உளுத்தங்களி செய்வது எப்படி…
தேவையான பொருள்கள்
பச்சரிசி – 4 கப்
தோலுடன் கூடிய உளுத்தம்பருப்பு – 1 கப்
வட்டு கருப்பட்டி – 2
நல்லெண்ணெய் – 1 கப்
நெய் – 1/4 கப்
செய்முறை
பச்சரிசியையும், தோலுடன் கூடிய கறுப்பு உளுத்தம்பருப்பையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டு, மாவு மிஷினில் கொடுத்து, மாவாகத் திரித்து, வைத்துக் கொள்ளவும்.
இதுதான் களி மாவு.
➡️திரித்த மாவில் இருந்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
➡️கருப்பட்டியை, தூளாகத் தட்டி, ஒன்றரை முதல் இரண்டு கப் வரை எடுத்துக் கொள்ளவும்.
➡️அடுப்பில் 2 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, கருப்பட்டித் தூளை அதில் போட்டு, கரைய விடவும்.
➡️கரைந்தால் போதும், பாகு வைக்க வேண்டாம்.
➡️சிறிது ஆறியதும், கருப்பட்டி தண்ணீரை, வடிகட்டியால் வடிகட்டிக் கொள்ளவும்.
➡️குக்கருக்குள் வைக்கக் கூடிய ஒரு பாத்திரத்தில், இந்தத் தண்ணீரை ஊற்றவும்.
👉இதில், களி மாவைக் கொட்டி, கட்டியில்லாமல் கரைக்கவும்.
👉அரை கப் நல்லெண்ணெயையும் இதில் ஊற்றி, கலந்து கொள்ளவும்.
👉குக்கருக்குள் இந்தப் பாத்திரத்தை வைத்து, மூடி, 3 – 4 விசில் வர விடவும்.
👉ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து, பாத்திரத்தை வெளியே எடுக்கவும்.
👉ஒரு மரக் கரண்டியால், நன்றாகக் கிளறவும்.
👉தண்ணீரைத் தொட்டுக் கொண்டு, தொட்டுப் பார்த்தால், அதிகம் ஒட்டாமல், வெந்திருக்க வேண்டும்.
👉கை பொறுக்கும் சூடு ஆனதும், கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு, ஆரஞ்சுப் பழ அளவுக்கு, உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
பரிமாறும்போது, ஒரு கிண்ணத்தில், ஒரு உருண்டை வைத்து, அதன் நடுவில், கட்டை விரலால் சிறிய பள்ளம் செய்து, அதில் உருக்கிய நெய் ஊற்றி, நெய்யைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
பருவம் அடைந்த பெண்களுக்கு, அத்தை, மாமி முறையுள்ளவர்கள் களி செய்து கொண்டு வந்து தருவார்கள். உளுந்து இடுப்பு எலும்பைப் பலப்படுத்தும். கருப்பட்டி, நல்லெண்ணெய், நெய், குளிர்ச்சியையும் உடலுக்கு வலுவையும் கூட்டும். மாதமொரு முறை, இந்தக் களியை செய்து, சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகளைப் பலப்படுத்தி, உடலை வலுவாக்கும்.
இனிப்புப் பொருட்களில், அஸ்கா எனப்படும் சர்க்கரை, மண்டை வெல்லம், அச்சு வெல்லம், பனங்கற்கண்டு, வட்டு கருப்பட்டி என்று பல விதங்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. ஒவ்வொரு நிறம். உளுத்தங்களிக்கு வட்டுக் கருப்பட்டிதான் நன்றாக இருக்கும்..
உளுந்தங்களி (உளுந்து கலந்த அள்ளி) ஒரு பாரம்பரிய தமிழ் உணவு. இதனை சாப்பிடுவதால் பல உடல்நல நன்மைகள் கிடைக்கும்.
உளுந்தங்களியின் உடல்நல நன்மைகள்:
➡️எலும்புகளுக்கு பலம் 🦴
உளுந்து கல்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இவை எலும்புகளை வலுப்படுத்தி, ஆஸ்டியோபரோசிஸ் (osteoporosis) போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளைத் தடுக்க உதவும்.
➡️நரம்புத்தளர்ச்சியை குறைக்கும் 🧠
இதில் உள்ள மாக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நரம்புகளுக்கு ஆற்றல் தரும்.
மனஅழுத்தத்தைக் குறைத்து நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.
➡️சுவாச பிரச்சினைகளுக்கு நல்லது
கஷாயமாக அரைத்துச் சாப்பிட்டால் சளி, ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளுக்கு நிவாரணம் தரும்.
➡️சக்தி மிகுந்த உணவு 💪
உடலுக்கு தேவையான புரதச்சத்து (Protein) மற்றும் நார்ச்சத்து (Fiber) நிறைந்துள்ளது.
இது தசைகள் வலுவடைய உதவுகிறது.
மலச்சிக்கல் நீக்கும்
உளுந்து நார்ச்சத்து நிறைந்ததால் ஜீரணத்திற்கு உதவுகிறது.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இதைச் சாப்பிடலாம்.
➡️குழந்தைகளுக்கு ஆரோக்கியம் 👶
சிறு குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாகும்.
➡️முடி வளர்ச்சிக்கு உதவும் 💆♀️
உளுந்தில் உள்ள இரும்புச்சத்து முடியின் வேர்களை வலுவாக மாற்றி வளர்ச்சிக்கு உதவுகிறது.
எப்படி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்?
✅ உளுந்தங்களி
✅ உளுந்து தோசை
✅ உளுந்து களி
✅ உளுந்து அடை
✅ உளுந்து லட்டு
எச்சரிக்கை:
அதிகமாக உட்கொண்டால் சிலருக்கு அஜீரணம் ஏற்படலாம்.
அதிகப்படியான உளுந்து உட்கொள்வது கைவலி, மூட்டுவலி உள்ளவர்களுக்கு பாதிப்பளிக்கலாம்.