“எங்களிடம் சிறப்பான சீரீஸ் உள்ளன” இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வூட்டும் தொலைக்காட்சித் தொடரான Adolescence தொடருக்கு மறுப்பு தெரிவித்த Élisabeth Borne
பிரித்தானியாவில் உள்ள நடுத்தர வகுப்பு மாணவர்களுக்கு Adolescence எனும் சீரிஸ் திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பிரான்சில் கல்வி அமைச்சர் Élisabeth Borne அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
நான்கு மணிநேர முழுநீளத் தொடரான
Adolescence தற்போது உலகம் முழுவதும் பெரிதும் பார்க்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது. பதின்ம வயதினர் எவ்வாறு மூளைச்சலைவைக்கு(brainwash) உள்ளாகி வாழ்க்கையில் திசைமாறுகிறார்கள் எனும் கதைக்களத்தைக் கொண்டது இந்த சீரிஸ். அதனை பிரித்தானியாவில் உள்ள பாடசாலைகளில் காட்சிப்படுத்த உள்ளனர்.
இதுபோன்று பிரான்சில் காட்சிப்படுத்தப்படுமா எனும் கேள்விக்கு கல்வி அமைச்சர் Élisabeth Borne பதிலளித்துள்ளார். “சமூக ஊடகங்கள், வன்முறை மற்றும் பாலியல் பாகுபாட்டின் அபாயங்கள் குறித்து அனைத்து மாணவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு நல்ல யோசனை; இந்தத் தொடர் அதைத்தான் காட்டுகிறது” என அவர் தெரிவித்தார்.
மேலும், “எங்களிடம் நிறைய கல்வி வளங்கள் உள்ளன. மேலும் இந்த விடயத்தில் ஏற்கனவே வேறு நல்ல பிரெஞ்சு தொடர்கள் உள்ளன.” எனவும் தெரிவித்தார். ஆனால் எந்த ஒரு திரைப்படத்தையோ அல்லது தொலைக்காட்சித் தொடர்ரையோ உதாரணமாக அவர் மேற்கோள் காட்டவில்லை.