39°C–45°C: அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பக் நிலை, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையை விட அதிகமாக அதாவது ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழுமையான விபரங்கள் கீழே:
வானிலை ஆய்வு மையம்
Department of Meteorology
அறிக்கை எண்: 01
நிறம்: அம்பர் (மஞ்சள் நிறம் சார்ந்த அல்லது வெளிர் மஞ்சள்)
வெப்பநிலை எச்சரிக்கை
அடுத்து வரும் 24 மணிநேரத்திற்கான காலநிலை நிலவரம் வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
28 மார்ச் 2025, பிற்பகல் 4.00 செய்தி வெளியிடப்பட்டது.
வடக்கு, வட மத்திய, வட மேற்கு, சபரகமுவா மாகாணங்களிலும், திரிகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் அடுத்து வரும் 24 மணிநேரத்திற்கான காலநிலை நிலவரம்.
தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள்!
உடலில் உணரும் வெப்ப நிலை (Heat Index) ‘எச்சரிக்கை நிலை’ அதாவது உடல் எரிப்பது போன்ற அதீத வெப்பத்தை உணரும் நிலை (Caution Level) வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இது வடக்கு, வட மத்திய, வட மேற்கு, சபரகமுவா மாகாணங்கள் மற்றும் திரிகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நிகழலாம்.
எச்சரிக்கை நிலைகள்
ஆபத்து (சிவப்பு)
தீவிர எச்சரிக்கை (தங்க மஞ்சள்/ஆரஞ்சு)
எச்சரிக்கை (மஞ்சள்)
சாதாரணம் (மங்கலான மஞ்சள்/ வெளிர் மஞ்சள் )
மேலேகுறிப்பிட்ட நிறங்களின் அடிப்படையில்
இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் வெப்பத்தால் ஏற்படும் அபாய நிலைகளை காண்பிக்கும் வடைபடத்தை உத்தியோகபூர்வ வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் பார்வையிடலாம்.
வெப்பக்குறியீட்டு அளவுகள் மற்றும் எச்சரிக்கைகள்
வெப்ப நிலை (°C) | எச்சரிக்கை நிலை |
---|---|
27-38 | சாதாரணம் |
39-45 | எச்சரிக்கை – நீண்ட நேரம் வெப்பத்திற்கு உட்படும்போது களைப்பு ஏற்படலாம். தொடர்ந்த செயல்பாடு வெப்ப தசை வலியினை ஏற்படுத்தலாம். |
46-52 | தீவிர எச்சரிக்கை – வெப்ப தசை வலி மற்றும் வெப்பநிலை தீர்ச்சுடல் (Heat Exhaustion) ஏற்படும் வாய்ப்பு. தொடர்ந்த செயல்பாடு வெப்ப பக்கவிளைவுகளுக்குக் காரணமாகலாம். |
52℃ மேல் | ஆபத்து – வெப்ப தசை வலி மற்றும் வெப்பநிலை தீர்ச்சுடல் ஏற்பட வாய்ப்பு அதிகம்; வெப்பக்காய்ச்சல் (Heat Stroke) அதிக சாத்தியமுள்ளது. |
தொடர்பு தகவல்
வானிலை ஆய்வு மையம் (Department of Meteorology)
தொலைபேசி: 011 2686686
தொலைநகல் (Fax): 011 2691443
மின்னஞ்சல்: metnmc@gmail.com
வலைத்தளம்: www.meteo.gov.lk