பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் முந்தைய அரசின் திட்டத்தை ரத்து செய்வேன்.
என்று வாக்குறுதி அளித்து, அதை நடைமுறைப்படுத்திய கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, தற்போது புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் முந்தைய அரசின் திட்டம்:
முன்னாள் கன்சர்வேட்டிவ் அரசு, சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை
ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடுகடத்தி, அவர்களின் கோரிக்கைகளை அந்நாட்டில் பரிசீலிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தது.
ஸ்டார்மர் அரசின் புதிய திட்டம்:
கெய்ர் ஸ்டார்மர், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ருவாண்டா நாடுகடத்தல் திட்டத்தை ரத்து செய்தாலும்,
புகலிடக்கோரிக்கையாளர்களை கையாள்வதற்கு புதிய முறையை அமல்படுத்த தேவையான நடைமுறைகளை தற்போது முன்னெடுத்துள்ளார்.
புகலிடக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, மேல் முறையீடுகளும் தோல்வியடைந்தால், அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் மேற்கத்திய பால்கன் நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
இந்த நாடுகளில் அல்பேனியா, செர்பியா மற்றும் போஸ்னியா ஆகியவை அடங்கும்.
பாதுகாப்பான நாடுகளிலிருந்து வந்தவர்கள் என கருதப்படுவோர், அந்நாடுகளில் இருந்து மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தப்படுவார்கள்.
திட்டத்தின் அமல்படுத்தல்:
இந்த புதிய திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
இத்திட்டம் தொடர்பான விவாதங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் தற்போது பிரித்தானியாவில் சூடுபிடித்துள்ளன.