Kuruvi

187 Articles written
தாயகம்

பணம் யாருக்கு! அனுரவின் சொன்னது நியாயமா..?

மக்களின் பணத்தை யார் கையாள வேண்டும்? ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கேள்வி: பொறுப்பு கோரலா அல்லது மறைமுகத் திட்டமா? கொழும்பு, ஏப்ரல் 20, 2025 – உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதி...

பிரான்ஸ் மாப்பிளைக்கு நாமம் போட்ட யாழ்.இளம் பெண்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 24 வயது யுவதி ஒருவரின் அந்தரங்கப் புகைப்படங்கள் சமீப நாட்களாக சமூகஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த யுவதி, தனது காதலரான உடற்கட்டழகு பயிற்சியாளருடன்குடும்பத்தினருக்கு தெரியாமல் சென்றுவிட்டார். இதையடுத்து, அவரது அந்தரங்கப் புகைப்படங்கள்வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கு, யுவதிக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பிரான்ஸைச் சேர்ந்தமணமகனே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இந்த யுவதி, தனியார் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தார். கடந்தஆண்டு இறுதியில், அவருக்கு பிரான்ஸில் வசிக்கும் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், மணமகனுக்கு பிரான்ஸில் நிரந்தர குடியுரிமை இல்லாததால், யுவதியை சட்டப்பூர்வமாக அழைத்துச் செல்வதில்சிக்கல்கள் எழுந்தன. இதனால், சுற்றுலா விசாவில் பிரான்ஸ் செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக, யுவதி தனது உடல் தோற்றத்தை மாற்றுவதற்காக கொழும்பில் சிகிச்சைகள் பெற்றார் மற்றும் பலாலிவீதியிலுள்ள உடற்கட்டழகு பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டார். இதற்காக மணமகன் கணிசமானபணத்தை செலவிட்டதாக தெரிகிறது. மேலும், விசா சந்தேகங்களைத் தவிர்க்க, யுவதி தென்கிழக்கு ஆசியநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தார். அங்கு மணமகனை சந்தித்தபோது, அவர் சில அந்தரங்கப்புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், பிரான்ஸ் பயணம் தொடர்ந்து தாமதமான நிலையில், யுவதி உடற்கட்டழகு பயிற்சி நிலையத்தில்பயிற்சியாளராக இருந்த ஒருவருடன் காதல் ஏற்பட்டு, கடந்த வாரம் அவருடன் சென்றுவிட்டார். இதன்பின், அனாமதேய சமூக ஊடகக் கணக்குகள் மூலம் யுவதியின் அந்தரங்கப் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. முகநூல் நிர்வாகம் இந்தக் கணக்குகளை முடக்கினாலும், புதிய கணக்குகள் மூலம் புகைப்படங்கள் தொடர்ந்துபரவி வருகின்றன. இந்தச் சம்பவத்தில், யுவதி தன்னை விட்டுச் சென்றதால் ஏமாற்றமடைந்த மணமகனே இந்த செயலில்ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இரு பக்கத்தாலும்தேவைப்படுகின்றன. உறவுகளில் தெளிவான தொடர்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை இன்றியமையாதவை. தாமதங்கள் அல்லதுதெளிவற்ற திட்டங்கள் பெண்கள் நம்பிக்கையை பாதிக்கின்றன...இப்படி ஏமாறு முதலாவது பிரான்ஸ்மாப்பிள்ளை இல்லை... எத்தனையோ பேர்,, ஆண்கள் இதே மாதிரி ஏமாந்து இருக்கிறார்கள் இன்னும் இதுதொடரபோகுது...  உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.இப்படிதான் வாழ்க்கை... இவ்வளவுதான் காசு... இத்தனை கஷ்டத்தில்தான் இந்த பணம் உழைக்கப்படுகின்றது என்பதை ஒரு நாளும்மறைக்காதீர்கள்.  கோவத்தில் அந்தரங்கப் புகைப்படங்களை ஒருவரின் அனுமதியின்றி பகிர்வது தவறு மட்டுமல்ல, சட்டவிரோதமான செயலுமாகும். இது மன உளைச்சலையும் உங்கள் நற்பெயருக்கு களங்கத்தையும்ஏற்படுத்தும்.நாளை இன்னொரு பெண் உங்களை திருமண செய்ய யோசிக்க கூடும்..ஆகையால்புத்திசாலிதனமாக நடந்து கொள்ளுங்கள்...வீண் கோவமும் வெறியும் உங்களையே அழித்து விடும்... இன்னொரு பெண் செய்த தவறுக்கு ஏன் நீங்கள் உங்களை நீங்களே அழித்து கொள்ளுகிறீர்கள்..?  தோல்வியில் இருந்து கற்கவும் : ஒரு உறவு முறிந்தால், அதைப் பற்றி சிந்தித்து, எதிர்காலத்தில் சிறந்தமுடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ளுங்கள். பழிவாங்குதல் உங்களை மேலும் கீழிறக்கும். சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: உங்கள் மன, உடல், மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேறமுயற்சியுங்கள். சுயமரியாதையும் நோக்கமும் உள்ளவர்கள் சிறந்த பெண்களை ஈர்ப்பார்கள். உறவுகள் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, மற்றும் பகிரப்பட்ட இலக்குகளால் செழிக்கின்றன. இவைஇல்லாதபோது, தவறான புரிதல்களும் வலியும் ஏற்படுகின்றன. அந்தரங்கப் புகைப்படங்களை பகிர்வது போன்றபழிவாங்கல் செயல்கள் வலியை அதிகரிக்கின்றன மற்றும் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும். சமூகமும் இத்தகைய செயல்களை கண்டிக்க வேண்டும், 

Greater Toronto: தொடர்ந்து விலை குறையும் வீடுகள்!

கிரேட்டர் டொராண்டோ பகுதியில் வீட்டு விற்பனை குறைவு: பொருளாதார நிச்சயமற்ற நிலை காரணம் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் (GTA) வீட்டு விற்பனை கணிசமாக குறைந்துள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த வீழ்ச்சிக்கு பொருளாதார நிச்சயமற்ற...

பிரான்சில் ஈஸ்டரில் உயிர்தெழுந்த மனிதர்

தமிழ் செய்தி: நம்பமுடியாத நிகழ்வு - புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன் இறந்தவர் மீண்டும் உயிர்பெற்றார் ஹாட்ஸ்-டி-செய்ன்: கிறிஸ்தவ புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, வியாழன் இரவு, நான்டெர்சிறையில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறியது. ஒரு கைதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, 35 நிமிடங்களுக்குப் பிறகு அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கி உயிர் பெற்றார். ஆனால், அவரதுஉடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வியாழன் மாலை, 35 வயதான ஒரு கைதி, ஒரு குற்ற வழக்கில் தற்காலிக காவலில் ஒரு வருடமாக இருந்தவர், தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். மனநல பிரச்னைகள் உள்ள இந்த கைதியை சிறை அதிகாரிகள்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மாலை 6:40 மணியளவில், வழக்கமான சோதனையின்போது, ஒருஅதிகாரி அவரை அசைவற்ற நிலையில் கண்டார். மயக்க நிலையில் கைதி - மருத்துவ முயற்சிகள் உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சிறை மருத்துவர் முதல் உதவியாக இதய மசாஜ் செய்தார். தீயணைப்புவீரர்கள் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மாலை 7:05 மணிக்கு அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். சிறையில் ஒரு கைதி இறந்தால், வழக்கமாக காவல்துறை அழைக்கப்படுவது போல, காவலர்கள் அங்கு வந்துவிசாரணையைத் தொடங்கினர். இறந்தவரின் உடல் மின்னணு கருவிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. திடீரென, மானிட்டரில் உயிர் அறிகுறிகள் தென்படத் தொடங்கின. 35 நிமிடங்களுக்கு முன்பு இறந்தவரின்நாடித்துடிப்பு மீண்டும் கிடைத்தது, ஆனால் மிகவும் பலவீனமாக இருந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை மதியம் வரை அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ள, நான்டெர் வழக்கறிஞர் அலுவலகம் "காயங்களின் காரணங்களை ஆய்வுசெய்யும்" விசாரணையைத் தொடங்கியுள்ளது. உடலில் காயங்கள் இல்லை என்றாலும், இந்த 35 நிமிட"இறப்பின்" காரணங்களை அறிய விசாரணை நடைபெறுகிறது.
விடுப்பு
Kuruvi

பிரான்ஸ் நட்சத்திர வீரர் Kylian Mbappe தமிழர் பூர்வீகமா! ஆதாரம்!

பிரான்ஸ் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாபே தனது சொந்த ஊரான கேமரூனுக்கு சென்றிருந்தார்.. இது தொடர்பான காணொளி! இந்த கேமரூன்... மொழி தமிழருக்கு மிக நெருங்கிய ஒரு மொழியாகும்... கேமரூன்கள் பேசுவது அச்சு...
Kuruvi

பிரான்ஸ்: யாழ் சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த அவமானம்!

பிரான்ஸில் இருந்து யாழ் திரும்பிய தமிழ் இளைஞரை வீட்டுக்குள் எடுக்காமல் விரட்டி அடித்துள்ள சம்பவம்ஒன்று இடம்பெற்றுள்ள குறித்த இளைஞர் பாரிஸில் இருந்து பல காலத்திற்கு பிறகு யாழ் திரும்பி வீட்டுக்கு பிள்ளைகள் மனைவியோடுசென்று கேட் ஐ திறந்த போது அவரது பெற்றோர் சகோதரிகள் எல்லாரும் சேர்ந்து திட்டி தீர்த்து வர வேண்டாம்என்று சொல்லியிருக்கிறார்கள்.. அதாவது அவர் மனைவி வளவுக்குள் வரவிடமாட்டோம் என்று சண்டை... ஏதோ சீதன சிக்கல் என்று கேள்வி! சகோதரனுக்கு பேசிய சீதன காசு பின்னர் மனைவி வீட்டாரால் கொடுக்கப்படவில்லையாம்,கேட்டதற்கு குறித்தஇளைஞர் வேண்டாம் என்று சொன்னதால் நாம் குடுக்கவில்லை என பெண் வீட்டார்கூறியிருக்கின்றனர்,இரண்டு பிள்ளை பிறந்தும் விடாம சீதன காசு மீதியை தர சொல்லி இளைஞர் குடும்பபெண்கள் மோதல் சுற்றி எல்லோரும் அக்கம் பக்கத்தினர் பார்க்க,அந்த வீட்டு ஆண்கள் எல்லாம் அமைதியாக இருக்க,பெண்கள்அதாவது மகளிர் படையணி இந்த தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கின்றது.. இதனால் மனமுடைந்த இளைஞர்,மனைவி பிள்ளைகளை கூட்டி கொண்டு மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டார். கருத்து: வெளிநாடு போய் சகோதரன் காசில் நன்றாக இங்கு சாப்பிட்டு தூங்கிவிட்டு,அற்ப சீதன காசுக்காகசொந்த சகோதரனை திட்டி அவர் காசில் கட்டிய வீட்டுக்குள் வர விடாமல் கத்தி கூச்சல் போட்டு அர்ச்சனைசெய்வது எந்த விதத்தில் நியாயம்..?
Kuruvi

இலங்கை தொடர்பாக உண்மையை சொன்ன பாரிஸ் சாமியார்!

இலங்கை நாடு முழுதும் அழிந்துவிடும் எனவும் அங்கு நடக்கும் மரணங்கள்,விபத்துக்கள்,அழிவுகள் எல்லாதுர்சம்பவங்களும் இதனை காட்டுவதாக பாரிஸ் சாமியார் ஒருவர் தெரிவித்துள்ளார். மக்களின் தொடர்ச்சியான பிழையான எண்ணங்களும் செயல்களுமே இலங்கையை நரகமாக ஆக்கிகொண்டிருப்பதாகவும்,அந்த தேசம் இத்தனை பலிகளை எடுத்தும் இன்னும் அடங்கவில்லை எனவும்கூறியுள்ளார். இதற்கு பரிகாரமாக மக்கள் ஒழுங்கா மனம் திருந்தி வாழ்ந்தால் மட்டுமே நாடு மீளும் என்றும்,மக்கள் மனம்திருத்தவே இவ்வாறான அழிவுகளை நடக்குகின்றன என்றும் அழியிறவர்கள் அழிந்து மீதி திருந்துகிறவர்கள்திருந்தி சரியாக வாழும் காலம் உலகில் இலங்கையே சொர்க்கம் என்று கூறியுள்ளார். பக்தர் ஒருவரின் கேள்விக்கு விளக்கம் கொடுக்கும் போதே இதனை கூறியுள்ளார். அண்மைகாலமாக இந்தசாமியார் தனது கருத்துக்களால் பாரிஸில் வளர்ந்து புகழ்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது...
Kuruvi

பிரான்ஸ்: சவால் விட்ட மாணவர்கள்! சாதித்து காட்டிய ஆசிரியர்!

Saint-Brieuc இல்,  உள்ள உயர்நிலைப் பாடசாலையில் ஆயத்த வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல்ஆசிரியர், தனது மாணவர்களின் சவாலை ஏற்றுக்கொண்டார்.  அவர் இளங்கலையில் Bac தேர்ச்சி பெற்று19.32/20 மதிப்பெண் பெற்று கொண்டார். Saint-Brieuc இல், Côtes-d'Armor இல்,  இயற்பியல் மற்றும் வேதியியல் பேராசிரியரான பெனாய்ட்டெலிபைன், அவரது மாணவர்களால் இளங்கலை பட்டத்தை மீண்டும் பெறுவதற்கு சவால் விடப்பட்டார்.  அவர்19.32/20 என்ற சராசரியுடன் சித்தி பெற்று காட்டியுள்ளார்.. 1994 இல் பிறந்த பேராசிரியர், ஏற்கனவே தனது பட்டப்படிப்பை திறமை சித்தியடைந்திருந்தார்.  ஒரு ஆசிரியராக, மாணவர்களுக்கு சித்தி அடைய சில அறிவுரைகளை கூறிய போது இரு மாணவர்கள் அறிவுரைகூறுவது இலகு,செய்வதுதான் கஷ்டம் என நகைசுவையாக கூறியுள்ளனர்.இந்த அறிவுரைகளை வைத்து நீங்க  Bac எழுதி சித்தி பெற்று காட்டுங்கள் என்று கூறியுள்ளனர். அதனை சவாலாக ஏற்று எழுதிய அவர் இறுதியாக, இரண்டு சிறப்புத் தேர்வுகளில் 20/20 பெற்றார், பொறியியல்மற்றும் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல். பிரஞ்சு,  ஜெர்மன், ஆங்கிலம், கணிதம் மற்றும்வரலாறு-புவியியல் ஆகியவற்றில் அதே மதிப்பெண் பெற்றார்.   பின்னர் தனக்கு சவால் விட்ட மாணவர்களை  சந்தித்து பேசி மகிழ்ந்துள்ளார்.. இப்படிதான் த்து அறிவுரைகளைவைத்து சித்தி பெறுவது என்று தானே செய்து காட்டியமை தனக்கு பெருமையாக உள்ளதாக தெரிவித்தார்.
Kuruvi

🔴பாரிஸில் சீரழியும் ஈழதமிழர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

லாச்சப்பல்: பிரான்ஸ் தமிழர்களில் கிட்டத்தட்ட 500 ஈழதமிழருக்கு மேல் தின குடிக்கு அடிமையாகியுள்ளதாகசில அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன...இவர்களில் வீசா குடியுரிமை கிடைத்தவர்கள்,குடும்பங்கள்உள்ளவர்களில் இருந்து சில மாதங்கள் முன்னர் வந்து இறங்கியவர்கள் வரை இருப்பதாக சொல்லப்படுகின்றது. இவர்கள் விடிந்தது முதல் இரவு வரை குடிப்பதும் படுப்பதுமாக இருப்பதாகவும் ஆங்காங்கே கிடைக்கிறஇடங்களில் தங்குவதுமாக காலத்தை கழிப்பதாகவும் தெரியவந்துள்ளது.அண்மைகாலதாக குடியால் இறக்கும்தமிழர்களின் எண்ணிக்கை புலத்திலும் ஊரிலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.. தவிர இவர்கள் மற்றவர்களுக்கும் பழக்கி,சமூகத்தை கெடுத்து கொள்வதுடன் இவர்களை நம்பி இருக்கும்குடும்பங்களையும் சீரழித்து விடுகிறார்கள் என்பதும் கண் முன்னே பார்த்து கொண்டுள்ள நிகழ்வுகள்...
Kuruvi

பாரிஸ்: வட்டி காசு கொடுக்கும் தமிழரின் அட்டகாசம்!

பாரிஸ் நடுவீதியில் தமிழ் வட்டிகடைகாரர் தொல்லை!  உரத்த குரலில் தொலைபேசியில் , உன் அப்பா எங்க? போனை அவர்கிட்ட குடு. வெளியப் போயிருக்கிறானா? வட்டிக்காசு கட்டவழியில்ல, ஆனா பேஸ்புக்ல மட்டும் தினமும் போட்டோ போட்டுத்தள்ளுறான்? ஒழுங்காநாளைக்குள்ள வட்டியக் கட்டச்சொல்லு" என்று யாரோ சிறுகுழந்தையை  மிரட்டியிருக்கிறார் தமிழர்கள் திருந்துவார்களா? இப்படி அவசரத்துக்கு வாங்கி சொந்த பிள்ளையை அடுத்தவனிட்ட பேச்சு வாங்கவைக்கிறதுதான் பெற்றோரின் லட்சணமா? முடிஞ்சா உழைச்சு வாழுங்க,மானங்கெட்ட தனமாக கடன் வாங்கிநீங்களும் அசிங்கப்பட்டு குடும்பங்களையும் அசிங்கப்படுத்தி வாழ்ந்து என்னத்தை காண போறீங்க..?  இதே போல வட்டி காசு குடுக்கிறவர்களும் தங்கள் தொழில் நியாயப்படி கண்டிப்பா இருந்தால்தான் காசுதிரும்ப வரும்,ஆனால் கொஞ்சம் இடங்கள் ஆட்களை பார்த்தும் கதைத்து கொள்ளுங்கள்...