Read More

spot_img

கனடா: மவுசு கூடிய கனேடிய பல்கலைக்கழகங்கள்! அப்படி என்னதான் இருக்கு?

அமெரிக்கா முழுவதும் உள்ள மாணவர்கள், இப்போது அதிக அளவில் தமது மேற்படிப்புக்காக கனடாவின் பல்கலைக்கழகங்களை நாடுகின்றார்கள் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விண்ணப்பங்களில் 27% உயர்வு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கல்விக் கொள்கைகள் குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் பெடரல் நிதி குறைப்பும், வெளிநாட்டு மாணவர்களின் விசா அனுமதிகளில் கடுமை ஏற்படுத்தியதுமே – இந்த மாற்றத்திற்கு காரணமாக கருதப்படுகிறது.

வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் (UBC) தெரிவித்ததின்படி, 2025 கல்வியாண்டுக்கான பட்டதாரி படிப்புகளுக்கான அமெரிக்க விண்ணப்பங்கள், 2024-இல் இருந்ததைவிட 27 சதவிகிதம் அதிகமாக உள்ளன.

அமெரிக்க மாணவர்களை தக்க வைக்கும் முயற்சிகள்
செப்டம்பர் மாதம் தொடங்கும் படிப்புகளுக்காக, அமெரிக்க மாணவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை விரைவில் செயலாக்கும் திட்டத்துடன், வான்கூவர் வளாகம் மீண்டும் பட்டதாரி சேர்க்கைகளைத் துவங்கியுள்ளது.

அதிகமான விண்ணப்பங்கள் பெற்ற பல்கலைக்கழகங்கள்
ரொறன்ரோ பல்கலைக்கழகம், மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் கனடாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக இருக்கின்றது. 2025 கல்வியாண்டிற்கான ஜனவரி காலக்கெடுவுக்குள், இது அமெரிக்க விண்ணப்பங்களை அதிகமாகப் பெற்றுள்ளது. அதேபோல், வாட்டர்லூ பல்கலைக்கழகமும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளது.

இவ்வாறு மாணவர்களை எண்ணிக்கை அதிகரிப்பதற்கு என்ன காரணமென ரொறன்ரோ மற்றும் வாட்டர்லூ பல்கலைக்கழகங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தாத நிலையில், வான்கூவர் வளாகம் மட்டும் ட்ரம்பின் கல்விக் கொள்கைகளே முக்கிய காரணம் என தெளிவாக கூறியுள்ளது.

நாடுகடத்தல் மற்றும் விசா ரத்து நடவடிக்கைகள்
ட்ரம்ப் நிர்வாகம் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலரைக் குறைத்து, யூத எதிர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டி, பல்கலைக்கழகங்களை கொள்கை மாற்றத்துக்குத் ஆளாகியுள்ளது.

மேலும், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற சில வெளிநாட்டு மாணவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதுடன், அவர்களுக்கான நாடுகடத்தல் நடவடிக்கையும்
முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், நூற்றுக்கணக்கான மாணவர்கள் விசா ரத்தாகி அமெரிக்காவில் செய்வதறியாது தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கனடாவின் புதிய வரம்புகள்
ஒரு புறம் அமெரிக்காவில் நிலவும் ஒடுக்குமுறைகள் காரணமாக மாணவர்கள் கனடாவை நாடி வருகிறார்கள் என்றாலும், கனடா தனது சர்வதேச மாணவர் எண்ணிக்கையை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கட்டுப்படுத்தி வருகிறது.
இதன் விளைவாக, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் மாணவர்களுக்கு உள்ள இடங்கள் குறைந்துவிட்டது. எதிர்காலத்தில் சர்வதேச மாணவர்களுக்கு நுழைவுத் தடை அல்லது இட வசதியில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img