100% இயற்கையானது.சுற்று சூழலுக்கு எந்த தீங்கும் இல்லை.
தீ பிடிக்காது.தீ விபத்துக்களில் இருந்து உங்களை காப்பாற்றும்.
வெப்ப காலநிலையை தாங்கி குளிர்விக்கும் [யாழ்ப்பாணம் போன்ற வெப்ப பிரதேசங்களுக்கு மிகவும் ஏற்றது]
கட்டுமான செலவு,கட்டிட நிர்மாணத்திற்கான நேரம் குறைவு.
25 ஆண்டுகால அரச சான்றிதழ் பெற்ற செங்கல்
உங்கள் ஆரோக்கியத்திற்கு முழுமையான உத்தரவாதம்.
உங்களை போல் உயிருள்ள சுவாசிக்கும் ஒரு வீடு!
சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மன் லண்டன் தொடக்கம் ஐரோப்பா,அமெரிக்கா கனடா வரை மக்கள் செங்கற்களை கொண்டே வீட்டு கட்டுகிறார்கள்.இலங்கையிலும் யாழ்ப்பணத்திலும் தமிழ் சிங்கள பாரம்பரிய செல்வந்த குடும்பங்கள் இன்னும் செங்கல் ஓடு வீடுகளையே பாரம்பரிய முறைப்படி கட்டி வாழ்கிறார்கள்.
சில கேள்விகள் பதில்கள்
1.செங்கல் வீடு பாதுகாப்பானதா? நீடித்து நிலைக்குமா?
பதில் – 100% உங்களுக்கும் இயற்கைக்கும் பாதுகாப்பானது.யாழில் இன்னும் நூறாண்டுகளை கடந்த செங்கல் வீடுகள் அங்கும் இங்கும் உண்டு.
2.செங்கல் ஊத்தை / Dirt பிடிக்குமா? பார்க்க வடிவாக இருக்குமா? பூசி அழகாக்கி பெயின்ட் அடிக்க முடியாதே?
பதில் – செங்கல்லுக்கு உயிர் உண்டு அது தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும்.ஐரோப்பா கனடா நாடுகளில் உள்ள சொந்தங்களை கேளுங்கள் வெள்ளைக்காரர்கள் சாதாரண செங்கற்களை அப்படியே வைத்து கட்டி அப்படியே விட்டுவிடுவார்கள்.இயற்கையான அப்படியே இருக்கும்.அதுதான் அழகு…வீட்டில நான்கு பெரிய கார்கள் நிற்கும்… பெயின்ட் – முழுமையான இராசயன கலவை,உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு…
3.எல்லோரும் சிமென்ட் வீடுதானே யாழ்ப்பாணத்தில் கட்டுகிறார்கள்?
தங்களை சுற்றியுள்ள படித்த நடுத்தர வர்க்கம் செய்வதை மட்டும்தான் தாமும் செய்ய வேண்டும் என நினைப்பதும் அதை தவிர்த்து புதிதாக ஒன்றை செய்வதை வெட்கமாக பார்ப்பதும் யாழ் தமிழர்களுக்கு உரிய சுபாவம்.ஆனால் செங்கல் வீடுகள் புதிதான ஒன்று இல்லை.இது நாம் இழந்த பாரம்பரியம்.திரும்ப நாம்தான் மீட்க வேண்டும்.
சீமென்ட் இராசயன வீடுகளை கட்டுவது யாழ்ப்பாணம் போன்ற வெப்ப பிரதேசங்களுக்கு இன்னும் வெப்பத்தை கூட்டி விடும். இதனால் வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் கெடும்.வீடுகளை கட்டுவது வீட்டில் வாழதான் ஒழிய வைத்திசாலைக்கு செல்ல அல்ல.
4.சுற்று புற சூழலுக்கு 100% சரியாக இருப்பதால் எமக்கு என்ன பயன்?
பதில் – இயற்கைதான் எம்மை படைத்திருக்கின்றது.அதற்கு உண்மையான அதன் ஒழுங்கில் நாம் வாழ்ந்தால்,இருந்தால் மட்டும்தான் அது எம்மை காப்பாற்றும்,இல்லையென்றால் அதனிடம் இருந்து எங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.இன்று காலநிலை மாற்றம் [Climate change ] உலகிற்கு மிகபெரிய சவாலாகி இருக்கின்றது.உலக தலைவர்களுக்கு மிகபெரிய தலையிடியை கொடுத்திருக்கின்றது.
5.செங்கல் ஓட்டு பாரம்பரிய வீடுகளை எந்த மாதிரி நீங்கள் கட்டி தருவீர்கள்?
முதலில் வீடு கட்டப்படும் காணி வாஸ்து சரியாக கணித்து,வீடு கட்டுபவரின் விருப்பங்களை கேட்டும் அவரின் குடும்பம்,தொழில் என அவரின் இயல்புக்கு முழுமையாக பொருந்தும்படியான மாதிரி வீட்டு கட்டிட நிர்மாண படங்களை தயார் செய்து அதில் வீட்டுகாரருக்கு பிடித்ததை நிர்மாணம் செய்து தருவோம்.
நாம் தமிழ் பாரம்பரிய செங்கல் ஓட்டு வீடுகளை கட்ட கவனத்தில் எடுத்து கொள்பவை..
1.அமைவிடம்,நிலம், நீர் நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் நிலையை கொண்டு அவைக்கு ஏற்ற கட்டிட நிர்மாணம்
2.அறைகள்,சமையலறை,நீர்தாங்கி,வாசல்கள்,ஜன்னல்கள் அமைவிடங்கள் தொடர்பில் விசேட கவனம்.
3.பயன்படுத்தும் செங்கல் பாரம்பரியமாக உருவாக்கப்பட்டதும்,அதன் தரம் அரச சான்றிதழ்கள் மூலம் உறுதிபடுத்தப்பட்டது.
4.வீட்டினுள் போதியளவு சூரிய ஒளி,காற்று,நீர் ஓட கூடியவாறான கட்டிட வடிமைப்பில் கவனம் செலுத்துவோம்.
5.பாரம்பரிய நாற்சதுர [நாற்சார] கட்டிட அமைப்பை இந்த காலத்திற்கு ஏற்ற வகையில் கட்டிட நிர்மாண வடிவமைப்பு செய்து கொள்வோம்.