திருமணங்களின் போது அதிகமாக ஏமாறும் நபர்களாக பிரான்ஸ் தமிழ் இளைஞர்கள் மாறிவருகின்றனர்…தொடர்ச்சியாக திருமண தொடர்புகள்,நிகழ்வுகள்,தொலைதூர காதல்கள் அதிகமாகபாதிப்புள்ளாகும் பட்டியலில் பிரான்ஸ்,பரிஸ் தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர்..
ஏன் பிரான்ஸ் முன்னிலை?
கனடா,சுவிஸ், போன்ற நாடுகளில் அதிகம் அந்தந்த நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம் இருப்பதால் திருமணம்அந்தந்த நாடுகளிலேயே அதிகம் நடைபெறுகின்றது. ஆனால் பிரான்ஸ் தமிழர்கள் இன்னும் ஊரிலிருந்துபெண்ணை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மற்றைய நாடுகளை காட்டிலும் உழைக்கும் வீதமும் குறைவுஎன்பதாலும் திருமண சந்தையில் பிரான்ஸ் மாப்பிள்ளை மதிப்பு குறைவாக இருப்பதாலும் இலகுவாகயாழ்ப்பாண திருமண தரகர்களாலும்,பெண் வீட்டாராலும் பிரான்ஸ் மாப்பிள்ளைகள் இலக்குவைக்கப்படுகின்றனர்.
இதனை தாண்டி பிரான்ஸ் தமிழர்களே உலக தமிழர்களில் அதிக நேரம் டிக்டொக்,பேஸ்புக்கில் நேரத்தைசெலவழிப்பதும் இவ்வாறான வலைவீசும் யுவதிகள் கண்ணில் சிக்கி அழிய காரணம் என சொல்லப்படுகின்றது.
அண்மையில் கூட பிரான்ஸில் இருந்து வந்த மணமகனுக்கும், யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நடந்ததிருமணத்திற்குப் பிறகு, சில நாட்களுக்குள் அப்பெண் வேறொரு ஆணுடன் தலைமறைவாகிவிட்டார்.
குறித்த திருமணம் நடந்த ஒரு வாரத்திற்குள், அப்பெண் மற்றொரு ஆணுடன் தலைமறைவாகிவிட்டார்.இதனால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனராகசொல்லப்படுகின்றது.
திருமணம் முடிந்த சில நாட்களுக்குள் இவ்வாறு நடந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. சிலர்முன்பே அந்த உறவு இருந்திருக்கலாம் என்றும், அல்லது திருமணத்திற்குப் பிறகு ஏதேனும் மனஸ்தாபம்ஏற்பட்டு முன்னால் உறவிடம் சென்றிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.எது எப்படியோ புல தமிழ்மாப்பிள்ளைகளில் குறிப்பிட்ட வீதம் தொடர்ச்சியாக சரியான முறையில் மண பெண்ணை தேர்வு செய்வதில்தவறி வருகின்றமை நீடிக்கின்றது.
இதற்கு அடிப்படை காரணம் புல தமிழர் – தாயக தமிழர் இடையிலான புரிந்துணர்வு இன்மையும்,தீர்க்கமானமுடிவெடுக்காத தனி மனிதர்களின் சந்தர்ப்பவாத குணங்களுமே முக்கிய பங்காற்றுகின்றனர்.