Kuruvi

180 Articles written
விடுப்பு

பிரான்ஸ் தமிழ் மாப்பிள்ளை பாவங்கள்! மீண்டும் சம்பவம்!

திருமணங்களின் போது அதிகமாக ஏமாறும் நபர்களாக  பிரான்ஸ் தமிழ் இளைஞர்கள் மாறிவருகின்றனர்...தொடர்ச்சியாக திருமண தொடர்புகள்,நிகழ்வுகள்,தொலைதூர காதல்கள் அதிகமாகபாதிப்புள்ளாகும் பட்டியலில் பிரான்ஸ்,பரிஸ் தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர்..  ஏன் பிரான்ஸ் முன்னிலை?  கனடா,சுவிஸ், போன்ற நாடுகளில் அதிகம் அந்தந்த நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம் இருப்பதால் திருமணம்அந்தந்த நாடுகளிலேயே அதிகம் நடைபெறுகின்றது. ஆனால் பிரான்ஸ் தமிழர்கள் இன்னும் ஊரிலிருந்துபெண்ணை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மற்றைய நாடுகளை காட்டிலும் உழைக்கும் வீதமும் குறைவுஎன்பதாலும் திருமண சந்தையில் பிரான்ஸ் மாப்பிள்ளை மதிப்பு குறைவாக இருப்பதாலும் இலகுவாகயாழ்ப்பாண திருமண தரகர்களாலும்,பெண் வீட்டாராலும் பிரான்ஸ் மாப்பிள்ளைகள் இலக்குவைக்கப்படுகின்றனர்.  இதனை தாண்டி பிரான்ஸ் தமிழர்களே உலக தமிழர்களில் அதிக நேரம் டிக்டொக்,பேஸ்புக்கில் நேரத்தைசெலவழிப்பதும் இவ்வாறான வலைவீசும் யுவதிகள் கண்ணில் சிக்கி அழிய காரணம் என சொல்லப்படுகின்றது. அண்மையில் கூட பிரான்ஸில் இருந்து வந்த மணமகனுக்கும், யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நடந்ததிருமணத்திற்குப் பிறகு, சில நாட்களுக்குள் அப்பெண் வேறொரு ஆணுடன் தலைமறைவாகிவிட்டார். குறித்த  திருமணம் நடந்த ஒரு வாரத்திற்குள், அப்பெண் மற்றொரு ஆணுடன் தலைமறைவாகிவிட்டார்.இதனால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனராகசொல்லப்படுகின்றது. திருமணம் முடிந்த சில நாட்களுக்குள் இவ்வாறு நடந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. சிலர்முன்பே அந்த உறவு இருந்திருக்கலாம் என்றும், அல்லது திருமணத்திற்குப் பிறகு ஏதேனும் மனஸ்தாபம்ஏற்பட்டு முன்னால் உறவிடம் சென்றிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.எது எப்படியோ புல தமிழ்மாப்பிள்ளைகளில் குறிப்பிட்ட வீதம் தொடர்ச்சியாக சரியான முறையில் மண பெண்ணை தேர்வு செய்வதில்தவறி வருகின்றமை நீடிக்கின்றது.  இதற்கு அடிப்படை காரணம் புல தமிழர் - தாயக தமிழர் இடையிலான புரிந்துணர்வு இன்மையும்,தீர்க்கமானமுடிவெடுக்காத தனி மனிதர்களின் சந்தர்ப்பவாத குணங்களுமே முக்கிய பங்காற்றுகின்றனர்.

அவசரப்பட்ட யாழ் இளைஞர்! அவல சாவு!

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய...

புல தமிழர்கள் இவற்றை பார்த்து வாங்குங்கள் பிரான்ஸ்,ஐரோப்பா,கனடா!

City Tamils News Desk | பிப்ரவரி 24, 2025 இன்றைய காலத்தில், ஃப்ரான்ஸ், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல குடும்பங்கள் சீனாவில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் கிளாஸ்வேர்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்....

Are Chinese Plastic and Glassware Safe for Your Kitchen? A Guide

City Tamils News Desk | February 24, 2025 As affordable kitchenware floods global markets, many consumers in France, Europe, and Canada rely on Chinese-made plastic...
செய்திகள்
Kuruvi

பாரிஸில் கண்டறியப்பட்ட கொடும் தொற்று! அவசர சிகிச்சை!

பாரிஸ் பிராந்தியத்தில் "லஸ்ஸா" வைரஸ் (Lassa virus) தொற்றிய ஆண்  ஒருவருக்கு வல் - து-மானில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இரத்தக் கசிவுக் காய்ச்சலை (viral hemorrhagic fever) ஏற்படுத்துகின்ற இந்த வைரஸ் மனிதர்களில்...
Kuruvi

இனி 49€ இல்லை 2.45€ தான்! பிரான்ஸ் தமிழர் அவதானம்!

எச்சரிக்கை! SNCF லாப வாய்ப்புகள் அட்டைக்கான புதிய மோசடி முயற்சி 03/05/2024 சமீப காலங்களில், எஸ்என்சிஎஃப் லாப வாய்ப்புகள் அட்டையில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி வாடிக்கையாளர்களின் வங்கி தகவல்களை திருட முயற்சிக்கும் மோசடி கும்பல்கள் எஸ்என்சிஎஃப்...
Kuruvi

பாரிஸ் ரயில் நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு!

பாரிஸ்: ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் கத்தியால் ஆயுதபாவிப்பட்ட சந்தேக நபரை நான்கு தோட்டாக்கள் மூலம் செயலிழக்க வைத்தனர் பாரிஸ் நகரின் 13வது மாவட்டத்தில், பிரான்சுவா-மிட்டர்ராண்ட் மெட்ரோ நூலகத்திற்கு அருகில் இன்று அதிகாலை 12:25 நடைபெற்ற சம்பவத்தில், கத்தியால்...
Kuruvi

பிரான்ஸில் தமிழர் வாழும் பகுதியில் நடந்த கொடூரம்!

Seine saint denisல் கொலையாக சந்தேகப்படும் வழக்கில், முந்தைய வன்முறை குற்றச் செயல்களுக்காக அறியப்பட்ட 33 வயதான ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். . ரோஸ்-டெஸ்-வென்ட்ஸ் பகுதியில் உள்ள பிளேஸ் ஜுபிடர் பகுதியில்...
Kuruvi

இல்-தூ-பிரான்சை தாக்கிய மழை,இடி

புல்லட்டின் அளவு ஆலங்கட்டி மழை , வெள்ளம், மூடப்பட்ட விமான நிலையங்கள், ஆலங்கட்டி மழையால் மூடப்பட்ட வீதிகள், ஈபிள் கோபுரத்தில்மின்னல் தாக்கம்...  புதன்கிழமை மாலை, இல்-து-பிரான்ஸ் குறிப்பிடத்தக்க மோசமான வானிலைதாக்குதலுக்கு உட்பட்டது. கிட்டத்தட்ட அபோகாலிப்டிக் காட்சிகள்.  புதன்கிழமை மாலை, இல்-து-பிரான்ஸ் பகுதியில் ஆலங்கட்டி மழைமற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. Val-d'Oise  பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.. மே 1 புதன் அன்று Météo France முழு பாரிஸ் பிராந்தியத்தையும் செம்மஞ்சள் எச்சரிக்கையில்வைத்திருந்தது.  Ile-de-France வீதிகள் A1 இல், வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட வேண்டும் என்று X Météo Express இல்தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது..
Kuruvi

பிரான்ஸில் முக்கிய கட்டுபாடு அமுல்…

குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தொடுதிரை சாதனங்களுக்குள் மூழ்கிச் சீரழிவதைத் தடுப்பதற்கானவழிமுறைகளைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அதன் அறிக்கையை அரசுத் தலைவர்மக்ரோனிடம் சமர்ப்பித்துள்ளது. மூன்று வயதுவரை குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களைத் தொட்டுப் பயன்படுத்துவதை முற்றாகத் தடைசெய்யப் (banning screens) பரிந்துரைத்துள்ளது. அதேசமயம் சிறுவர்கள் பதினொரு வயதுக்கு முன்னர் ஸ்மார்ட் போன்களைப் பாவிப்பதைத் தடுக்குமாறும்அரசுக்கு அறிவிறுத்தியுள்ளது. 13 வயதில் ஸ்மார்ட் போன்களை வழங்கலாம்.  ஆனால் அவற்றின் மூலம் சமூக வலை ஊடகங்களை அணுகமுடியாது தடுக்கப்பட வேண்டும்.15வயதுக்குப்பிறகே சமூக ஊடகங்களின் பாவனையை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். டிஜிட்டல் தொடு திரை சாதனங்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடையே நேரடியானதும் மறைமுகமானதுமான தாக்கங்களை ஏற்படுத்துவதைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, தனிமை, மன அழுத்தம் போன்ற ஆபத்தான விடயங்களின் ஆரம்ப இடமாக அவை தென்படுகின்றன என்று தெரிவிக்கிறது. இந்த சாதனங்கள் குழந்தைகள் மத்தியில் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக் கோளாறுகளுக்குக் காரணமல்ல என்று நம்பினாலும் பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கையுடன்இருக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். வீடுகளிலும் பாடசாலைகளிலும் சிறுவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளிகளிலும் பாலர்வகுப்புகளிலும் கணனிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களது பயன்பாட்டைத் தடைசெய்யலாம். -அரசு இவ்வாறு கட்டுப்பாடுகளை விதிக்க விரும்பினாலும் அவற்றை நடைமுறையில் செயற்படுத்துவதுசவாலானது. ஏனெனில் இந்த விடயத்தில் பெற்றோர்களே தனிப்பட்ட பொறுப்பைக் கொண்டவர்களாகஉள்ளனர் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. "ஒவ்வொரு வீடுகளுக்கும் முன்பாகப் பொலீஸ்காரர்களை நிறுத்த முடியாது. சட்டத்தின் மூலம் அன்றிப்பெற்றோர்களை வழிமுறைப் படுத்துவதன் மூலமே இதனைச் செய்ய முடியும்" என்று ஆணைக்குழுவில்இடம்பெற்றுள்ள நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் 8-10 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் 67 வீதமானவர்கள் சமூக வலைத் தளங்களைஅணுகுகின்றனர் என்பது கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.