டொரோண்டோவின் பெரும்பாலான பகுதிகளில் எரிபொருள் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்று முதல் (GTA) எரிபொருட்களின் விலை கணிசமான அளவில் குறையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவில் கார்பன் வரி (carbon tax) இனி அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய பிரதமர் மார்க் கார்னி, கூட்டாட்சி அரசு ஏப்ரலில் இருந்து கார்பன் வரியை நீக்குவதாக அறிவித்தார்.
இதனால் நாடு முழுவதும் எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொரோண்டோவின் பெரும்பாலான பகுதிகளில் எரிபொருள் விலை 20 சதங்களினால் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் எரிபொருள் 1.57 சதங்களிலிருந்து 1.37 சதங்களாக குறைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்பன் வரி நீக்கமானது எரிபொருள் விலைகளில் சாதக மாற்றத்தை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டொரோண்டோவில் எரிபொருள் விலைகள் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் உயர்ந்தும், குறைந்தும் வந்துள்ளன. முக்கியமான காரணங்களில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை மாற்றங்கள், அரசின் வரி கட்டுப்பாடுகள் மற்றும் மாநில அரசின் நடைமுறைகள் அடங்கும்.
2022: உருக்குலைந்த பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து சேவை மீட்டமைப்பு காரணமாக, எரிபொருள் விலை $2.00 வரை உயர்ந்தது.
2023: மந்தமான பொருளாதார வளர்ச்சி காரணமாக விலைகள் சற்றே குறைந்தன, ஆனால் கார்பன் வரி காரணமாக நிலைத்துவிட்டன.
2024: உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் சர்வதேச எண்ணெய் உற்பத்தி கட்டுப்பாடுகள் காரணமாக விலை மீண்டும் உயர்ந்தது.
இந்த மாற்றங்களை கருத்தில் கொண்டபோது, கார்பன் வரி நீக்கப்படுவதால் எரிபொருள் விலை குறைவது மக்களுக்கு நன்மையாக இருக்கும் என கூறலாம். எதிர்காலத்தில், விலை நிலைத்திருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது ஆர்ப்பாட்டத்திற்குரிய கேள்வியாக உள்ளது.