பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக கடல்பயணங்களை மேற்கொள்ளும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஒருமுறை மீட்புக் குழுவினரால் நடுக்கடலில் அகதிகள் மீட்பு சம்பவம் ஒன்று பிரான்ஸ் கடல் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரான்சில் பா-து-கலே கடல் பிராந்தியத்திலேயே இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதில் பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணித்த 115 அகதிகள் மீற்க்கப்பட்டனர்.
ஏப்ரல் 3 ஆம் திகதி இரவு இந்த மீட்புப்பணி இடம்பெற்றது. Wimereux (Pas-de-Calais) கடற்கரையில் இருந்து அகதிகள் படகு இரண்டு அடுத்தடுத்து புறப்பட்டுள்ளன. முதலாவது படகில் 66 அகதிகள் பயணித்துள்ளனர். இரண்டாவது படகில் 49 பேர் பயணித்துள்ளனர். குறித்த பயணம் பற்றி தகவலறிந்த கடற்படையினர் அப்படகுகளை தடுத்து நிறுத்தி அகதிகளை பாதுகாப்பாக மீட்டனர்.
இவ்வாறு எந்த விதமான பாதுகாப்பு வசதிகளும் இன்றி சிறிய படகுகளில் சட்டவிரோத பயணங்களை மேற்கொண்ட அகதிகளில் கடந்த 2024 ஆம் ஆண்டில் 78 அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.