சமூக ஊடகங்களில் தனிநபர்களின் அந்தரங்கத்தை வெளிப்படுத்தி, அவர்களை அவமதிக்கின்ற நடவடிக்கைகள் இன்று அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பிரபலங்களின் தனிப்பட்ட தருணங்கள் ஊடகங்களில் வெளியானால், அதை சமூகமே ஒரு கொண்டாட்டமாகக் காணத் தொடங்குகிறது. இது ஒருபுறம் சமூகத்தின் ஒழுக்கத்தை கேள்விக்குட்படுத்தும் ஒரு நிகழ்வாகவும், இன்னொரு புறம் அந்த தனிநபர்களின் உரிமைகளை மீறுவதற்கான வழிவகையாகவும் விளைகிறது. அண்மையில் ஒரு பிரபலம் தொடர்பில் வெளியான காணொளி தொடர்பிலான பதிவொன்று கீழே….
ஒரு சீரியல் நடிகையோட ஆபாச படம் வந்துருக்குனு சோசியல் மீடியால குதூகலத்தோட கொண்டாடி தீக்குறானுக…
புள்ளி வைக்குறதுல சில பொண்ணுங்க கூட பாரபட்சம் பாக்குறதில்ல… அந்த மாதிரி பதிவுகள் ல்ல சிரிச்சு வச்சு நாங்களும் சோசலிசம் ன்னு காட்டிக்க அவ்ளோ தன்முனைப்பு எல்லாருக்கும்…
அவதானே தப்பு பண்ணா, நாங்களா அப்யூஸ் பண்ணோம்? வீடியோ வந்தா ரிலீஸ் தான் பண்ணுவோம்னு ஒரு குரூப்பு வேற குறுக்க மறுக்க ஓடுது…
அவ வீடியோ எடுத்து உனக்கா அனுப்புனா? அவள அசிங்க படுத்த
ஒருத்தன் அத வெளியிட்ருக்கான்… அத அசிங்கம் ன்னு நினைச்சு கூட பாக்காம ஓராயிரம் பேர் ஷேர் பண்றான்…
புள்ளி வீடியோவ ஷேர் பண்றதால ஃபாலோயர்ஸ் ஏறும்னு நினைச்சு, புள்ளி வைங்க வீடியோ அனுப்புறேனு சொல்றதும் ஒருவகை ஆன்லைன் விபச்சாரம் தானே…
ஒன்னு புரியவே இல்ல… ஒரு வீடியோ பாத்துதான் மூட் வரணும்னா லட்ச லட்சமா வீடியோஸ் கொட்டி கிடக்குதே …. அத பாத்தும் காமம் தணியலையா??
.செலிபிரட்டியோ, இல்ல சோசியல் மீடியால தெரிஞ்ச பொண்ணோட வீடியோவோ எவனோ ஒரு கேவலங்கெட்ட ஜென்மத்தால வெளியிடப்பட்டா அத்தனை காமக்கொடூரனுக்கும் திருவிழா எஃபெக்ட் வந்துருது…
பறக்க விடுறானுக… புள்ளி வை ன்றானுக… ஸ்டோரி போடுறானுக… வயசு வித்யாசம் இல்லாம அவன் பிள்ளை வயசு உள்ள பொண்ணோட வீடியோவையும் யாராவது அனுப்புங்களேன்னு பதிவே போடுறானுக…
12 வயசு பெண்குழந்தைய பாலியல் வன்கொடுமை பண்ணி வீடியோ எடுத்த குற்றவாளி கைது ன்னு சொன்னா அவன தூக்குல போடுங்கனு பதிவு செய்யுற அதே ஆள்தான், அந்த வீடியோ லிங்க் சுத்துதுன்னா அப்படி என்னதான் இருக்குனு பாக்க ஓடுறான் ...
இவனுகளுக்கு பாரபட்சம் லாம் இல்ல… மூடாகணும்னு முடிவு பண்ணிட்டா மூளை சாணியா போயிருது இவனுகளுக்கு…
ஒரு செலிப்ரட்டியோட அந்தரங்கத்தை பாத்துட்டா அதிகபட்சமா என்னடா பண்ணிட முடியும்??
ரெண்டு டைம் சுய இன்பம் அடைவிங்களா?? அடுத்ததா என்ன பண்ணுவிங்க??
அத பாத்து உனக்கு தெரிஞ்ச இன்னும் பத்து பேர் சுயஇன்பம் அடையணும்னு அவனுகளுக்கு அனுப்புவிங்க…
50 ரூபாய் வாங்கிட்டு வாய் போடுற பஸ் ஸ்டாண்ட் பாலியல் தொழில் பண்றதுங்களுக்கும், ஃபாலோயர் அதிகமாகும்னு புள்ளி வச்சா வீடியோ வரும், நீங்க சுய இன்பம் அடையலாம்னு மத்தவன் பாலுறுப்பை தூண்டி ஆர்கஸம் அடையுறவனுக்கும் என்ன பெரிய வித்யாசம்???
அவ பாலியல் தொழில் பண்றவளா கூட இருக்கட்டும்டா… அவள அசிங்க படுத்த வீடியோ விட்டவன விட அத எந்த குற்ற உணர்வும் இல்லாம பதிவு போட்டு ஷேர் பண்றவன் கேடு கெட்டவன்….
மொபைல் ங்குற அதிநவீன அரக்கன் நீ பேசுற அத்தனையும் ஒட்டு கேட்டுட்டு தான் இருக்கு…
உனக்கான அந்தரங்கங்களும் கேமரா ஆன் பண்ணாமலே கூட ரெக்கார்ட் ஆகிட்டுதான் இருக்கும்… உன் வீட்ல உள்ளவங்களையும் நினைச்சு பாரு...
ஒழுக்கத்தின் உச்சகட்டத்தில் உள்ள யோக்கியன் லாம் அந்த பொண்ணு தப்பானவதானன்னு சர்டிபிகேட் கொடுக்க வர்றானுக… பிட்டு படம் பாத்து கையடிக்குற நா ய் க்கு பேச்ச பாத்தியான்னு கேக்க தோணுது… ஆனா நாகரீகமா இருக்காது ....
காலம் ஒருநாள் உங்களையும் கன்டென்ட் ஆக்கும்…
தனிநபரின் அந்தரங்க உரிமை
ஒவ்வொரு மனிதனுக்கும் தனிநபர் உரிமை என்பது அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அது எந்த விதத்திலும் மீறப்படக்கூடாது. ஆனால், ஒரு பிரபலத்தின் வீடியோ அல்லது படம் சமூக ஊடகங்களில் வெளியானதும், அது சர்ச்சைக்குரியதாக மாறுகிறது. அந்த வீடியோவை பகிர்வதோடு மட்டும் நிற்காமல், அதனை மீண்டும் மீண்டும் பரப்பி, அவமானப்படுத்தும் செயலில் பலரும் ஈடுபடுகிறார்கள். இது ஒரு வகையில் இணைய வன்முறையாகவே கருதப்படும்.
நாகரிகமற்ற சமூகம்
தொலைக்காட்சிகளில், சமூக ஊடகங்களில், பொது இடங்களில் பெண்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என நாம் பேசுகிறோம். ஆனால், ஒருவரது தனிப்பட்ட தருணங்களை காண வாய்ப்பு கிடைத்தவுடன் அதை பகிர்ந்து கொள்ளும் மனிதர்கள் அதே சமுதாயத்தில் உள்ளவர்களே. இது இரட்டை அளவுகோல் தானே? ஒருவர் தவறு செய்திருந்தால், அதை சட்டத்தின் முன் கொண்டு செல்லலாம். ஆனால், தனிநபர் தரக்குறைவாக சித்தரிக்கப்படுவது அவர்களுக்கே மிகப் பெரிய அவமானம்.
பொது தண்டனை சரியா?
சிலர், “அவர்களே தவறு செய்தார்கள், அவர்கள் இது உண்டாக்கிக்கொண்டதே” என்று கூறலாம். ஆனால், அவர்களின் தவறுக்கான தண்டனை வழங்கவேண்டும் என்பதற்காக அவர்களை அவமதிக்கவும், அவர்களின் வாழ்க்கையை நாசம் செய்யவும் நாம் யார்? ஒரு குற்றவாளி குற்றம் செய்தான் என்றால், அதை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டும்; சமூக ஊடகங்களில் பகிர்ந்து அவமதிக்கவேண்டியது அல்ல.
விளைவுகள் தெரியுமா?
இவ்வாறான வீடியோக்களை பகிர்வதால் பாதிக்கப்படுபவர்கள் மனநிலையை யாரும் சிந்திப்பதில்லை. மன அழுத்தம், சமூக அவமானம், தற்கொலை போன்று பல மோசமான விளைவுகள் ஏற்படலாம். ஒரு தவறான செயலைப் பார்த்து, அதை பரப்பும் நடவடிக்கையே இன்னும் பெரிய குற்றம். இந்த மனநிலையே ஒரு சமூகத்தின் ஒழுக்கத்தையும், அதன் வளர்ச்சியையும் குறைக்கிறது.
தீர்வாக என்ன?
சட்ட நடவடிக்கை: தனிநபர் அந்தரங்கத்தை மீறுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
விவேகமான சமூக ஊடகப் பயணம்: எந்த தகவலையும் பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையும் அதன் விளைவுகளையும் கவனிக்க வேண்டும்.
தனிநபர் உரிமைக்கான மதிப்பு: எந்தத் தவறும் செய்திருந்தாலும், ஒருவர் தனிப்பட்ட முறையில் அவமதிக்கப்பட கூடாது.
நெறிமுறைகளை உருவாக்குதல்: சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
சமூக ஊடகங்களில் தனிநபரின் அந்தரங்கங்களை குலைக்கும் விதமான பதிவுகளை நாம் பரப்புவதும், அதை ஆதரிப்பதும் ஒரு சமூகத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு மனிதரும் மற்றவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். இல்லையேல், ஒருநாள் நாம் அனைவரும் அதே சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் நிலை வரும். எனவே, பொறுப்புணர்வோடு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோம், மற்றவர்களின் வாழ்க்கையை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்போம்.