பிரெஞ்சு மக்களுக்கு மிக பிடித்தமான நிறுவனம் எனும் பட்டத்தை BIC நிறுவனம் தட்டிச்சென்றுள்ளது. BIC நிறுவனத்தின் உற்பத்திகள் பல ஆண்டுகளாக மக்களுக்கு பிடித்த பொருளாக இருக்கின்றன.
குறிப்பாக, ஷேவிங் செய்யப் பயன்படுத்தப்படும் ரேசர் ப்ளேடுகள், உலகம் முழுவதும் ‘பிக் ரேசர்’ எனும் பெயரிலேயே அறியப்படும் அளவுக்கு பிரபலமாகியுள்ளன.
இதன் தரமும் நிலைத்தன்மையும் காரணமாக, பலரின் அன்றாடப் பயன்பாட்டின் ஒரு பகுதியாகவே மாறியுள்ளன.
BIC நிறுவனத்தின் நீலம் மற்றும் சிவப்பு மைக்குகளைக் கொண்ட கூர்மாத்தி பேனைகள் மற்றும் நான்கு கூர்மாத்திகளைக் கொண்ட பேனைகள் சிறுவயதிலிருந்தே அனைவரின் கவனத்தைப் பெற்றுள்ளன.
இவை எழுதுதல் மட்டும் அல்லாது, விளையாட்டுப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அதன் எளிமையான வடிவமைப்பு, நீண்ட கால பயன்பாடு, மதிப்புக்குரிய விலை ஆகியவை காரணமாக, BIC உலக அளவில் அறியப்படும் பிராண்ட் ஆகும்.
BIC நிறுவனம் முதன்முறையாக ‘பிரான்சின் பிடித்தமான உற்பத்தி நிறுவனம்’ («Marque Préférée des Français») என்ற பெருமைமிக்க பட்டத்தை வென்றுள்ளது.
இது பிரான்சில் 1,300-க்கும் மேற்பட்ட உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்டு, 4,900 பேரின் கருத்துகளை மதிப்பீடு செய்து வழங்கப்பட்டது.
இதில் அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்கு தள்ளி, BIC முன்னிலைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாது, இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் SAMSUNG, மூன்றாவது இடத்தில் Bonne Maman (உணவு உற்பத்தியாளர்),
நான்காவது இடத்தில் Barilla (பாஸ்தா உற்பத்தியாளர்) மற்றும் ஐந்தாவது இடத்தில் St Michel (பேக்கரி தயாரிப்புகள்) ஆகியன இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலானது, பிரான்சின் உற்பத்தி உலகில் மிக முக்கியமான மற்றும் விருப்பமான பிராண்டுகளை வெளிப்படுத்துகின்றது.
BIC நிறுவனத்தின் வெற்றிகள், அதன் தரம், நிலைத்தன்மை மற்றும் கலைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கும் பயன்பாடுகளை நிரூபிக்கின்றன.
உலகம் முழுவதும், BIC நிறுவனம் அதன் சாதனைகளை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டு செல்கிறது.
பட்டியலில் இடம்பெற்ற நிறுவனங்கள் கீழே
Top 30 Marques
BIC
Samsung
Bonne Maman
Barilla
St Michel
Lu
La Laitière
Côte d’Or
Moulinex
Lindt
Panzani
Amora
Cristaline
Tefal
Amazon