மகன் மூலம் கிடைத்த அதிர்ஷ்டம்: 4 மாதங்களாக கவனிக்காமல் இருந்த லொட்டரி சீட்டில் கோடீஸ்வரன் ஆன நபர்!
இங்கிலாந்தைச் சேர்ந்த 44 வயதுடைய டேரன் பர்ஃபிட் என்பவர், அவரது அதிஷ்டம் தனது காருக்குள்ளேயே இருப்பதை கவனிக்காமல் இருந்துள்ளார். அவரது அந்த அதிஷ்டத்தை கண்டுபிடித்தபோது 1 மில்லியன் பவுண்டுகள் (₹11 கோடிக்கு மேல்) அவருக்கு சொந்தமானது.
4 மாதங்களாக கவனிக்காமல் இருந்த லொட்டரி சீட்டு
ஸ்வான்சியாவைச் சேர்ந்த டேரன், லாங்லேண்ட் பே கோல்ஃப் கிளப்பில் பராமரிப்பாளராக வேலை செய்கிறார். லொட்டரி சீட்டுக்களை வாங்குவது அவரது வாடிக்கையான பழக்கமாக இருந்து வந்துள்ளது. அவ்வாறு அவர் வாங்கும் லாட்டரி சீட்டுக்களை தனது காருக்குள்ளேயே சேகரித்து வைத்துக்கொள்வார் வேலைப்பளு காரணமாக அவற்றின் அதிஷ்ட்டம் எப்படி என்பதை சோதிக்க மறந்துவிடுவதும் வழக்கம் தான் அவ்வாறு அவர் 4 மாதங்களுக்கு முன்பு வாங்கிய லொட்டரி சீட்டின் மூலமே அவருக்கு இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளது.
மகனின் கோரிக்கையால் கிடைத்த அதிர்ஷ்டம்
ஒருநாள், அவரின் 4 வயது மகன் சிற்றுண்டிக்கு சிப்ஸ் கேட்டார். புதிய பக்கெட்டை திறக்க விரும்பாத டேரன், முன்பு பயன்படுத்தியுள்ள ஒரு பக்கெட் காரில் இருப்பது ஞாபகம் வர அதை எடுத்து வருவதற்காக காரைத் திறந்துள்ளார்.
அப்போது, காரில் இருந்த பழைய லொட்டரி சீட்டுகளையும் எடுத்து அவற்றின் அதிஷ்டத்தை சரிபார்க்கலாம் என எண்ணினார். அதைப் பார்த்தபோது தான் அதிர்ச்சி காத்திருந்தது; அந்த லொட்டரி சீட்டில் 1 மில்லியன் பவுண்டுகள் பரிசாக விழுந்திருந்தது.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி அவர் தனது கருத்தை பகிர்ந்து கொள்கையில் “என்னால் அதை முதலில் நம்ப முடியவில்லை. இப்போதும் நம்ப முடியவில்லை!” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
இந்த சம்பவம், அதிர்ஷ்டம் எப்போது, எங்கே, எப்படி வருமென்பது யாருக்கும் தெரியாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது!