குமார் தர்மசேனா இலங்கையில் தயாரிக்கப்பட்ட பிரெஸ்டிஜ் OUD – A 100% ஆடம்பர வாசனைத் திரவியத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
உலகத் தரம் வாய்ந்த ஆடம்பர வாசனைத் திரவியமான பிரெஸ்டீஜ் OUD, நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது இலங்கையின் ஆடம்பர வாசனைத் திரவிய தயாரிப்பு துறையில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக விளங்குகிறது
புகழ்பெற்ற பிரெஞ்சு வாசனை நிபுணர் டொமினிக் ரோப்பியோனின்(Dominique Ropion) ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட இந்த வாசனைத் திரவியம், முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் நடுவர் குமார் தர்மசேனா தலைமையிலான பிண்டான்னா வுட்( Pintanna Oud) நிறுவனத்தின் புதிய படைப்பாகும். உலகின் முக்கிய வாசனை நிறுவனங்களோடு பணியாற்றிய அனுபவம் கொண்ட ரோப்பியோன், இந்த நிகரில்லா இலங்கை வாசனைக்கு தனது சிறப்பான நிபுணத்துவத்தை வழங்கியுள்ளார்.
பிரெஸ்டிஜ் ஊட்(Prestige OUD) வாசனைத் திரவியமானது அதிநவீன மற்றும் காலத்தால் அழியாத ஒரு சிறந்த வாசனைத் திரவியமாக விளங்குகிறது. இது நிறுவனத்தின் முந்தைய லெகசி மற்றும் எலைட் தொகுப்புகளின் வெற்றியைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த படைப்பாகும்.
இதன் பிரதான அம்சம், முற்றுமுழுவதுமாக இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டதோடு, பிண்டான்னா(Pintanna) தோட்டங்களில் விளைந்த வுட்டினைப்(OUD) பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாகும். இந்த வாசனை இலங்கையை உலகளவில் ஆடம்பர வாசனைத் துறையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“இது வெறும் வாசனை திரவியம் அல்ல – இது ஒரு அனுபவம்,” என தர்மசேனா தெரிவித்தார். மேலும், வாசனைத்திரவிய திருப்புமுனை ஒரு சாதனை என்றும் அதற்காக தனது குழுவினருக்கு நன்றி கூறினார்.
கொள்வனவு செய்யக்கூடிய இடங்கள்:
பிரெஸ்டிஜ் வுட் தற்போது நுகேகொட மற்றும் ராஜகிரியாவில் உள்ள பிண்டான்னா வுட் கடைகளில் மற்றும் ஒன்லைன் www.pintannaoud.lk மூலமாகவும் கிடைக்கிறது.