செய்திகள்
பிரான்சில் இறந்த மனிதர்! ஈஸ்டரில் உயிர்தெழுந்த அதிசயம்!
தமிழ் செய்தி: நம்பமுடியாத நிகழ்வு - புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன் இறந்தவர் மீண்டும் உயிர்பெற்றார்
ஹாட்ஸ்-டி-செய்ன்: கிறிஸ்தவ புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, வியாழன் இரவு, நான்டெர்சிறையில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறியது. ஒரு கைதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, 35 நிமிடங்களுக்குப் பிறகு அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கி உயிர் பெற்றார். ஆனால், அவரதுஉடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வியாழன் மாலை, 35 வயதான ஒரு கைதி, ஒரு குற்ற வழக்கில் தற்காலிக காவலில் ஒரு வருடமாக இருந்தவர், தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். மனநல பிரச்னைகள் உள்ள இந்த கைதியை சிறை அதிகாரிகள்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மாலை 6:40 மணியளவில், வழக்கமான சோதனையின்போது, ஒருஅதிகாரி அவரை அசைவற்ற நிலையில் கண்டார்.
மயக்க நிலையில் கைதி - மருத்துவ முயற்சிகள்
உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சிறை மருத்துவர் முதல் உதவியாக இதய மசாஜ் செய்தார். தீயணைப்புவீரர்கள் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மாலை 7:05 மணிக்கு அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
சிறையில் ஒரு கைதி இறந்தால், வழக்கமாக காவல்துறை அழைக்கப்படுவது போல, காவலர்கள் அங்கு வந்துவிசாரணையைத் தொடங்கினர். இறந்தவரின் உடல் மின்னணு கருவிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. திடீரென, மானிட்டரில் உயிர் அறிகுறிகள் தென்படத் தொடங்கின. 35 நிமிடங்களுக்கு முன்பு இறந்தவரின்நாடித்துடிப்பு மீண்டும் கிடைத்தது, ஆனால் மிகவும் பலவீனமாக இருந்தது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை மதியம் வரை அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது.
இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ள, நான்டெர் வழக்கறிஞர் அலுவலகம் "காயங்களின் காரணங்களை ஆய்வுசெய்யும்" விசாரணையைத் தொடங்கியுள்ளது. உடலில் காயங்கள் இல்லை என்றாலும், இந்த 35 நிமிட"இறப்பின்" காரணங்களை அறிய விசாரணை நடைபெறுகிறது.
Toronto திருட்டு பயல்கள் குறித்து பொலிசார் புதிய எச்சரிக்கை!
டொராண்டோ காவல்துறை, சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து நடக்கும் திருட்டுகள் குறித்து பொது பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த எச்சரிக்கையின்படி, 2024 அக்டோபர் முதல் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சந்தேக...
பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...
பிரான்ஸ்: €14,000 மதிப்பில் கொள்ளை! பன்னாட்டு கும்பல் கைவரிசை!
€14,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்த நால்வர் Bobigny நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து பன்னாட்டு திருடர்களின் கொள்ளை சதி விபரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Île-de-France பிராந்தியத்தில் உள்ள Bobigny நகரம், சமீபத்தில் இடம்பெற்ற பரபரப்பான...
பரிஸில் நடந்த கொடூரம்: மிரட்டல், கடத்தல் சம்பவம்
பரிஸ் நகரில் பாலியல் தொழிலாளி பெண் ஒருவரை கடத்திச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 48 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் மார்ச் 13ஆம் தேதி வியாழக்கிழமை பரிஸ் 16ஆம்...
பிரித்தானியா: புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு! தீவிரமாகும் சட்டம்!
பிரித்தானிய அரசு, வெளிநாட்டுக் குற்றவாளிகளையும், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களையும் நாடுகடத்துவதை தடுக்கும் சட்டரீதியான தடைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் குற்றவாளிகள் மற்றும்...
அவசரப்பட்ட யாழ் இளைஞர்! அவல சாவு!
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய...
பிரித்தானியா: லண்டனின் சிறந்த உணவகங்கள்!
உணவுப் 🍽️ பிரியர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் ஒரு உணவு சொர்க்கம்! 2025 ஆம் ஆண்டின் சிறந்த புதிய உணவகங்கள் பற்றிய பட்டியலை Condé Nast Traveller வெளியிட்டுள்ளது, இதில்...
பிரித்தானியா: உற்பத்தித் துறையில் மாற்றம்! வேலை வாய்ப்புக்கு சவாலா?
பிரித்தானிய பொருளாதாரம் 2024 ஜனவரியில் 0.1% வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) வெளியிட்டுள்ள தரவுகள் காட்டுகின்றன. இது பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்த வளர்ச்சிக்கு எதிரான வீழ்ச்சி எனக் கருதப்படுகிறது.
உற்பத்தித் துறையின் வீழ்ச்சி...
ட்ரம்பின் அடுத்த குறி பிரான்ஸ்!
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் விஸ்கிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதிக்க திட்டமிட்டுள்ள வரிகளுக்கு பதிலடியாக, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானப் பொருட்களுக்கு 200% வரி விதிக்க உள்ளதாக...