Banque de France வங்கி இன்று (ஏப்ரல் 17) அறிவித்துள்ள முக்கிய செய்தியில் ஈஸ்ட்டர் விடுமுறையையடுத்து வங்கி பரிவர்த்தனைகளில் தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது, இந்த செய்தி பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, சில தொலைபேசி மூலமான பண பரிவர்த்தனைகள் தற்காலிகமாக இரத்து செய்யப்படவுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஏப்ரல் 17 வியாழக்கிழமை மாலை 6 மணி முதல், ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணி வரை சில வங்கிகள் பரிவர்த்தனைகள் செயல்படாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளன.
இந்தத் தடையினால் ஒரே வங்கிக்குள் உள்ள கணக்குகளுக்கிடையிலான பரிவர்த்தனைகள் வழக்கம்போல் செயல்படும். ஆனால், வேறு வங்கிகளுக்கு (interbank transfers) அனுப்பப்படும் பண பரிமாற்றங்கள் இந்த நாட்களில் இடைநிறுத்தப்படும் என வங்கி அறிவித்துள்ளது.
இது போன்ற நடவடிக்கைகள் பொதுவாக பண்டிகை காலங்களில் தொலைபேசி அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகள் மீது பாதுகாப்பு காரணமாக மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும் நாட்களில், இணைய மோசடிகள் அதிகம் நடக்கும் என்பதால், இந்த முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், வங்கி வட்டாரங்கள் சில தகவல்களை பகிர மறுத்தாலும், இது பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். வாடிக்கையாளர்களை குழப்பத்திற்குள்ளாக்காதவாறு, தடை செய்யப்படும் வங்கிகளின் முழுமையான விபரங்களை இன்னும் வெளியிட வங்கி தயங்குகிறது.
வங்கி அதிகாரிகள், தொலைபேசி மூலம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள், குறிப்பாக பெரிய தொகைகளை அனுப்புவோருக்கு மிகுந்த அவதானம் தேவை என வலியுறுத்துகின்றனர். பரிவர்த்தனைகள் தடை செய்யப்படும் நாட்களில் அவசரமாக பணம் அனுப்ப வேண்டியதாயின், மாற்று வழிகள் (முகாமைத்துவச் செயலிகள், டெபிட்/கடன் அட்டைகள், அல்லது நேரடி வங்கி செலுத்தல்கள்) குறித்து பரிசீலிக்க வேண்டியது அவசியம்.
🔍 இது உங்கள் மீது எப்படி தாக்கம் ஏற்படுத்தும்?
✅ உங்கள் மற்றும் உங்கள் பெற்றோர்களின் வங்கிக்கணக்குகள் ஒரே வங்கியில் இருந்தால் பரிவர்த்தனையில் தடையில்லை.
🚫 வேறு வங்கிகளுக்கு பணம் அனுப்ப வேண்டியிருந்தால், அது தாமதமாகும்.
🕵️♀️ மோசடி முயற்சிகளை தவிர்க்க பண்டிகை காலங்களில் கூடுதல் கவனம் தேவை.
📞 தொலைபேசி மூல பரிவர்த்தனைகளை இப்போது செய்வது சிக்கலை உருவாக்கலாம்.
பொதுமக்கள் இந்தத் தகவலை கவனமாக எடுத்துக்கொண்டு, திட்டமிட்ட வகையில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டுமென வங்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.