Modal title

Copyright © Newspaper Theme.

விடுப்பு

12 ராசிகளில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு இன்றைய ராசி பலன்கள்…

மேசம்: இன்று படத்துக்கு போவதால் தொழில்போட்டி குறையும்,பிள்ளைகள் லியோ பார்க்க ஆசைப்படுவதால்மனதில் சஞ்சலம் தோன்றும். ரிசபம் : வீட்டு பெண்களால் இன்று பணசெலவு உண்டாகும்,லியோ டிக்கெட் விலையை கேட்டுமயக்கமுறுவீர்கள். மிதுனம்: லியோ டிக்கெட் கிடைக்காத நண்பர்களால் சஞ்சலம் அடைவீர்கள்,லியோ க்ளைமாக்ஸ் நேரத்தில்வயிறு கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு  கடகம்: பிள்ளைகள் நலனிலும் வளர்ச்சியிலும் அக்கறை இருப்பதால் லியோ படத்துக்கு அவர்களை கூட்டிசெல்லாமல் தனியாக  செல்வீர். சிம்மம் : கவர்ச்சிகரமான ட்ரெயிலை நம்பி படம் பார்க்க வந்துவிட்டோம் என துயர் அடைவீர்.லியோ படம்நினைத்த மாதிரி இல்லாததால் மனசோர்வு அடைவீர். கன்னி: லியோவுக்கு கூட்டி செல்வதாக கொடுத்த வாக்கை உங்கள் நண்பர்கள் நிறைவேற்றாதால் ஏமாற்றம்அடைவீர்.கோபத்துக்குள்ளாகுவீர். துலாம்: சாதுரியமாக வேலையிடத்தில் பேசி லியோ செல்ல நேரத்தை ஒதுக்குவீர்.எதிர்பார்த்த உதவிகள்எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும். விருட்சிகம் : பிரச்சினைகளில் இருந்து விடுபட அஜித் ரசிகர்களை வம்பிழுப்பீர். உடல் பிரச்சினைக்காகமருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நேரிடலாம். தனுசு: மனைவி பிள்ளைகளுடன் லியோ பார்க்க வெளிகிடுவீர்.மெட்ரோ பயண தடங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள்உண்டு. மகரம்: 500 ஆ 1000 கோடி லியோ வசூல் பிரச்சினையில் அஜித் ரசிகர்களாக இருக்கும் உங்கள்நண்பர்களுக்கே உமக்கு எதிராக திரும்புவதால் மனசங்கடம் உண்டாகும். கும்பம்: உங்கள் பேச்சாற்றலால் லியோவுக்கு நன்றாக உருட்டி முட்டு கொடுத்து தாங்குவீர்.இதன் மூலம் விஜய்ரசிகர்கள் மத்தியில் மிகுந்த புகழடைவீர். மீனம்: லியோ பற்றி மற்றவர்களின் தப்பான விமர்சனத்தால் வேதனைபடுவீர்கள்,தியேட்டர் பயணங்களால்அலைச்சல் உண்டாகும்.செலவு அதிகரிக்கும்.

இலங்கை தொடர்பாக உண்மையை சொன்ன பாரிஸ் சாமியார்!

இலங்கை நாடு முழுதும் அழிந்துவிடும் எனவும் அங்கு நடக்கும் மரணங்கள்,விபத்துக்கள்,அழிவுகள் எல்லாதுர்சம்பவங்களும் இதனை காட்டுவதாக பாரிஸ் சாமியார் ஒருவர் தெரிவித்துள்ளார். மக்களின் தொடர்ச்சியான பிழையான எண்ணங்களும் செயல்களுமே இலங்கையை நரகமாக ஆக்கிகொண்டிருப்பதாகவும்,அந்த தேசம் இத்தனை பலிகளை எடுத்தும் இன்னும் அடங்கவில்லை எனவும்கூறியுள்ளார். இதற்கு பரிகாரமாக மக்கள் ஒழுங்கா மனம் திருந்தி வாழ்ந்தால் மட்டுமே நாடு மீளும் என்றும்,மக்கள் மனம்திருத்தவே இவ்வாறான அழிவுகளை நடக்குகின்றன என்றும் அழியிறவர்கள் அழிந்து மீதி திருந்துகிறவர்கள்திருந்தி சரியாக வாழும் காலம் உலகில் இலங்கையே சொர்க்கம் என்று கூறியுள்ளார். பக்தர் ஒருவரின் கேள்விக்கு விளக்கம் கொடுக்கும் போதே இதனை கூறியுள்ளார். அண்மைகாலமாக இந்தசாமியார் தனது கருத்துக்களால் பாரிஸில் வளர்ந்து புகழ்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது...

We noticed you're visiting from France. We've updated our prices to Euro for your shopping convenience. Use United States (US) dollar instead. Dismiss