சு (axis) இல்லாதபோது, அவர்கள் முறையற்ற பாதையில் செல்ல ஆரம்பிக்கிறார்கள். சமூக ஒழுங்கும், ஒற்றுமையும் உடைந்து விடுகிறது.
தீர்வு என்ன?
மக்கள் ஒழுங்குமுறைகளை புரிந்துகொள்ள வேண்டும் – ஒவ்வொரு அமைப்பும் எந்த விதத்தில் இயங்குகிறது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள இயல வேண்டும். ஒரு மருத்துவமனை rounds முடிந்த பிறகும் வேலை செய்து கொண்டிருக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அமைப்புகளின் செயன்முறைகளை மக்களுக்கு விளக்க வேண்டும் – அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்றவை பொதுமக்களுக்காக சில விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
சமூக பொறுப்புணர்வு வளர்த்தல் – தனிப்பட்ட தேவைகளை மட்டுமல்லாமல், ஒரு அமைப்பின் நீண்டகால நலனை சிந்திக்கும் எண்ணத்தை மக்களிடையே வளர்க்க வேண்டும்.
ஒரு சமூகம் ஒழுங்காக இயங்க, அதில் உள்ள ஒவ்வொருவரும் அந்த அமைப்பின் பணியை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மருத்துவமனை rounds முடிந்த பிறகு discharge எழுத வேண்டிய கடமையை வைத்தியர்கள் மட்டுமே அறிந்திருக்கிறார்கள். ஆனால், அதை நோயாளிகளும் புரிந்து கொண்டால், unnecessary delays, unnecessary complaints, unnecessary expectations குறையும்.
அதுபோல், அரசியல், அரசு அலுவல்கள், நீதிமன்றங்கள் போன்ற அமைப்புகளிலும் மக்கள் தங்கள் தேவைகளை மட்டுமே நினைத்தால், அமைப்பு செயலிழந்து விடும்.
ஒரு தனிநபர் பார்வையில், அவர் எதிர்நோக்கும் பிரச்சினையை மட்டும் அவர் பார்க்கிறார். ஆனால், அந்த சூழ்நிலையை முழுமையாக புரிந்து கொள்ளாது, அமைப்பின் இயங்கும் முறையை மாற்ற முயல்கிறார். இதுதான் இன்று நாம் சந்திக்கும் பிரச்சினை.
அதற்காக, நாம் அனைவரும் மாற்றம் அடைய வேண்டிய நேரம் இது