செய்திகள்
பிரான்சில் இறந்த மனிதர்! ஈஸ்டரில் உயிர்தெழுந்த அதிசயம்!
தமிழ் செய்தி: நம்பமுடியாத நிகழ்வு - புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன் இறந்தவர் மீண்டும் உயிர்பெற்றார்
ஹாட்ஸ்-டி-செய்ன்: கிறிஸ்தவ புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, வியாழன் இரவு, நான்டெர்சிறையில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறியது. ஒரு கைதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, 35 நிமிடங்களுக்குப் பிறகு அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கி உயிர் பெற்றார். ஆனால், அவரதுஉடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வியாழன் மாலை, 35 வயதான ஒரு கைதி, ஒரு குற்ற வழக்கில் தற்காலிக காவலில் ஒரு வருடமாக இருந்தவர், தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். மனநல பிரச்னைகள் உள்ள இந்த கைதியை சிறை அதிகாரிகள்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மாலை 6:40 மணியளவில், வழக்கமான சோதனையின்போது, ஒருஅதிகாரி அவரை அசைவற்ற நிலையில் கண்டார்.
மயக்க நிலையில் கைதி - மருத்துவ முயற்சிகள்
உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சிறை மருத்துவர் முதல் உதவியாக இதய மசாஜ் செய்தார். தீயணைப்புவீரர்கள் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மாலை 7:05 மணிக்கு அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
சிறையில் ஒரு கைதி இறந்தால், வழக்கமாக காவல்துறை அழைக்கப்படுவது போல, காவலர்கள் அங்கு வந்துவிசாரணையைத் தொடங்கினர். இறந்தவரின் உடல் மின்னணு கருவிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. திடீரென, மானிட்டரில் உயிர் அறிகுறிகள் தென்படத் தொடங்கின. 35 நிமிடங்களுக்கு முன்பு இறந்தவரின்நாடித்துடிப்பு மீண்டும் கிடைத்தது, ஆனால் மிகவும் பலவீனமாக இருந்தது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை மதியம் வரை அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது.
இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ள, நான்டெர் வழக்கறிஞர் அலுவலகம் "காயங்களின் காரணங்களை ஆய்வுசெய்யும்" விசாரணையைத் தொடங்கியுள்ளது. உடலில் காயங்கள் இல்லை என்றாலும், இந்த 35 நிமிட"இறப்பின்" காரணங்களை அறிய விசாரணை நடைபெறுகிறது.
Toronto திருட்டு பயல்கள் குறித்து பொலிசார் புதிய எச்சரிக்கை!
டொராண்டோ காவல்துறை, சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து நடக்கும் திருட்டுகள் குறித்து பொது பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த எச்சரிக்கையின்படி, 2024 அக்டோபர் முதல் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சந்தேக...
பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...
பிரான்ஸ்: €14,000 மதிப்பில் கொள்ளை! பன்னாட்டு கும்பல் கைவரிசை!
€14,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்த நால்வர் Bobigny நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து பன்னாட்டு திருடர்களின் கொள்ளை சதி விபரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Île-de-France பிராந்தியத்தில் உள்ள Bobigny நகரம், சமீபத்தில் இடம்பெற்ற பரபரப்பான...
பிரான்சில் Vignette Crit’Air – பெறுவது எப்படி?
பிரான்ஸில் வாகனங்களுக்கு கட்டாயமாக வைக்கப்பட வேண்டிய Vignette Crit'Air (வளிமாசுக் கட்டுப்பாட்டு வில்லை) பெறுவதற்கான சரியான முறையை தெரிந்துகொள்வது மிக முக்கியம். ஏனெனில், பலர் போலித் தளங்களின் மாயையில் விழுந்து அதிக கட்டணம்...
மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்கவும்!
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ்மக்கள் மாவீரர்களை நினைவுகூரும் இடங்களான மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான விமல் ரத்நாயக்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற விவாதத்தில்...
கனடா- அமெரிக்கா எல்லை ஒப்பந்தம்!
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கிடையேயான வரி விதிப்பு மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கிடையேயான 1908 எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் நம்பிக்கை இல்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக...
பிரான்சில் கடுமையான புயற்காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!!
காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து, கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பிரான்சின் தெற்குப் பகுதிகளில் இந்தப் புயற்காற்றின் தாக்கம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – தேடி அலையும் பெண்கள்!
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி...
கனடா மீது சீனாவின் வரி விதிப்பு!
மாறும் வர்த்தக சமநிலைகள்சீனா மற்றும் கனடா இடையேயான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கனடாவின் வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் மீது சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கனேடிய கேனோலா எண்ணெய்,...