செய்திகள்
Greater Toronto: தொடர்ந்து விலை குறையும் வீடுகள்!
கிரேட்டர் டொராண்டோ பகுதியில் வீட்டு விற்பனை குறைவு: பொருளாதார நிச்சயமற்ற நிலை காரணம்
கிரேட்டர் டொராண்டோ பகுதியில் (GTA) வீட்டு விற்பனை கணிசமாக குறைந்துள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த வீழ்ச்சிக்கு பொருளாதார நிச்சயமற்ற...
பிரான்சில் இறந்த மனிதர்! ஈஸ்டரில் உயிர்தெழுந்த அதிசயம்!
தமிழ் செய்தி: நம்பமுடியாத நிகழ்வு - புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன் இறந்தவர் மீண்டும் உயிர்பெற்றார்
ஹாட்ஸ்-டி-செய்ன்: கிறிஸ்தவ புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, வியாழன் இரவு, நான்டெர்சிறையில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறியது. ஒரு கைதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, 35 நிமிடங்களுக்குப் பிறகு அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கி உயிர் பெற்றார். ஆனால், அவரதுஉடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வியாழன் மாலை, 35 வயதான ஒரு கைதி, ஒரு குற்ற வழக்கில் தற்காலிக காவலில் ஒரு வருடமாக இருந்தவர், தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். மனநல பிரச்னைகள் உள்ள இந்த கைதியை சிறை அதிகாரிகள்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மாலை 6:40 மணியளவில், வழக்கமான சோதனையின்போது, ஒருஅதிகாரி அவரை அசைவற்ற நிலையில் கண்டார்.
மயக்க நிலையில் கைதி - மருத்துவ முயற்சிகள்
உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சிறை மருத்துவர் முதல் உதவியாக இதய மசாஜ் செய்தார். தீயணைப்புவீரர்கள் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மாலை 7:05 மணிக்கு அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
சிறையில் ஒரு கைதி இறந்தால், வழக்கமாக காவல்துறை அழைக்கப்படுவது போல, காவலர்கள் அங்கு வந்துவிசாரணையைத் தொடங்கினர். இறந்தவரின் உடல் மின்னணு கருவிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. திடீரென, மானிட்டரில் உயிர் அறிகுறிகள் தென்படத் தொடங்கின. 35 நிமிடங்களுக்கு முன்பு இறந்தவரின்நாடித்துடிப்பு மீண்டும் கிடைத்தது, ஆனால் மிகவும் பலவீனமாக இருந்தது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை மதியம் வரை அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது.
இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ள, நான்டெர் வழக்கறிஞர் அலுவலகம் "காயங்களின் காரணங்களை ஆய்வுசெய்யும்" விசாரணையைத் தொடங்கியுள்ளது. உடலில் காயங்கள் இல்லை என்றாலும், இந்த 35 நிமிட"இறப்பின்" காரணங்களை அறிய விசாரணை நடைபெறுகிறது.
Toronto திருட்டு பயல்கள் குறித்து பொலிசார் புதிய எச்சரிக்கை!
டொராண்டோ காவல்துறை, சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து நடக்கும் திருட்டுகள் குறித்து பொது பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த எச்சரிக்கையின்படி, 2024 அக்டோபர் முதல் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சந்தேக...
பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...
மெட்ரோ B நிறுத்தப்பட்டுள்ளது…தீவிர மீட்பு பணி..
லியோனில் தொழில்நுட்ப கோளாறினால் மெட்ரோ B நிறுத்தப்பட்டுள்ளது, மீண்டும் இயக்க நிலைக்கு வருவதற்கு மதியம் 12 மணி எதிர்பார்க்கப்படுகிறது. தன்னியங்க இயக்க முறைமையில் ஏற்பட்ட கோளாறுக்கு பிறகே இந்த இடைநிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
பிரான்சில் பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட துயரம்
பிறந்து 40 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று, ஆங்கில கால்வாயை கடக்கும் போது படகில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் விஸ்ஸான்ட் என்ற இடத்தில் இருந்து பிரித்தானியாவுக்கு...
மிதிவண்டி சாரதி பலி.. நாடு முழுவதும் உணர்ச்சிகரமான அஞ்சலி நிகழ்வுகள்!
கடந்த செவ்வாய்க்கிழமை பரிசில் மகிழுந்து மோதி கொல்லப்பட்ட Paul எனும் மிதிவண்டி சாரதிக்கு, சனிக்கிழமை நாடு முழுவதும் உணர்ச்சிகரமான அஞ்சலி நிகவுகள் இடம்பெற்றிருந்தன.
Place de la République பகுதியில் நேற்று மாலை...
புதிய ஓய்வூதிய சீர்திருத்தம்!
ஒரு வருடத்திற்கு முன்பு பிரான்சில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தம், பிரெஞ்சு மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. முதற்கட்டத்தில் எதிர்ப்பு, போராட்டம், மற்றும் போராட்டங்கள் இருந்தபோதிலும், இப்போது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக...
குடியேற்றம் தொடர்பாக அரசு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது
Menton இல் புலம்பெயர்வை எதிர்க்கும் அரசின் கடுமையான நிலைப்பாட்டை பிரதமர் மிச்சல் பார்னியர் மற்றும் உள்துறை அமைச்சர் புரூனோ ரெடையோ அவர்கள் வெள்ளிக்கிழமை பிரான்சு-இத்தாலி எல்லையில் உறுதி செய்தார்கள். ஜோர்ஜியா மெலோனியின் கொள்கைகளுடன்...
பாரிஸில் மரம் சரிந்ததில் தந்தை பலி ! மகள்கள் இருவர் படுகாயம் !
பாரிஸ் நகரின் 19 ஆவது வட்டாரத்தில் நேற்று மாலை (ஒக்ரோபர் 17) மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் பாதசாரியான ஆண் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்தனர்.
பாரிஸின் 19ஆம் வட்டாரத்தில் உள்ள குரியால்...