Seine-Saint-Denis: பாரிஸ் புறநகர் பகுதி ஒன்றில் வைத்து தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸ் காவல்துறையால்கைது செய்யப்பட்டுள்ளார். பூபாலசிங்கம் பிரதீபன் என்ற 27 வயது யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டஇளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
காதல்/ குடும்ப தகராறு காரணமாக அண்மையில் தமிழ் பெண் ஒருவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்சம்பவத்தின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது.குற்றத்தில் இவருக்கு உதவியதாகஅல்ஜீரிய நாட்டு இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.
குடும்ப/காநல் தகராறால் வந்த மோதலில் இவரால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் செய்த முறைபாடுகளைஅடுத்தே கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,முறையான வதிவிட அனுமதி எதுவுமில்லாத ஒருவர் என்றும்கூறப்படுகின்றது.இவர் மீது முறைப்பாடளித்த பெண்ணின் குற்றசாட்டில் இவர் தன்னை சில அல்ஜீரியர்களைகூலிக்கு அமர்த்தி கொலை செய்ய முயற்சித்தாக முறைபாடு கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.