இந்த மண்ணுக்குச் சொந்தமான வெங்காயத்தை.. “சின்ன வெங்காயம்” ஆக்கியது “ஒரு வந்தேறி வெங்காயம்”.
தற்பொழுது “சின்ன வெங்காயம்” என சொல்லப் படுவதுதான் .. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இங்கே “வெங்காயம்” என அழைக்கப் பட்டது.
கொஞ்ச காலத்துக்கு முன்.. பெல்லாரியிலிருந்து அளவில் பெரிதாக இருந்த ஒரு வெங்காயம் வந்து இங்கே கடை விரித்தது. .
தொடக்கத்தில் அது தன்னை “பெல்லாரி வெங்காயம்” என்றுதான் அழைத்துக் கொண்டது.
பிறகு எல்லோரும் தன்னை “பெரிய வெங்காயம்” என்றுதான் அழைக்க வேண்டும் என ஆணையிட்ட து.
அதன்பிறகு.. “வெங்காயம்” என்றால் இங்கே நான்தான் என தனக்குத் தானே பிரகடனம் செய்து கொண்டது.
இந்த மண்ணின் வெங்காயம்.. சின்ன வெங்காயம் ஆகிப் போனது
இந்த வெங்காயத்தைதான்.. பெரியவர் ஒருவர்.. வெங்காயம்.. வெங்காயம்.. எனச் சொல்லிச் சொல்லி இங்கே புகுத்தினார் ,
இங்கே இருந்த சாம்பார் வெங்காயங்களுக்கு அப்பொழுது அது புரியவே இல்லை.
அய்யோ.. எல்லாம் போச்சே.. என இப்பொழுது புலம்பிக் கொண்டிருக்கின்றன.
அந்த “பெரிய” வெங்காயம் இங்கு எல்லோரும் சமம் என்றது , பல பேருக்கு அந்த “பெரிய” வெங்காயம் உணவாகி போனது , சின்ன வெங்காயம் சில பெரியவெங்காயங்களுக்கு மட்டுமே உரித்தான உணவாகி போனது , அதிலும் சில ஆதிக்க வெங்காயங்கள் சின்ன வெங்காயத்தை உணவுல சேர்த்து கொள்வேதே இல்லை.
“பெரிய” வெங்காயம் வந்த பிறகுதான் பல காய்களுக்கும் , கனிகளுக்கும் சுயமரியாதை என்பதே கிடைத்தது.
“பெரிய” வெங்காயம் வந்த பிறகுதான் சந்தைகளுக்கே மரியாதை கிடைத்தது
“பெரிய” வெங்காயம் ஏழை , பணக்காரன் , சாதியில் உயர்ந்தவன் , தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லாமல் இருக்க சொன்னது
கொஞ்ச நாட்களாக சில சில்லறை வெங்காயங்கள் “பெரிய” வெங்காயத்தை குறை சொல்வதை முழு நேர வேலையாய் கொண்டு இருக்கிறது …