படம் தொடங்கியதிலிருந்தே, ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ரசிகர்களை நகைச்சுவையால் ரசிக்க வைத்திருப்பது, இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி.
இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதால் கதையின் கோர்வை அறிந்திருந்தாலும், காட்சிகளின் நடைமுறை மற்றும் வசனங்களின் நேர்த்தி படத்தை நகைச்சுவையின் உச்சக்கட்டத்துக்கு அழைத்துச் செல்கின்றன.
கதை சொப்பனத்தில் அலசுவதற்கான ஒரு சவாலான நிலையில் அமைகிறது. ஆணுறுப்பின் எழுச்சியுடன் இறந்துவிடும் ஒரு வயதான மனிதர், அவரது குடும்பத்தினர் இந்த உண்மையை மறைத்து அவரை எவ்வாறு நல்லடக்கம் செய்கிறார்கள் என்பதே இதன் மையக்கரு.
இந்த கச்சிதமான கருத்தில் அடல்ட் காமெடியாக உண்மையிலேயே வெற்றிகரமாக மாற்றியது, படக்குழுவின் திறமையை வெளிப்படுத்துகிறது.
ஒவ்வொரு காட்சியும் நகைச்சுவையில் நயமுடன், நேர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர்களின் சிறப்பான தோற்ற அமைப்பு, நேர்த்தியான முகபாவனைகள், சரியான நேரத்தில் வருகிற டயலாக்கள் அனைத்தும் படத்தின் துள்ளலான மனோபாவத்தை மேம்படுத்துகின்றன.
குறிப்பாக, மருமகள்களின் பார்வையில் வெளிப்படும் நகைச்சுவை ரசனைகள் அழகாக விளக்கப்பட்டுள்ளன. சந்தினி தமிழரசன் தனது முகபாவனைகளின் மூலமாக அந்த நொடிகளை சரியாக உணர்த்துகிறார்.
“என் புருஷன் குச்சியை வச்சு குழந்தைகளை அடிக்க மட்டும்தான் லாயக்கு” என்று சொல்வதிலும், “இந்த பால் கூட கொஞ்சம் லேட்டா பொங்கும்,
ஆனா என் புருஷன்!” என்று சொல்லும் மருமகள்களின் சர்ச்சையான பதில்கள், அடல்ட் காமெடியின் உச்சத்தில் இருப்பவை. இதன் மூலம் படத்தை பெருசுகள் ரசிக்கும்படியாக மாற்றியமைத்திருக்கிறார்கள்.
இளங்கோ ராம் தனது திறமையால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நுட்பமாக வடிவமைத்து, அடல்ட் காமெடியின் அடிப்படைகளை சரியாக கையாள்வது பெருமைக்கு உரியது.
இது குழந்தைகளுக்குப் பொருத்தமற்றதுதான், ஆனால் வயத்துவந்தவர்கள் வாய்விட்டு சிரித்து பார்க்க தரமான படம்.
திரையரங்கில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பெருசு’ படத்தை வயத்துவந்தவர்களும், நகைச்சுவையை புரிந்துகொள்வோரும் தவறாமல் பாருங்கள்!