Kuruvi

203 Articles written
கனடா

கனடா: தமிழர்கள் வாழும் இந்த பகுதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

வீடு கொள்ளை சம்பவங்கள் (Home Break-Ins and Robberies) டொரோண்டோ மற்றும் GTA பகுதிகளில் வீடு உடைப்பு மற்றும் கொள்ளை சம்பவங்கள் கணிசமாகஅதிகரித்துள்ளன, இது பொது மக்களிடையே பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளது.   புள்ளிவிவரங்கள் படி டொரோண்டோ காவல்துறையின் கூற்றுப்படி, 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025இல் வீடு உடைப்பு சம்பவங்கள் 20% அதிகரித்துள்ளன. குறிப்பாக, எட்டோபிகோக், ஸ்கார்பரோ, மற்றும்பிராம்ப்டன் பகுதிகளில் இந்த சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளன.   பொருளாதார அழுத்தம் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகியவை குற்றங்களை அதிகரிக்க காரணமாகஇருக்கலாம் என்று காவல்துறை கருதுகிறது.   காவல்துறை, குற்றங்களைத் தடுக்க புதிய கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சமூக காவல் திட்டங்களைஅறிமுகப்படுத்தியுள்ளது. மக்களுக்கு வீட்டு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும்நடத்தப்படுகின்றன.    மிசிசாகா மற்றும் வாகன் பகுதிகளில் உயர்ந்த மதிப்புள்ள வீடுகள் குறிவைக்கப்படுவதாக அறிக்கைகள்தெரிவிக்கின்றன. பொது மக்கள் வீட்டு பாதுகாப்பு அமைப்புகளை நிறுவுவதற்கு அதிக செலவு செய்ய வேண்டியநிலை உள்ளது.  

Toronto: குடிகாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

டொரோண்டோவில் மது அருந்த அனுமதி (Alcohol Consumption Allowed in Toronto Parks) டொரோண்டோ நகர சபை, பூங்காக்களில் தற்காலிகமாக மது அருந்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது, இதுGTA மக்களிடையே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு, பொது இடங்களில் மதுஅருந்துவதற்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.   இந்த அனுமதி குறிப்பிட்ட பூங்காக்களுக்கு மட்டுமே பொருந்தும், மேலும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மதுஅருந்த முடியும். பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை கண்காணிப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.   சிலர் இதை சுதந்திரமான முடிவாக வரவேற்றாலும், மற்றவர்கள் பொது இடங்களில் மது அருந்துவது குறித்துகவலை தெரிவித்துள்ளனர், குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் பூங்காக்களில்தேவையற்ற பிரச்சினைகளை தூண்டும் என மக்கள் கவலை!  GTA இல் தாக்கம் இந்த முடிவு டொரோண்டோவில் உள்ள பூங்காக்களை மையமாகக் கொண்டாலும், மிசிசாகாமற்றும் பிராம்ப்டன் போன்ற GTA பகுதிகளில் இதேபோன்ற முடிவுகள் பரிசீலிக்கப்படலாம் என்று விவாதங்கள்நடைபெறுகின்றன.   இந்த திட்டம், கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில், பொது இடங்களில் சமூகநடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என குறிப்பிடபட்டுள்ளது.

கனடா தேர்தல் முடிவுகள் : முழு பார்வை – 2025

2025 கனடிய நாடாளுமன்றத் தேர்தல்: முழு பார்வை ஜனவரி 2025 இல் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய பின்னர், மார்க் கார்னி மார்ச் 23, 2025 அன்று ஏப்ரல் 28, 2025 இல் நடைபெறவுள்ள...

யாழ் பல்கலை! மாணவர் விபரீத முடிவு! வெளிவராத சில தகவல்கள்!

காதலியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து   யாழ் பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டில் படிக்கும்கொட்டகலையைச் சேர்ந்த 24 வயது மாணவன் உயிரிழப்பு.! நிம்மதியாய் கால் நீட்டி படுக்ககூட முடியாத, சுவர்களில் மண் உதிர்ந்து கொண்டிக்கொண்டிருக்கும்  இரண்டு அறைகளை கொண்ட  லயத்து வீடு அது! அவனின் சவப்பெட்டியை கூட இலகுவாக அந்த வாசலில் கொண்டு செல்ல முடியாது! அவனின் அம்மா இந்தமுறை  அவன் தங்கை பெற்ற மூன்று A சித்திகளை அவனிடம் சொல்லி  "எப்படி இனி நம்பி உன் தங்கச்சிய கெம்பஸ்அனுப்புவேன் என்று கதறி துடித்துக்கொண்டு இருக்கின்றார்! பாடசாலையிலும் சமூகத்திலும் மிக கட்டுக்கோப்பாக வளர்ந்த ஒருவன்! எத்தனை கனவுகளோடு பெற்றோர்  அனுப்பியிருப்பார்கள் அவனை! அவனின் ஒரு நேர பஸ் காசுக்காக தாய் இரண்டு நாட்கள் கொழுந்து கூடையை நிச்சயம் சுமந்திருப்பார்! இனி எந்த வார்த்தை சொல்லி அந்த  தாயை நாங்கள் சாந்தப்படுத்த முடியும்? கம்பஸ் விடுமுறை நாட்களில் அவன் எங்களோடு வேலைக்கு வந்து சென்றது நினைவுக்கு வருகின்றது! யுனிக்கு Fun பன்ன கொஞ்ச பேர் வந்துருக்காங்க!  அவங்களுக்கு கனடா யூரோப் விசா ரெடியா இருக்குஆனால் எல்லோருக்கும் அப்புடி அல்ல... நாம் யார்..? எமதும் எம்மை சார்ந்த குடும்பத்தின் நிலைமை என்ன? அதற்காக நாம் இப்போது எதை செய்ய வேண்டும்? எதை செய்யகூடாது என்ற அடிப்படை தெளிவு இருக்கவேண்டும்.. காநலிக்க கூடாது என்று சொல்லவில்லை..ஆனால் நேற்று வந்தவளுக்காக இவ்வளவு காலமுமாகபெற்று வளர்த்த பெற்றோர்,சகோதரர்களை  தண்டிப்பது என்ன நியாயம்..? அதனை கொஞ்சம் கூட சிந்தித்துபாத்திருக்கலாம். புரிந்து கொள்ளாமல் கடைசில் தொங்க விடுகிற இத்த காதலோ,காதலியோ நமக்குஉண்மையில் தேவைதானா? இதற்காக ஏன் இப்படி ஒரு முடிவை நாம் எடுக்க வேண்டும் என்று கூட கடைசிநொடியில் நினைத்திருக்கலாம்.. முதலில் காதல் என்றால் என்ன என்று தெரிந்துவிட்டு காதலில் இறங்குங்கள்...தெரியாத விசயங்களில் இறங்கிஇவ்வாறு மாட்டுபடுகிறீர்கள்...புத்திசாலிகள் யாரை காதலிப்பதில்லை என்று ஒரு அமெரிக்க உளவியல் ஆய்வுமுடிவு சொல்கிறது..அவர்கள் திருமணம் முடிக்க வேண்டி வந்தால் தெரிந்து பழகிய ஒருவரை முடித்து கொண்டுவாழ்க்கையை தொடங்குவார்கள் என்றும்,பயணத்தில் பிரிவு வந்தால் கூட அதனை சரியாக தெளிவாக விளங்கிகொள்வார்கள் என்றும் அதன் பின்னர் கூட நண்பராக பழகி கொள்வார்கள் என்று அந்த ஆய்வு சொல்கின்றது. முடிவு கருத்து- பலவீனமானவர்களுக்கு இந்த பூமியில் இடமில்லை..வாழும் தகுதியும் இல்லை - விவேகானந்தா! 
தத்துவம்
Kuruvi

தணியாத விடுதலை தாகங்கள் : தளராத துணிவோடு…

ஆதியிலிருந்து அந்தம் வரை பிறப்பிலிருந்து இறப்பு வரை விடாமல் மனித மனம் விடுதலையை தேடியே அலைபாய்ந்தவாறு உள்ளது.இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் விடுதலையை நோக்கியதாகவே உள்ளது.தன்னை சுற்றியுள்ள சகல கட்டுக்களிலிருந்தும் வெளியில் வருவதே மனித...
Kuruvi

கவர்ச்சி விசை விதி இயங்கியல்| Law Of Attraction

இந்த உலகில் நாம் விரும்புவது,நம்மை விரும்புவது என்று ஒன்று தனியாக இல்லை.இங்கு இயங்கிகொண்டிருக்கும் இரு பொருட்களிடையிலான கவர்ச்சிவிசையே விருப்பமாகும்.இங்கு உள்ள எல்லா பொருட்களுக்கும் இடையிலும் ஒன்றுக்கொன்று ஒரு குறிப்பிட்ட கவர்ச்சி விசை இயங்கி...
Kuruvi

தனி மனிதனும் பிரபஞ்ச ஒழுங்கும்…

இங்கு உங்களை சுற்றி நிகழ்பவை எல்லாமே பிரபஞ்ச நோக்கத்திற்காக நிகழ்ந்து கொண்டுள்ளன.நீங்கள் பிறப்பது,படிப்பது,தொழில் செய்வது,பிடித்த பெண்ணை பின்தொடர்வது, திருமணம் செய்து கொள்வது முதல் கோபம் கொள்வது சண்டை போடுவது என்று எதை செய்தாலும்...
Kuruvi

இந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவரா? தந்தை கவனம்!

சிம்ம லக்னம் ------------------------------ ஒவ்வொரு ராசிக்கட்டத்தின் சின்னத்திற்கும் அதற்குள் இருக்கும் ஒரு நட்சத்திரமே காரணமாக இருக்கும். உதாரணத்துக்கு மீன ராசிக்கு ரேவதி, கும்ப ராசிக்கு சதயம், தனுசு ராசிக்கு மூலம், விருச்சிக ராசிக்கு...
Kuruvi

உணவு – உலக இயங்கியல் : பகுதி I

மனிதர்கள் இரு வகையான உணவுகளை உண்பார்கள்...உலகில் பெரும்பாலான  மக்கள் 90% சைவ-அசைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கிறார்கள்.. வெறும் 10% அல்லது அதற்கும் குறைந்த மக்களே சைவ உணவுகளை உண்கிறார்கள்.இந்த இரு வகை உணவுகளுக்கும்...
Kuruvi

தனி மனித ஒழுக்கமும் விழிப்புணர்வும்

ஒரு சமூகம்,சரி தனிநபர்கள் சரி இந்த இயற்கை சரி,சூரிய மண்டலம் சரி எல்லாமே இங்கு ஒரு ஒழுங்கில்தான் இயங்கிகொண்டுள்ளது.அந்த ஒழுங்குதான் ஒழுக்கம்.. நாம் ஒழுக்கமாக இயங்கி கொண்டிருக்கிறம் அல்லது இல்லை இத்த இரண்டில்...