அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகப் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பிரான்ஸ் அரசு கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஆண்டுதோறும் வழங்கப்படும் Prime de rentrée scolaire எனப்படும் கல்விக்கான நுழைவு கொடுப்பனவு, பிள்ளைகளின் கல்வி தொடர்பில் பெற்றோர்களின் செலவுகளை குறைக்கின்ற முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.
Prime de rentrée scolaire: மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு பெரும் உதவி.
பிரான்ஸ் அரசின் கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2025-ஆம் கல்வியாண்டுக்கான Prime de rentrée scolaire தொகை 1.7% அதிகரிக்கப்படுகிறது. இது மாணவர்கள் கல்வியை தொடரும் போது பெற்றோர்களின் செலவுகளை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.
புதிய கல்வி ஆண்டுக்கான இந்த கொடுப்பனவு ஓகஸ்ட் 15 முதல் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அரசின் புள்ளிவிவரங்களின்படி, 3 மில்லியன் பெற்றோர்கள் இந்த உதவித் தொகையை பெறுவதற்காகத் தகுதி பெற்றுள்ளனர். இத்தொகை மாண்வர்களின் வயதிற்கேற்ப 423.48 யூரோ முதல் 462.33 யூரோ வரை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Prime de rentrée scolaire என்றால் என்ன?
Prime de rentrée scolaire (PRS) என்பது CAF (Caisse d’Allocations Familiales) மூலம் வழங்கப்படும் ஒரு நிதி உதவித் திட்டம் ஆகும். இது 6 முதல் 18 வயதிற்குள் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கப்படுகிறது. கல்விச் செலவுகளை ஏற்றுக்கொள்வதை எளிதாக்கும் இந்த நிதியுதவி, குறிப்பாக குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.
Prime de rentrée scolaire பற்றி துண்டுப்பிரசுரத்தில் வெளியான தகவல்கள் கீழே:
லூசியின் சுருக்கம் (Aide-sociale.fr வழங்கியது)
2025 பள்ளி சென்றல் உதவித்தொகை (Allocation de Rentrée Scolaire 2025)
கிட்டத்தட்ட 3 மில்லியன் குடும்பங்கள் பயனடைகின்றன.
பணம் வழங்கப்படும் தேதி
➡ ஓகஸ்ட் நடுப்பகுதியில்
2025 உதவித்தொகை
- 6-10 வயது : 423,48€
- 11-14 வயது : 446,85€
- 15-18 வயது : 462,33€
வருமான வரம்பு
2025 பள்ளி சென்றல் உதவித்தொகைக்கு, 2023 ஆம் ஆண்டின் வருமானம் கணக்கில் கொள்ளப்படும்.
மாணவர்களின் எண்ணிக்கை | வருமான வரம்பு |
---|---|
1 மாணவர் | 28 444€ |
2 மாணவர்கள் | 35 088€ |
3 மாணவர்கள் | 41 732€ |
4 மாணவர்கள் | 48 376€ |
கூடுதல் ஒரு குழந்தைக்கு | +6 564€ |
📌 மேலும் தகவலுக்கு : www.aide-sociale.fr
கொடுப்பனவின் பயன்கள்:
புத்தகங்கள், கைபேசிகள், உடைகள் போன்ற கல்வி தேவைகளுக்கான செலவுகளை நிவர்த்தி செய்ய உதவுகிறது.
பெற்றோர்களின் நிதிச்சுமையை குறைத்து, மாணவர்கள் தங்களது படிப்பில் கவனம் செலுத்த உதவுகிறது.
கல்விக்கான நிதி உதவியை பெறுவதன் மூலம், மாணவர்கள் தரமான கல்வியை உறுதியாக பெற முடியும்.
இந்த கல்விக் கொடுப்பனவை பெறுவதற்கான நிபந்தனைகள்
இந்த உதவித் தொகையை பெறுவதற்கு, பெற்றோர் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
மாணவரின் வயது: 6 முதல் 18 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உதவி பெற்றுக்கொள்ளும் மாணவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர்த்திருக்க வேண்டும்.
வருமான வரம்பு: பெற்றோர்களின் வருமானம் CAF நிர்ணயித்த வரம்பிற்குள் இருக்க வேண்டும்.
உதவித் தொகையை பெறுவதற்கான வருமான வரம்பு பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
CAF (Caisse d’Allocations Familiales) கணக்கு:
பெற்றோர்கள் CAF கணக்கில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பம் தானாகவே மேற்கொள்ளப்படும், சில நேரங்களில் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் தேவைப்படலாம்.
கல்வித் திட்டங்களின் மேலதிக நன்மைகள்
பிரான்ஸ் அரசு வழங்கும் கல்வித் திட்டங்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் உதவுகின்றன:
இலவச அல்லது மானியக் கல்வி: பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அதிகளவிலான மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.
கல்விக் கடன் திட்டங்கள்: மாணவர்கள் படிப்பை தொடர வசதியாக அரசு அனுமதியுடன் குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக் கடன்களை பெற்றுக்கொள்ளலாம்.
பாடசாலை உணவுத் திட்டம்: குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக பள்ளிகளில் மானிய விலையில் மதிய உணவு வழங்கப்படுகிறது.
பேருந்து மற்றும் போக்குவரத்து சலுகைகள்: மாணவர்களுக்கு பொது போக்குவரத்தில் சலுகை வழங்கப்படுகிறது.
Prime de rentrée scolaire போன்ற கல்வி கொடுப்பனவுகள் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய நிதி உதவியாக விளங்குகின்றன. குறிப்பாக, குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் கல்விச் செலவுகளை சமாளிக்கவும், குழந்தைகளின் படிப்பை உறுதி செய்யவும், இந்த திட்டங்கள் பெரிதும் பயனுள்ளதாக உள்ளன.
கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரான்ஸ் அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள், மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளன.