Read More

பாரிஸ் மெட்ரோவில் இன்று தாக்குதல்! இரு பெண்கள்…

- Advertisement -

பாரிஸ்: மே 18, 2025 காலை, Pyrénées மெட்ரோ நிலையத்தில் ,வரிசை 11ல் இரு பெண்கள் ஒரு மணி நேர இடைவெளியில் தாக்கப்பட்டனர். ஒரே நபரால் கழுத்தை நெரித்து தாக்கப்பட்ட இவர்களில் ஒருவர் மயக்கமடைந்தார். RATP பாதுகாப்பு அதிகாரிகள் (GPSR) குற்றவாளியை கைது செய்தனர். அவரது மனநிலையை மதிப்பிட பரிசோதனை திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் தாக்குதல் காலை 8:30 மணியளவில் நடந்தது. Pyrénées நிலைய எஸ்கலேட்டரில் ஒரு பெண்ணை பின்னால் இருந்து கழுத்தை நெறித்து தாக்கினார். பயணிகள் தலையிட்டதால், குற்றவாளி Avenue Simon-Bolivar வழியாக தப்பினார். ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் நிலையத்திற்கு திரும்பி மற்றொரு பெண்ணை தாக்கினார். இம்முறை RATP அதிகாரிகள் தலையிட்டு, McDonald’s அருகே அவரை கைது செய்தனர்.

Voyagez en sécurité à Paris avec une assurance voyage – À Paris, voyagez en toute tranquillité avec “assurance voyage France”. Que vous preniez le métro ou le RER, une “assurance transport Paris 2025” vous protège contre les imprévus comme les incidents ou agressions.

- Advertisement -

Obtenez un “devis assurance en ligne France” sur Travel Safe, offrant des polices adaptées à la communauté tamoule. Ces assurances couvrent vos trajets quotidiens, garantissant une sérénité. Consultez un “spécialiste assurance Paris” pour une couverture personnalisée et explorez Paris, de Pyrénées à Châtelet, sans crainte. Souscrivez dès maintenant pour voyager protégé !

பாதிக்கப்பட்ட இரு பெண்களும் தீயணைப்பு வீரர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒருவர் கர்ப்பிணி என நம்பப்படுகிறது. RATP, “இரு பயணிகள் மீதான தாக்குதலால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துளோம் ” என்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்தது. குற்றவாளி Rue de l’Évangile (18வது மாவட்டம்) இல் உள்ள பிராந்திய போக்குவரத்து பாதுகாப்பு சேவைக்கு ஒப்படைக்கப்பட்டார். பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கவில்லை.