Modal title

Copyright © Newspaper Theme.

Kuruvi

215 Articles written
பிரான்ஸ்

பாரிஸ் தமிழர்களின் மனதை தொட்டு கண்ணீர் விட வைத்த சம்பவம்!

பாரிஸில் வெளியான ஒரு தமிழ் படத்தை பார்த்து இங்கு வாழும் மூத்த தமிழ் மக்காள் கண்ணீர் சிந்திய சம்பவம்இடம்பெற்றுள்ளது..அப்படி என்ன அந்த படம்?  டூரிஸ்ட் பேமிலி என்ற தமிழ் படம்தான்.. எத்தனையோ படங்கள்இதுவரை பாரிஸ் வந்திருக்கின்றன..ஆனால் எதுவும் சொல்லிகொள்ளும்படி மனதை தொடவில்லை. ஆனால்இந்த படம் ஈழதமிழரின் இதயத்தை தொட்டிருக்கின்றது என்பதற்கு பாரிஸ் மூத்த தமிழ் குடிகளின் கண்ணீரேசாட்சி! நீங்களும் கட்டாயம் பாருங்கள்!  தற்செயலாக..வோ  அல்லது இறைவன் அழைப்போ தெரியவில்லை..இப் படத்தை பாரிஸ் திரையரங்கில்குடும்பமாக பார்க்க முடிந்தது.எனது நாற்பத்தியொரு ஆண்டு கால  புலம்பெயர்ந்த வாழ்வில்,  எமது ஈழத்தமிழ் மக்களின் மனங்களை  மகிழ்வால் நிறைத்து.. சிரித்து..  நாமெல்லோரும் இணைந்து கொண்டாடும் வகையில் ஒரு ஆத்மசாந்தியான ஒரு அழகான மனிதர்களோடுஅமைந்த இக்காவியத்தை எமக்களித்த  அனைத்து அன்பின் உள்ளங்களுக்கும் எமது  ஈழத்தமிழன்பு நிறை நன்றிகள். அன்பினால் மட்டுமே இணைந்தால்..  இன்பமே யாவருக்கும் என்பது மூத்தோர் வாக்கு.  உண்மை தான். இவ்வளவு காலமும் அகதிகளாக இருப்பவர்களை ஏளனமாக பார்க்க வைத்த காலத்தைஇப்போது இப்படி ஒரு படத்தை ஏற்று  தன்  நடிப்பால் இவர்களும் வாழவந்த மனிதர்கள்தான் என்பதை தன்நடிப்பால் என்பவர்களை திரும்ப பார்க்கவைத்துள்ளது இப்படம்.  இப்போது நம்மவர்கள் இந்த படத்தின் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார்கள். நேரம் கிடைக்கும் பொழுதுபார்த்து மகிழுங்கள். அதேவேளையில் சில இடங்களில்  கண்ணீரை துடைக்க வேண்டும் என்றுநினைக்கின்றேன். இப்படத்துக்கு நாம் கொடுக்கும் பாரிய அளவிலான ஒத்துழைப்பு அவர்களுக்கு மனம்மகிழ்ந்து கொடுக்கும் நன்றி. நான் பார்த்த திரையரங்குகளில் மண்டபம் நிறைந்த ரசிகர்கள். கதை  பல முறை பார்த்ததுதான். ஒரு குடியிருப்புப் பகுதிக்குப் புதிதாக வருகிற ஒருவன் படிப்படியாகஅனைத்துக் குடும்பங்களிலும் தங்களில் ஒருவனாக ஏற்கப்படுகிறான். கதாபாத்திரங்கள் பல படங்களில் வந்திருப்பவர்கள்தான். பல வீடுகளிலும் பல வகை மனிதர்கள்.ஆனாலும்புத்தம் புதிய திரையனுபவத்தைத் தருகிறது இந்த சுற்றுலாக் குடும்பம். அந்தக் குடும்பமே குடியிருப்புவாசிகளின்நேசத்தை வெல்வதும் புதுசுதான். உள்நாட்டுப் படுகொலைச் சூழலில் அடைக்கலம் தேடி வந்தவர்கள், பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில்வாய்ப்புகளுக்காக வந்தவர்கள் - இருவர்க்குமிடையே பெரும் வேறுபாடு உண்டு. “கள்ளத்தோணி” பயணத்தில்வந்தது மட்டுமே ஒற்றுமை. முதல் காரணத்திற்காக வந்தவர்களைப் போல இரண்டாவது காரணத்திற்காகவந்தவர்கள் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை, ஆதரவைப் பெறுவதில்லை. இலங்கையின் வல்வெட்டித்துறையிலிருந்து இரண்டாவது காரணத்திற்காக ராமேஸ்வரம் வரும் தர்மதாஸ் - வசந்தி குடும்பத்திற்குத் தொடக்கத்திலிருந்தே, கைது செய்யாமல் விட்டுவிடுகிற காவல்துறை அதிகாரியில்தொடங்கி, சென்னையில் குடியேறும் பகுதியில் வாழ்கிறவர்கள் வரையில் ஆதரவு கிடைக்கிறது. இப்படித்தான் முடியும் என்று ஊகிப்பது போலவே முடிவடைகிற படங்கள் ஒரு அலுப்பையும் ஏமாற்றத்தையும்தரும். ஊகிப்பது போலவே முடிவடைகிற இந்தப் படம் ஒரு வியப்பையும் நிறைவையும் தருகிறது. ஊகித்தமுடிவை நோக்கிக் கதை எப்படி நகர்கிறது பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பைத் தருகிறது. எப்படி? ஒரு குண்டுவெடிப்போடு அந்தக் குடும்பத்தைத் தொடர்புபடுத்தித் தேடலைத் தொடங்கும் காவல்துறையினர்அவர்களை நெருங்க நெருங்க ஒரு புதிர்ச்சுவை இணைகிறது. நாட்டைவிட்டுப் புலம் பெயர வேண்டிய நிலைமைக்கு உள்ளான குடும்பத்தின் பின்னணியை, கட்டாயச்சூழலைத் தொட்டுக்காட்டவும் முயலவில்லை. திரைக்கதையில் அதற்கான மெனக்கிடல்களுக்குஇடமளிக்கப்படவில்லை. எல்லாமே எளிதாக நடக்கின்றன. ஆகவே அவர்களோடு ஓர் உணர்வார்ந்த ஈடுபாடுஏற்படுவதற்கு அதிகக் காட்சிகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. இரண்டாவது காரணத்திற்காக, வந்தவர்களை எடுத்துக்கொண்டதால் கதையைப் பின்னுவதற்குநகைச்சுவையை இழையாக்கியிருப்பது பொருந்துகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாய்விட்டு, மனம்பிடித்துச் சிரிக்க முடிகிற படமாக வந்திருக்கிறது. சசிகுமார் இப்படிப்பட்ட படங்களில்தான் நடிப்பதென்று முடிவு செய்துவிட்டாரா, அல்லது இப்படிப்பட்டபடங்களுக்கு அவரைப் பிடித்துப்போடுகிறார்களா? இணையராக சிம்ரன், மச்சானாக யோகிபாபு, மகன்களாகவரும் மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், அண்டை வீட்டார்களாக வாழும் எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா, பகவதி, ஆய்வாளர் ரமேஷ் திலக் என அனைவரும் ஈர்க்கிறார்கள். அவர்களில் சிலரின் தனிக் கதைகள்சேர்த்துக் கோர்க்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கதைகள் வெகுதொலைவு விலக்கிவிடவில்லை. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு, சீன் ரோல்டன் இசையமைப்பு, பரத் விக்கிரமன் படத்தொகுப்பு எல்லாமேஇளையோரின் கலைத்தொழில் முதிர்ச்சிக்குச் சான்றளிக்கின்றன. புதிய முயற்சிக்குத் துணைசெய்த மில்லியன்டாலர் தயாரிப்புக் குழுமம் பாராட்டுக்குரியது. அந்தத் துணையை நியாயமான முறையில் பயன்படுத்தியிருக்கும்புதிய இயக்குநர் அபிசந்த் ஜீவிந்த் வரவேற்புக்குரியவர். குடியிருப்புவாசிகள் எல்லோரும் இலங்கைத் தமிழ் பேசுவதை விசாரணைக்கு உட்படுத்தும் காவல்துறைஅதிகாரியிடம், “இந்தத் தமிழ் பேசுறதுதான் உங்களுக்குப் பிரச்சினையா, இல்லை தமிழ் பேசுறதேபிரச்சினையா,” என்று அந்தப் பெரியவர் கேட்பதில் என்னவொரு சமகால மொழித்திணிப்பு அரசியல் விமர்சனம்! படம் பற்றிய எல்லா விமர்சனங்களிலும் சரியாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிற காட்சி இது.  மற்றொரு கேள்விதான் மையக்கரு. அதற்கான தேவையை உணர்த்தும் வகையில், அந்தக் குடும்பம்ஒதுக்கப்படுவது போன்ற காட்சிகளோ வசனங்களோ இல்லாதது ஒரு பெருங்குறை. இருந்தபோதிலும்சிந்தனையில் பதிகிற கேள்வி அது: “யார் சொன்னது, நீ அகதின்னு?” யார் சொன்னது, தமிழ் சினிமா உலகத் தரத்திற்குப் போகாதுன்னு??? 

லாச்சப்பல் கைது! திருப்பி அனுப்ப தீவிரம்!

பாரிஸ், மே 14, 2025 – பாரிஸ்  ரயில் நிலையம் (Gare du Nord) அருகே  நடந்த கத்தி குத்து சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் கொடுக்க மறுத்ததற்காக தான் ஒருவர் தாக்கப்பட்டதாக பொலிஸ்தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்ஜீரியாவை சேர்ந்த 34 வயதான சைத் இந்த சம்பவத்தில் கொலைமுயற்சி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பிரான்ஸுக்கு வந்த இவர், திருப்பி அனுப்பும் உத்தரவு (OQTF) கீழ் தற்போது வசித்து வருகிறார். நிரந்தர முகவரி ஏதுமின்றி கட்டட வேலைகள் மற்றும் சந்தை வேலைகள்மூலம் தனது வாழ்வை நடத்தி வந்தவர். நான் சண்டையிடுவோரை பிரித்தேன். நான் நிரபராதி. ஒருவரையும் காயப்படுத்தவில்லை. வேலை தேடி தானேவந்துள்ளேன்,என கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸ் விசாரணை நீதிமன்றத்தில் சைத் வாதிட்டார் சம்பவம் எப்படி நடந்தது? ஏப்ரல் 25 அன்று நள்ளிரவு கடந்த பிறகு, Faubourg-Saint-Denis தெருவின் மூலையில் அல்ஜீரியாவைச் சேர்ந்தஒருவர் கத்தியால் மூன்று முறை மார்பில் குத்தப்பட்டு கிடந்தார். சம்பவத்தை அவரது நண்பர் நேரில் பார்த்துஉடனடியாக காவல்துறையை அழைத்தார். போலீசார் CCTV காட்சிகளை பயன்படுத்தி La Chapelle பகுதியில் உள்ள Philippe-de-Girard தெருவில் உள்ள ஒரு பேக்கரிக்கு முன்னால் சைத்-ஐ கண்டுபிடித்து கைது செய்தனர். சம்பவ இடத்திலேயே கத்தியும்மீட்கப்பட்டுள்ளது. அது தற்போது DNA பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் நிரூபிக்கபடாவிடினும்இவர் நாட்டுக்கு திரும்பி அனுப்பபடுவார் என தெரிகின்றது.கடந்த சில வருடங்களாக சமூக குற்றங்கள் அதிகளவில் இவர்கள் மூலமே நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. இந்தச் சம்பவம், public safety in Paris, immigration law France, மற்றும் legal aid for asylum seekers...

பிரான்ஸ்: மெட்ரோவில் அபராதம்! தமிழர்கள் அவதானம்!

பிரான்ஸ்: மெட்ரோ பயணிகள் மீது தவறுதலாக அபராதம் அடிக்கடி விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மெட்ரோவில் செடி எடுத்துச் சென்றது, ட்ராமில் கான்ட்ராபாஸ் கொண்டு சென்றது, ஏற்கனவே திறந்திருந்தகேட்டை கடந்தது, போன்றவற்றிற்காக அபராதம் விதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர். காரே-டி-லியோன் நிலையத்தில்,மெட்ரோ லைன் 1-ன் நுழைவு கேட் திறந்திருந்தது. வேலைநிறுத்தம்நடப்பதால் கேட் திறந்திருக்கிறது என்று நினைத்து,  நவிகோ ஈஸி பாஸை பதிவு செய்யாமல் கடந்த  40 வயதுமேரி , சில மீட்டர்கள் தாண்டியவுடன், கட்டுப்பாட்டாளர்கள் தடுத்தனர்..   நெடுஞ்சாலை கட்டணச் சாவடியில் அதைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை காவல்துறை காத்திருந்துஅபராதம் விதிப்பது போல இருந்தது என்று கூறப்படுகின்றது.  கட்டுப்பாட்டாளர், குறித்த பெண்ணின் நேர்மையான விளக்கங்களை பொருட்படுத்தாமல், 35 யூரோக்கள்உடனடியாக அல்லது பின்னர் 65 யூரோக்கள் என்று அபராதம் விதித்தார். குறித்த பெண் உடனடியாகஅபராதத்தை செலுத்திவிட்டு கத்தி கொண்டு சென்றுள்ளார்..

பாரிசில் யாழ் பல்கலைகழக பொன் விழா!

யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்ழா பரிஸ் நகரில், பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  எதிர்வரும் யூன் மாதம் 08ஆம் திகதி, பரிஸ்  இன் புற நகர் பகுதியான Villeneuve  Saint- Georges எனும்...
சிறப்பு கட்டுரை
Kuruvi

பிரான்ஸில் இந்த தொழில் மூலம் பணத்தை அள்ளும் ஈழதமிழர்கள்!

## பிரான்சில் முதலீட்டு வாடகை சொத்து மூலம் வெற்றிகரமான உத்தியுடன் உங்கள் செல்வத்தைஉறுதிப்படுத்தவும் முதலீட்டு இருப்பிடம் அல்லது வாடகை சொத்து முதலீடு, பிரான்சில் செல்வத்தை கட்டியெழுப்புவதற்கான ஒருமூலக்கல்லாகும். இது நிலையான வாடகை வருமானம் மற்றும் நீண்ட கால சொத்து மதிப்பீட்டை வழங்குகிறது. இந்தக் கட்டுரை, பிரெஞ்சு வாடகை சொத்து சந்தையில் முக்கிய போக்குகள், முக்கியமான வரி பரிசீலனைகள்மற்றும் நிரூபிக்கப்பட்ட வாடகை மேலாண்மை உத்திகள் ஆகியவற்றை ஆராய்கிறது. **பிரெஞ்சு வாடகை சந்தை: தற்போதைய இயக்கவியல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள்** **குறைந்த வட்டி விகித சூழல்:** வரலாற்று ரீதியாக குறைந்த வட்டி விகிதங்கள் அடமானக் கடன்களுக்கானஅணுகலை எளிதாக்குகின்றன, முதலீட்டாளர்களை கவனமுள்ள முதலீட்டாளர்களுக்கு மிகவும்கவர்ச்சிகரமானதாக மாற்றுகிறது. ** நிலையான வாடகை தேவை மற்றும் நேர்மறையான பார்வை:** பல பிரெஞ்சு நகரங்களில் வாடகைவீடுகளுக்கான தேவை வலுவாக உள்ளது, இது உங்கள் சொத்துக்கான உயர் கேள்வி விகிதத்திற்குஉத்தரவாதம் அளிக்கிறது மற்றும் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. படிப்படியான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வாடகை அதிகரிப்பு: வாடகைகளில் படிப்படியான மற்றும்கட்டுப்படுத்தப்பட்ட அதிகரிப்பு பெரும்பாலான பிரெஞ்சு நகரங்களில் காணப்படுகிறது, இது உங்கள் முதலீட்டுஇடத்தின் லாபத்தை மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் குத்தகைதாரர்களுக்கு நிர்வகிக்கப்படுகிறது. **உங்கள் வாடகை முதலீட்டிற்கான வரி மேம்படுத்தல்** **இலகு வரி மேம்படுத்துதல் திட்டங்கள்:** Pinel அல்லது LMNP போன்ற திட்டங்கள், வரம்புக்குட்பட்டவிலையில் வாடகைக்கு அல்லது பொருத்தப்பட்ட சுற்றுலா விடுதிகளின் வாடகை வருமானத்திற்கு ஈடாக வரிக்குறைப்புகளை வழங்குகின்றன. உங்கள் செல்வச் சூழலுக்கு மிகவும் பொருத்தமான திட்டத்தைத் தேர்வுசெய்ய  கணக்காளரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியமானது. ** மூலோபாய வரி விலக்குகள்:** வாடகை வருமானம் IRF (ரியல் எஸ்டேட் மீதான வருமான வரி)க்குஉட்பட்டது; இருப்பினும், சொத்து தொடர்பான செலவுகளுக்கான விலக்குகள் (வேலைகள், கடன் வட்டி) உங்கள் வரிச்சுமையை மேம்படுத்த உங்களை அனுமதிக்கிறது. ** தொழில்முறை வாடகை மேலாண்மை: உங்கள் சொத்தின் லாபத்தை அதிகரிக்கவும்** ** அனுபவம் வாய்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் நிர்வாகத்தை ஒப்படைத்தல்:** ஒரு திறமையான ரியல்எஸ்டேட் நிறுவனம்  குத்தகைதாரர்களைக் கண்டறிவது, வாடகை ஒப்பந்தங்களை வரைவது மற்றும்கண்காணிப்பது, உரிமைகோரல்களை நிர்வகித்தல் மற்றும் வாடகை வசூலித்தல் ஆகியவற்றைக் வெற்றிகரமாககையாள முடியும். **கடுமையான குத்தகைதாரர் தேர்வு: மன அமைதிக்கான உத்தரவாதம்:** நிதி உத்தரவாதங்கள் மற்றும்உறுதியான குறிப்புகளின் அடிப்படையில் கடுமையான தேர்வு செயல்முறை செலுத்தப்படாத வாடகை மற்றும்சொத்து சேதத்தின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. **தடுப்பு பராமரிப்பு மற்றும் சொத்து மேம்பாடு:** வழக்கமான பராமரிப்பு மற்றும் இலக்கு சீரமைப்பு பணிகள்உங்கள் வாடகை சொத்தின் மதிப்பைப் பாதுகாக்கவும், நல்ல குத்தகைதாரர்களை ஈர்க்கவும் மற்றும்தக்கவைக்கவும் உதவுகின்றன. **முக்கிய குறிப்புகள்** * இது பிரான்சில் செல்வத்தை உருவாக்க நிலையான மற்றும் லாபகரமான வழியை வழங்குகிறது. * சந்தைப் போக்குகள், வரி பரிசீலனைகள் மற்றும் பயனுள்ள வாடகை மேலாண்மை உத்திகள் ஆகியவற்றைப்புரிந்துகொள்வது வெற்றிக்கு முக்கியமானது. * அனுபவம் வாய்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும் உங்கள் முதலீட்டுவருமானத்தை அதிகரிக்கவும் உதவும். இந்த நுண்ணறிவுகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் பிரெஞ்சு வாடகைச் சொத்துச் சந்தையை திறம்படவழிநடத்தலாம் மற்றும் உங்களின் நீண்ட கால செல்வத்தைக் கட்டியெழுப்பும் இலக்குகளை அடையலாம்.
Kuruvi

காரில் எரிந்த நிலையில் புலம்பெயர் ஈழதமிழர் சடலம் மீட்பு!

காரில் எரிந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்ப்பு .; நேர்வேயில் துயரம் ! இரண்டு பிள்ளைகளின் தந்தை காரில் இருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது அந் நாட்டில்...
Kuruvi

பிரான்ஸ் சமூக HLM வீடுகள் தொடர்பில் அரசு புதிய அறிவிப்பு

பிரான்ஸ் இன்டர் வானொலியில் பேசிய வீடமைப்புத்துறை அமைச்சர், சமூக வாடகை வீடுகளுக்கான தகுதிநிர்ணயத்தில் வருமானத்திற்கு கூடுதலாக சொத்துக்களையும் கருத்தில் கொள்ளும் புதிய திட்டத்தைஅறிவித்துள்ளார். இது சமூக நீதிக்கான முன்னேற்றமாக அமைச்சர் கருதுகிறார்.  தற்போது சுமார் 55 லட்சம் சமூக வாடகை வீடுகள் இருக்கும் நிலையில், 20 லட்சம் விண்ணப்பதாரர்கள்காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, வாடகைதாரர்களின் தகுதியை முடிவுசெய்வதற்கு வருமானத்துடன் சொத்து மதிப்பீட்டையும் இணைப்பதன் மூலம் சமூக வாடகை வீடுகளைஉண்மையிலேயே தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய இத்திட்டம் உதவும்.  நாட்டுப்புற வீடு அல்லது குடும்ப சொத்து வைத்திருக்கும் சில வாடகைதாரர்கள் உண்மையில் சமூக வாடகைவீடுகளுக்கு தகுதி பெற்றிருக்காமல் இருக்கலாம் என சுட்டிக்காட்டிய அமைச்சர், சமூக வீட்டு உரிமையாளர்கள்இனி வாடகைதாரர்களின் சொத்துக்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்டோர் சமூக வாடகை வீடுகளுக்கான தகுதியைகொண்டிருப்பதால், இது ஒரு நல்ல நிர்வாக நடவடிக்கை என அவர் கருத்து தெரிவித்தார். அதிகப்படியான சொத்துக்கள் இருக்கும் வாடகைதாரர்களுக்கான விளைவுகள் குவிக்கப்பட்ட வருமானம் மற்றும் சொத்து மதிப்பு ஒரு குறிப்பிட்ட உச்ச வரம்பை மீறும் வாடகைதாரர்களின்குத்தகை ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்படலாம். எடுத்துக்காட்டாக, பரம்பரை சொத்து கிடைப்பதன்மூலம் மொத்த சொத்து மதிப்பு உயரும் சூழ்நிலையில் இது நிகழலாம். இருப்பினும், சமூக வாடகைவீடுகளுக்கான தகுதி வருமானத்தின் உச்சவரம்பு மாற்றப்படாது. தற்போது, வாடகைதாரர்களின் மாத வருமானம் உச்சவரம்பை 20% மீறிய நிலையில் வாடகை கட்டணம்செலுத்த வேண்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வள மேல்வரம்பு மீறியவுடன் வாடகைகள் செலுத்தப்படவேண்டும். மேலும், தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் உச்சவரம்புகளை மீறும் சூழ்நிலையில், குத்தகைஒப்பந்தம் முடிவுக்கு கொண்டுவரப்படலாம். தற்போது, சுமார் 8% சமூக வீட்டு உரிமை பூங்காகுடியிருப்பாளர்கள் உச்சவரம்புகளை மீறியுள்ளனர். இது சுமார் 4 லட்சம் வீடுகளுக்கு சமம் என அமைச்சர்தெரிவித்தார். குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளுக்கான விளைவுகள் ஆரம்ப மசோதாவில் இல்லாத மற்றொரு சர்ச்சைக்குரிய விதிமுறை பரிசீலனையில் உள்ளது. குடும்ப உறுப்பினர்மரியாதைக் குறைவான செயல்கள் குற்றங்கள் அல்லது குற்றச் செயல்களுடன் தொடர்பில் இருத்தல் போன்றவழக்குகளும் இனி கவனத்தில் கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Kuruvi

பாரிஸ் 14 வயது தமிழ் சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில்!

பாரிஸை சேர்ந்த 14 வயது தமிழ் மாணவன் ஒருவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அதிக குளிர்பானம் குடிப்பது தொடர்பாக அடிமையாக இருந்துள்ளதாகவும் பெற்றோரும்கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றனர்... தொடர்ச்சியாக இனிப்பு குளிர் பானங்களை அருந்துவது கல்லீரலை பாதிக்கிறது. சிறு வயதாக இருந்தாலும்இப்போது இந்த மாதிரி வருத்தங்கள் வர தொடங்கியுள்ளது.காரணம் ஆரோக்கியமற்ற உணவுகள் தவறானவாழ்க்கை முறை காரணமாக நோய்கள் சிறுவயதிலேயே பெரிதாக தொடங்கியுள்ளது.. தமிழ் பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் அவதானமாக இருங்கள்..பிள்ளைகளுக்கும் கணவருக்கும் எதுஎன்றாலும் ஆரோக்கியமான வீட்டு சாப்பாட்டை சமைத்து கொடுங்கள்...கண்டபடி வெளியில் சாப்பிடவிடாதீர்கள்...தொடர்ச்சியாக அவர்களின் உணவு பழக்கவழக்கங்களை கண்காணியுங்கள்...  முக்கிய குறிப்பு : இதனுடன் தொடர்புடைய எச்சரிக்கை பிரான்ஸ் அரசு ஏற்கனவே இரு தடவைகள் விடுத்திருந்தது 2022,2023 களில் நாமும் எமது தளத்தில் வெளியிட்டிருந்தோம்..நீங்கள் எத்தனை பேர் பாத்தீர்கள் என்று தெரியவில்லை..இப்போது...
Kuruvi

பிரான்சில் வேலைவாய்ப்பு இழப்பீடு தொடர்பில் காசு வசூல்! அரசு எச்சரிக்கை

ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு சிக்கல்: தவறான தகவல் தொடர்பால் அதிகப்படியான தொகை வசூல் பிரான்ஸ் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் (France Travail) ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு சிக்கல்ஏற்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் (caisses de retraite et l'opérateur chargé de l'indemnisation)  தவறான தகவல் தொடர்பால், நூற்றுக்கணக்கான மூத்த குடிமக்களிடம் அதிகப்படியானதொகை வசூலிக்கப்படுகிறது.  இந்த சிக்கலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர், வேலைவாய்ப்பு இழப்பீடுகளில் ஏற்படும் பிரச்சனைகளைஆராய்ந்து அறிக்கை தயாரிக்கும் பொறுப்பான  மத்தியஸ்தர் ஜீன்-லூயிஸ் வால்டர் (Jean-Louis Walter) ஆவார். 2024 ஆம் ஆண்டுக்கான அவரது அறிக்கையில், 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பிரான்ஸ் முழுவதும் உள்ள பிராந்திய மத்தியஸ்தர்களுக்கு "பல ஆயிரக்கணக்கான யூரோக்கள்" வரைவசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த அதிகப்படியான தொகை வசூலிப்புக்கு காரணம் என்ன? 62 வயதிலிருந்து 67 வயது வரை முழு ஓய்வூதியம்பெறத் தகுதியில்லாத மூத்த குடிமக்களுக்கு, ஓய்வூதியம் கிடைக்கும் வரை வேலைவாய்ப்பு இழப்பீடுவழங்கப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வேலைவாய்ப்பு ஆலோசகர்கள், வேலைநாள் பதிவேட்டில்(relevé de carrière) உள்ள தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தவறான தேதியை பதிவுசெய்கின்றனர்.  ஓய்வூதிய நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்து, 65 அல்லது 66 வயதில் முழு ஓய்வூதியம் பெறத்தகுதியுள்ளவர்கள் என உறுதி செய்தால், வேலைவாய்ப்பு நிறுவனம் ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.  ஆனால், ஓய்வூதிய நிறுவனங்கள் தகவல்களை தாமதமாக அனுப்புகின்றன. இதனால், வேலைவாய்ப்பு நிறுவனம்ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்த தவறி, அதிகப்படியான தொகை வசூலிக்கப்படுகிறது.  மேலும், ஓய்வூதிய நிறுவனங்கள் பின்னோக்கி ஓய்வூதியம் வழங்கும் வழக்கம் இல்லை. அதாவது, அதிகப்படியாகவசூலிக்கப்பட்ட தொகையை திரும்பப் பெற முடியாது.  இந்த சிக்கலைத் தவிர்க்க, ஓய்வூதிய நிறுவனங்களால் வழங்கப்படும் "சோமேஜ் இண்டெம்னிஸே: ரெகுலரைசேஷன் டி கரியர்" (Chômage indemnisé : régularisation de carrière) என்ற சான்றிதழை பெறுவதுஅவசியம்.  இந்த சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களை France Travail தொடர்பு கொள்ளும். பாதிக்கப்பட்டவர்கள்,  மத்தியஸ்தரை அணுகி கடன் தள்ளுபடி கோரலாம்.
Kuruvi

பிரான்ஸில் மாணவி காதலை மறுத்த மாணவர் கடத்தி தாக்குதல்!

மே 5, 2024 அன்று மாலை 3:30 மணியளவில், பிரான்ஸ் ரைம்ஸில் உள்ள தனது வீட்டிற்கு முன்னால் 16 வயதுசிறுவன் அடையாளம் காணப்பட்ட நபரால் கடத்தப்பட்டார். இவரை ஐந்து பேரால்  Clio வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்டார்.  முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் "காதல் தோல்வி" தொடர்பான பழிவாங்கும் நடவடிக்கையாகஇருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே உறவில் இருந்த நிலையில், ஒரு இளம்பெண்ணின் காதலை  நிராகரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர், குறிப்பாக சகோதரர், மற்றும் தாய் ஆகியோர் இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது.  தாக்குதலின் போது, சிறுவன் காரில் தாக்கப்பட்டு, பின்னர் அலெயின் பொல்லியார்ட் தெருவில் உள்ள ஒருஅடுக்குமாடி கட்டிடத்தின் பாதாள அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மேலும் தாக்குதல்கள்நடத்தப்பட்டன. பின்னர், ரு அராகோ தெருவில் விடுவிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.  சிறுவனுக்கு உடல் முழுவதும் பல காயங்கள், மூக்கில் பல உடைப்புகள், வலது முதுகில் 5 வெட்டு மற்றும் அறிவுமற்றும் நினைவு இழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன. தற்போது சந்தேக நபர்கள் தீவிரமாக தேடப்பட்டுவருகின்றனர். பாதிக்கப்பட்டவரிடம் இன்று மதியம் விசாரணை நடத்தப்படவுள்ளது. 

We noticed you're visiting from France. We've updated our prices to Euro for your shopping convenience. Use United States (US) dollar instead. Dismiss