லாச்சப்பல் கைது! திருப்பி அனுப்ப தீவிரம்!
பாரிஸ், மே 14, 2025 – பாரிஸ் ரயில் நிலையம் (Gare du Nord) அருகே நடந்த கத்தி குத்து சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் கொடுக்க மறுத்ததற்காக தான் ஒருவர் தாக்கப்பட்டதாக பொலிஸ்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்ஜீரியாவை சேர்ந்த 34 வயதான சைத் இந்த சம்பவத்தில் கொலைமுயற்சி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பிரான்ஸுக்கு வந்த இவர், திருப்பி அனுப்பும் உத்தரவு (OQTF) கீழ் தற்போது வசித்து வருகிறார். நிரந்தர முகவரி ஏதுமின்றி கட்டட வேலைகள் மற்றும் சந்தை வேலைகள்மூலம் தனது வாழ்வை நடத்தி வந்தவர்.
நான் சண்டையிடுவோரை பிரித்தேன். நான் நிரபராதி. ஒருவரையும் காயப்படுத்தவில்லை. வேலை தேடி தானேவந்துள்ளேன்,என கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸ் விசாரணை நீதிமன்றத்தில் சைத் வாதிட்டார்
சம்பவம் எப்படி நடந்தது?
ஏப்ரல் 25 அன்று நள்ளிரவு கடந்த பிறகு, Faubourg-Saint-Denis தெருவின் மூலையில் அல்ஜீரியாவைச் சேர்ந்தஒருவர் கத்தியால் மூன்று முறை மார்பில் குத்தப்பட்டு கிடந்தார். சம்பவத்தை அவரது நண்பர் நேரில் பார்த்துஉடனடியாக காவல்துறையை அழைத்தார்.
போலீசார் CCTV காட்சிகளை பயன்படுத்தி La Chapelle பகுதியில் உள்ள Philippe-de-Girard தெருவில் உள்ள ஒரு பேக்கரிக்கு முன்னால் சைத்-ஐ கண்டுபிடித்து கைது செய்தனர். சம்பவ இடத்திலேயே கத்தியும்மீட்கப்பட்டுள்ளது. அது தற்போது DNA பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் நிரூபிக்கபடாவிடினும்இவர் நாட்டுக்கு திரும்பி அனுப்பபடுவார் என தெரிகின்றது.கடந்த சில வருடங்களாக சமூக குற்றங்கள் அதிகளவில் இவர்கள் மூலமே நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
இந்தச் சம்பவம், public safety in Paris, immigration law France, மற்றும் legal aid for asylum seekers...
பிரான்ஸ்: மெட்ரோவில் அபராதம்! தமிழர்கள் அவதானம்!
பிரான்ஸ்: மெட்ரோ பயணிகள் மீது தவறுதலாக அபராதம் அடிக்கடி விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மெட்ரோவில் செடி எடுத்துச் சென்றது, ட்ராமில் கான்ட்ராபாஸ் கொண்டு சென்றது, ஏற்கனவே திறந்திருந்தகேட்டை கடந்தது, போன்றவற்றிற்காக அபராதம் விதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.
காரே-டி-லியோன் நிலையத்தில்,மெட்ரோ லைன் 1-ன் நுழைவு கேட் திறந்திருந்தது. வேலைநிறுத்தம்நடப்பதால் கேட் திறந்திருக்கிறது என்று நினைத்து, நவிகோ ஈஸி பாஸை பதிவு செய்யாமல் கடந்த 40 வயதுமேரி , சில மீட்டர்கள் தாண்டியவுடன், கட்டுப்பாட்டாளர்கள் தடுத்தனர்..
நெடுஞ்சாலை கட்டணச் சாவடியில் அதைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை காவல்துறை காத்திருந்துஅபராதம் விதிப்பது போல இருந்தது என்று கூறப்படுகின்றது.
கட்டுப்பாட்டாளர், குறித்த பெண்ணின் நேர்மையான விளக்கங்களை பொருட்படுத்தாமல், 35 யூரோக்கள்உடனடியாக அல்லது பின்னர் 65 யூரோக்கள் என்று அபராதம் விதித்தார். குறித்த பெண் உடனடியாகஅபராதத்தை செலுத்திவிட்டு கத்தி கொண்டு சென்றுள்ளார்..
பாரிசில் யாழ் பல்கலைகழக பொன் விழா!
யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்ழா பரிஸ் நகரில், பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்வரும் யூன் மாதம் 08ஆம் திகதி, பரிஸ் இன் புற நகர் பகுதியான Villeneuve Saint- Georges எனும்...
பாரிஸில் கடத்தப்பட்ட தந்தை! மகனிடம் கப்பம்!
பாரிஸில் cryptocurrency தொழில்முனைவரின் தந்தை கடத்தல்: விரல் வெட்டப்பட்டு மீட்பு
France-ஐச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் வியாழக்கிழமை Paris-இல் கடத்தப்பட்டு, சனிக்கிழமை Essonne மாகாணத்தின் Palaiseau-வில் காவல்துறை நடவடிக்கையால் மீட்கப்பட்டார்....
கவர்ச்சி விசை விதி இயங்கியல்| Law Of Attraction
இந்த உலகில் நாம் விரும்புவது,நம்மை விரும்புவது என்று ஒன்று தனியாக இல்லை.இங்கு இயங்கிகொண்டிருக்கும் இரு பொருட்களிடையிலான கவர்ச்சிவிசையே விருப்பமாகும்.இங்கு உள்ள எல்லா பொருட்களுக்கும் இடையிலும் ஒன்றுக்கொன்று ஒரு குறிப்பிட்ட கவர்ச்சி விசை இயங்கி...
தனி மனிதனும் பிரபஞ்ச ஒழுங்கும்…
இங்கு உங்களை சுற்றி நிகழ்பவை எல்லாமே பிரபஞ்ச நோக்கத்திற்காக நிகழ்ந்து கொண்டுள்ளன.நீங்கள் பிறப்பது,படிப்பது,தொழில் செய்வது,பிடித்த பெண்ணை பின்தொடர்வது, திருமணம் செய்து கொள்வது முதல் கோபம் கொள்வது சண்டை போடுவது என்று எதை செய்தாலும்...
இந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவரா? தந்தை கவனம்!
சிம்ம லக்னம் ------------------------------ ஒவ்வொரு ராசிக்கட்டத்தின் சின்னத்திற்கும் அதற்குள் இருக்கும் ஒரு நட்சத்திரமே காரணமாக இருக்கும். உதாரணத்துக்கு மீன ராசிக்கு ரேவதி, கும்ப ராசிக்கு சதயம், தனுசு ராசிக்கு மூலம், விருச்சிக ராசிக்கு...
உணவு – உலக இயங்கியல் : பகுதி I
மனிதர்கள் இரு வகையான உணவுகளை உண்பார்கள்...உலகில் பெரும்பாலான மக்கள் 90% சைவ-அசைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கிறார்கள்.. வெறும் 10% அல்லது அதற்கும் குறைந்த மக்களே சைவ உணவுகளை உண்கிறார்கள்.இந்த இரு வகை உணவுகளுக்கும்...
தனி மனித ஒழுக்கமும் விழிப்புணர்வும்
ஒரு சமூகம்,சரி தனிநபர்கள் சரி இந்த இயற்கை சரி,சூரிய மண்டலம் சரி எல்லாமே இங்கு ஒரு ஒழுங்கில்தான் இயங்கிகொண்டுள்ளது.அந்த ஒழுங்குதான் ஒழுக்கம்.. நாம் ஒழுக்கமாக இயங்கி கொண்டிருக்கிறம் அல்லது இல்லை இத்த இரண்டில்...
போதை காட்டும் பாதை : தமிழர்களின் இயங்கியல் இரகசியம்!
யாழ் உட்பட வட கிழக்கு பிரதேசங்களில் அண்மைகாலமாக போதை பழக்கங்களும் அதனால் வரும் விளைவுகளும் சில பல மரணங்களும் ஏற்பட ஆரம்பித்திருக்கின்றன. கல்வியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள் இது குறித்த தமது அச்சத்தையும் உடனடி தீர்வுகளையும்...