விடுப்பு
விடுப்பு
கோடிகளில் புரளும் பிரான்ஸ் தமிழ் ஏஜென்சிகள்!
பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் ஏஜென்சிகள் மாதம் பல கோடிகளை உழைத்து தள்ளுவதாக சிலநம்பிக்கையான வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இவர்கள் இலங்கை இந்தியா மலேசியா பங்களாதேஷ் என்று கிழக்கு நாடுகள் பலவற்றை குறிவைத்து இயங்கிவருவதாகவும் சொல்லப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் அதிகளவாக இந்திய தமிழர்கள் இவர்கள் ஊடாக பிரான்ஸ் வரஆரம்பித்துள்ளனர்.ஈழதமிழர்களோடு ஒப்பிடும் போது இந்திய தமிழர்களுக்கு காசின் பெறுமதி அதிகம்என்பதால்,அவர்களால் ஏஜென்சி கேட்கும் தொகையை இலகுவாக கொடுக்க கூடியதாக உள்ளதாகசொல்லப்படுகின்றது.
உதாரணமாக இலங்கை காசு ஒரு கோடி என்றால்,இந்தியாவில் அது வெறும் 25-30 லட்சம்தான்.. இந்திய எட்டுகோடி தமிழர்களில் வாழ வழியில்லாமல் பரம்பரை சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு இதெல்லாம் சின்னஒரு காசு!
விடுப்பு
பாரிஸில் கைதான தமிழர்கள் தொடர்பில் தகவல்!
பாரிஸ் கலவரங்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளையோர்கள் முழுமையாகவிடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.பெற்றோர் சந்திப்புகளின் பின்னர்,சில எச்சரிக்கைகளுடன் கூடியவகையில் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே எந்தவொரு வழக்குகளும் இல்லாத நிலையிலும் அவர்களின் வயதை கருத்தில் கொண்டும்எதிர்காலங்களில் சிக்கினால் என்ன நடக்கும் என்ற தீவிரமான எச்சரிக்கைகளுக்கும் பின்னரே வழக்கில்இருந்து பெற்றோர் சகிதம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாரிஸ் வாசியான தமிழர் கருத்து தெரிவிக்கையில் வசிக்க வந்த இடங்களில் பெயரைகெடுக்காமல் இருப்பதுதான் புத்திசாலிதனம்,என்ன குழப்படி விடுறது என்றாலும் ஊருக்கு போய் விட்டுகொள்ளுங்கள்,இங்கே இருந்து அடுத்தவர்கள் பெயரையும் சேர்த்து கெடுக்காதீர்கள், அவனவன் 1000 பிரச்சினைகளுடன் கவலைகளுடன் வாழ்க்கையை கொண்டு செல்கிறான் என குறிப்பிட்டார்.