Pas-de-Calais பகுதியில் குடியேற்றவாசிகள் பயணித்த ஒரு றப்பர் படகை, Des gendarmes கத்தி கொண்டு கிழித்த சம்பவம் பரவலான கண்டனங்களைப் பெற்றுள்ளது. Osmose 62 அமைப்பின் தலைவர் Dany Patoux, இந்தச் செயலை “மனிதாபிமானமற்ற செயல்” எனக் கடுமையாகக்
கண்டித்துள்ளார். இது புலம்பெயர்ந்தோரின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், Maritime International Laws மீறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் Dany Patoux மேலும் கூறுகையில், இதுபோன்ற நடவடிக்கைகளால் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க முடியாது, மாறாக இது மனித
கடத்தல்காரர்களுக்கு எந்தவிதத் தடையையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்தார். ஆனால், Britain அரசு இந்த “கடுமையான” நடவடிக்கைகளை ஆதரித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் 89 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர். Osmose 62 அமைப்பு இதனை “போர்க் காட்சியைப் போன்றது” என
விவரித்து, France மற்றும் Britain அரசுகளின் புதிய கொள்கை மாற்றங்களால் நிலைமை மேலும் மோசமடைவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, Président Emmanuel Macron செவ்வாய்க்கிழமை Britain நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் Parliament இல் Sécurité மற்றும் Immigration தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.