ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு வாரங்கள் முன்பாகவே இது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐபோன் மற்றும் Mac கணினிகளில் இந்த செயற்கை நுண்ணறிவு (AI) இயக்க முடியும்.
iOS 18.4 மென்பொருள் மேம்படுத்தலின் மூலம், iPhone 15 Pro, iPhone 15 Pro Max, iPhone 16, iPhone 16 Pro, iPhone 16 Pro Max, மற்றும் iPhone 16e போன்ற மாடல்களில் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியும்.நேற்று, மார்ச் 31 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள இம்மென்பொருள், பயனர்களுக்கு மேம்பட்ட நுண்ணறிவு வசதிகளை வழங்குகிறது.
அதேபோல், Mac கணினிகளிலும் இந்த செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. MacOS 18.4 மென்பொருள் மேம்படுத்தலின் மூலம், பயனர்கள் இந்த செயற்கை நுண்ணறிவு வசதிகளை தங்களது கணினிகளில் செயற்படுத்திப் பயன்படுத்தலாம்.
மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்
👉ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாணவர்களுக்கு பல்வேறு வழிகளில் பயனளிக்கிறது:
👉நேரத்தை மிச்சப்படுத்துதல்:
👉படிப்புகள் தொடர்பான தகவல்களை விரைவாகத் தேடித் தருதல்.
👉குறிப்புகளை தானாக உருவாக்கி வழங்குதல்.
👉சரியான தகவல்களை சுலபமாக அணுகுதல்:
👉சிக்கலான பாடங்களை எளிதாக புரிந்துகொள்ள உதவுதல்.
👉மொழிபெயர்ப்பு மற்றும் உரை திருத்த வசதிகள்.
👉உரையாடல் மற்றும் படிப்புத் திறனை மேம்படுத்துதல்:
👉கணினி உதவியுடன் நேரடி வினா-விடை உதவிகள்.
👉AI மூலம் கட்டுரைகள், குறிப்புகள் தயாரிக்க உதவுதல்.
👉பயிற்சிகள் மற்றும் தேர்வு தயாரிப்பு:
👉மெய்ப்பயிற்சி (mock test) மற்றும் சுயபரிசோதனை பயன்பாடுகள்.
தனிப்பட்ட பரிசோதனைத் திட்டங்களை உருவாக்கி பயிற்சி அளித்தல்.
இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் மாணவர்கள் தங்களின் கல்வித் தேவைகளை அடைந்துகொள்ள முடியும். தகவல்களை விரைவாகக் கண்டுபிடிக்கவும், படிக்கும் நேரத்தை வினைத்திறனுடன் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவும், நேரத்தை சிறப்பாக மேலாண்மை செய்யவும் இது பெரிதும் உதவும்.
எதிர்காலத்தில், இதில் ஆப்பிள் நிறுவனம் மேலும் பல மேம்பாடுகளை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.