காமமும் காதலும் மனித வாழ்வில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் இரு சக்திகள். இவை சில நேரங்களில் ஒருவர் தன் துணைக்கு தெரியாமல் ரகசியமாக தவறான உறவொன்றை வைத்திருக்க தூண்டலாம். மாறாக சில நேரங்களில் தன் துணையுடனான உறவினை மேலும் உறுதிப்படுத்தலாம். பொதுவாக மேற்கத்திய உலகம் காமத்தில் பெரும் கொண்டாட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம், ஆனால் உண்மையில் அவர்கள்தான் காமத்தில் மிகுந்த வறட்சியாக இருப்பதாகத் தோன்றுகிறது. மேலும் உணர்வுகளின் சிக்கலான நிலையான ஒருவனுக்கு ஒருத்தி கோட்பாட்டையும் மிக இறுக்கமாகப் பற்ற விரும்புபவர்களாகவும் அவர்களே இருக்கிறார்கள்.
காதல், காமம், உறவுகள்
காதல் உறவு என்று வருகையில் அதில் மனிதர்கள் எதிர்பார்க்கும் முக்கியமான அம்சங்கள் எவை? உள்ளம் சார்ந்த உணர்வுப் பூர்த்தியும், உடலுறவு சார்ந்த திருப்தியுமாக இரண்டுமே முக்கியமானவை ஒன்றிலொன்று சார்ந்திருப்பவை. சில நேரங்களில், உறவுகள் காலப்போக்கில் தடுமாறுவதற்கு காரணம், உணர்வுப்பூர்வமான தொடர்பு குறைவதா அல்லது உடலுறவு திருப்தி இல்லாமையா என்பதில் பெரும்பாலான மக்கள் முரண்பாடான கருத்துகளைக் கொண்டிருப்பார்கள். தவறான உறவு ஏன் ஏற்படுகின்றது என்ற கேள்விக்கனான மேற்கத்தேய உலகின் பதிலை திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் காணலாம்.
unfaithful முதற்கொண்டு தவறான உறவுக் கதைகள் கொண்ட திரைப்படங்கள் ஒரு வன்முறையான முடிவையே கொண்டிருக்கின்றன. அதன்வழி தவறான உறவு பாவம் என்பதை வலியுறுத்திக் கொண்டேதான் இருந்திருக்கிறார்கள். பிறழ்உறவு ஏன் ஏற்படுகிறது என்கிற ஆராய்ச்சிக்கு மிகத் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தார்கள். அதுவும் அப்பெண் தனது மத்திம வயதுகளைக் கடந்து தன் அழகின் மீதான கர்வங்களை இழந்துகொண்டிருக்கக் கூடிய ஒருத்தியாகவே இருந்தாள். குடும்பம் குழந்தைகள் என வாழும் மத்திம வயதுப் பெண்ணுக்கு சரிவர காமம் கிட்டாத நிலையே பிறழ்உறவுக்கு காரணம் என்கிற முடிவுக்கு வருகிறார்கள்.
ஒரு பெண்ணின் காம இச்சசைகள் பூர்த்தியாகாத போது பிறழ்உறவின் கதவுகள் திறக்கப்படுவதாக நம்பினார்கள். “நெட்ப்ளிக்ஸ்-ல் செக்ஸ் லைஃப் சீரிஸ்” முழுக்க இப்படியான வைல்ட் ஃபேண்டசிகளால் ஆனது. தனது இளமைக் காலத்து காமக் களியாட்டங்களை எழுதிவைத்து அதனைக் கணவன் கண்படும்படி செய்கிறாள் நாயகி. அதனை வாசித்தவன் அதில் எழுதியிருக்கும் செக்சுவல் ஃபேண்டசிகளை ஆனமட்டும் நிறைவேற்றப் பார்க்கிறான். அவனுடைய வயதும் மனமும் அதற்கு இசைய மறுக்கின்றன. காமத்திற்காக அவளது இளமைக்காலத்து காதலனுடன் பிறழ்உறவு ஏற்படுகிறது.
Babygirl திரைப்படத்தில் நாயகிக்கு அதே போலவே காம இச்சைகள் பூர்த்தியாகாத நிலை. அவள் பணி நிமித்தமாக அவளை விட வயதில் சிறிய ஓர் இளைஞனைச் சந்திக்கிறாள். இருவருக்குள்ளும் ஊடாடும் ரசவாதங்கள் காமத்தை நோக்கியே தள்ளுகின்றது. இருவருக்கும் இடையேயான அதிக வயது வித்தியாசங்களை எண்ணி எண்ணியே மருண்டு கொண்டிருப்பாள். இந்த வயது வித்தியாசம் ஓர் உறவை வைத்துக் கொள்ளவும் முடியாமல் இறக்கிவிடவும் முடியாமல் தத்தளிக்கும். இறுதியில் காமமே வெல்லும், அவனைப் புணர்வாள்.
“நெட்ப்ளிக்ஸ்ன் obsessed” சீரிஸில் நாயகி ஆண்களை டாமினன்ட் செய்யக்கூடிய ஒருத்தியாக இருப்பாள், ஆண்களை தன் கைப்பாவையாக்கி வைத்திருப்பாள். “Babygirlல்” நாயகன் டாமினன்ட் செய்பவனாக இருப்பான். எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய இடத்தில இருக்கின்ற பெண், தன்னை அடிமையாக நடத்து அதுதான் எனக்கு காமத்தின் உச்சம் என ஒப்புக்கொடுக்கிறாள்.
“செக்ஸ் எஜூகேசன்(Sex Education) சீரிஸில் ஒரு ஆசிரியை வருவார். பொதுச் சமூகத்தில் மதிப்புமிக்க ஆசிரியை, அவருக்கு அவரை மோசமாக வசைபாடிக் கொண்டே புணரவேண்டும். அது அவருடைய செக்ஸுவல் ஃபேண்டசி.
“Liberal Arts” திரைப்படத்தில் “Babygirl” திரைப்படத்திற்கு நேர்மாறாக நாயகன் வயதில் அதிகமானவனாகவும் நாயகி வயதில் சிறிய பெண்ணாகவும் இருப்பாள். அவன் அவளைப் புணர்வதற்கு மறுப்பான். காமம் மிகமிகச் சிக்கலானது. காமத்தால் இருவருக்குள் உண்டான உரிமைகள் அறுபடும் பொழுது அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது. இவர்கள் அடைந்திருக்கும் கோட்பாட்டிற்கு ஏற்ப அவளுக்கு மத்திம வயது வந்ததும் இவன் வயோதிகன் ஆகியிருப்பான். அங்கொரு பிறழ்உறவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கவே செய்கிறது அல்லவா!
“babygirl” திரைப்படம் இம்மாதிரி பிறழ்உறவுகள் ஏற்படாமல் இருக்க பெண்ணின் செக்ஸுவல் ஃபேன்டசிகளை இணையரே தீர்த்து வைக்கின்ற ஒரு முடிவைச் சொல்கிறது. பெண்கள் தங்கள் செக்ஸுவல் ஃபேன்டசி என்ன என்பதை தெளிவாக தனது இணையருக்குப் புரியவைக்கச் சொல்கிறது, ஆனால் அதுவுமே எந்தளவிற்கு நீண்டநாள் பலன் தரும் என்று தெரியவில்லை, 2014 ல் வெளிவந்த “i-origins” திரைப்படத்தில் ஏற்கனவே இதனைத் தொட்டிருக்கிறார்கள்
“i-origins” திரைப்படத்தில் தன்னுடைய காதலியோடு படுக்கையில் இருக்கும்போது அவள் உடலில் இருந்து வெளிவரும் fragrance பிடித்துப்போய் அதன் பெயர் கேட்கிறான். அவள் சொல்ல மறுக்கிறாள். பெயர் தெரியாத நறுமணம் சூழ அவளைப் புணர்கிறான்.
இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்
வெகு சீக்கிரமே அவள் விபத்தில் இறந்து போகிறாள்
ஆறுதலாக வரும் தன் லேப் அஸிஸ்டன்டை விரும்பி மணமுடித்து வாழ்ந்து வருகிறான். ஏழு வருடம் ஆயிற்று. அவள் இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். இந்தச் சூழலில் ஒரு உணவகத்தில் தன் காதலி மீது வீசிய அதே நறுமணம், உணவு பரிமாறும் பெண்ணிடம் இருப்பதைக் காண்கிறான். அவள் அதன் பெயரை சொல்கிறாள். (Lancome Tresor Eau De Parfum Spray)
அதனை வாங்கி வந்து தன் தனியறையில் ஸ்ப்ரே செய்கிறான். லேப்டாப்பில் அவன் காதலியோடு இருந்த புகைப்படங்கள் மற்றும் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்தரங்க வீடியோவை ஓடவிட்டு கிளர்ச்சியாகி சுயஇன்பம் செய்யத் துவங்குகிறான்.
அறையின் கதவு திறக்கப்பட்டு மனைவி உள்ளே நுழைகிறாள், சட்டென்று லேப்டாப்பை மூடிவைத்து, சுயஇன்பம் செய்வதை மனைவி பார்த்துவிட்டாளே என்று தலைகுனிந்து அமர்ந்திருக்கிறான்.
அவள் அவன் அருகில் வந்து கன்னம் வருடிச் சொல்வாள். don’t stop, i wanna know what’s turning you on.
அவளுக்கு தெரியாது அவன் எதைப்பார்த்து சுய இன்பம் செய்து கொண்டிருந்தான் என்று.
அவள் அறிந்துகொள்ள விரும்புகிறாள், தன்னால் தரமுடியாத தன்னிடம் கிடைக்காத ஏதோ ஒன்று அவனை காமத்தின்பால் உந்துகிறது. அதனால்தான் தன்னை புணராமல் சுயஇன்பம் செய்கிறான். அது எதுவென்று அறிந்து அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு கேட்கிறாள் ”i wanna know what’s turning you on” இதனை தடைகளற்ற புரிதல் எனக்கொள்ளலாம்.
“modern love season 1 episode 4 – Rallying to Keep the Game Alive.” இதில் அதே போல மத்திம வயதுகளை கடந்த தம்பதியர், தங்கள் வாழ்வில் எல்லா வசீகரங்களும் இழந்துவிட்டதான வருத்தத்தில் இருப்பவர்கள், எப்படி இந்த உறவை உயிர்ப்புடன் வைத்திருப்பது என ஆலோசித்து ஒன்றாக அதிக நேரத்தைச் செலவழித்து உறவைப் புதுப்பிப்பார்கள்.
‘Babygirl’ போன்ற திரைப்படங்கள், சில நேரங்களில் பெண்கள் தங்களது செக்ஸுவல் ஃபேண்டசிகளைத் திறந்துவைத்து பேசுவதன் மூலம் உறவை மீட்டெடுக்க முடியும் என்ற கருத்தினைக் கூறுகின்றன. ஆனால் உண்மையில் இது உறவினை நிலையானதாக வைத்திருக்க முடியுமா என்பது கேள்வியே. ‘i-Origins’ போன்ற திரைப்படங்கள், நினைவுகளும் புணர்ச்சியும் எவ்வளவு ஆழமாக மனதில் பதியக் கூடியவை என்பதை உணர்த்துகின்றன. மனிதர்களுக்கு இடையிலான ஈர்ப்பு ஒரு தனிப்பட்ட உணர்வு மட்டுமல்ல, அது நினைவுகளும், அனுபவங்களும், வாசனைகளும், இடங்களும் சார்ந்திருக்கலாம் என்பதையும் விளக்குகின்றன.
உறவுகளில் நேரம், பகிர்வு, புரிதல்
நேற்றைய காதல், இன்று காதலாக இருக்க முடியாது. இன்று காதலாக இல்லாத ஒன்றும் நாளை காதலாக மாறலாம். ‘Modern Love’ போன்ற தொடர்கள் உறவுகளை புதுப்பிக்க அதிகமான நேரம் செலவழிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. காதலால் மட்டுமே உறவை நீடிக்கச் செய்ய முடியாது, அதற்குப் பின்னணியில் பரஸ்பர புரிதலும், ஒருவருக்கொருவர் நேரம் செலவளிப்பதற்கான மனநிலையில் இருப்பதும்தான் உறவை நீடிக்கச் செய்யும்.
தொலைதூர உறவுகள், கலாச்சார வித்தியாசங்கள், சமூகக் கட்டுப்பாடுகள் போன்றவை உறவுகளில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தலாம். இருப்பினும், உண்மையான காதல் பரஸ்பர மரியாதையும், தன்னலமில்லாத பாசத்தையும் கொண்டிருந்தால், உறவு நீடிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.
காமம், காதல், மற்றும் சமூக நோக்குகள்
மேற்கத்திய உலகம் தவறான உறவுகளைக் காமத்தை மையப்படுத்தியே ஆராய்ந்திருக்கலாம். ஆனால் உண்மையில், காதலுக்கும், காமத்திற்கும் இடையில் ஒரு தீவிரமான சமபங்கு இருப்பதை ஆழமாகக் கவனிப்பதன் மூலம் காண முடிகிறது. உலகம் முழுவதிலும், சில தவறான உறவுகள் காமத்தைத் தாண்டி காதலின் காவிய அந்தஸ்த்தை எட்டுகின்றன. உண்மையான காதல் என்றால் அது உடல் மட்டுமல்ல, அதன் இரகசியத்தன்மை இரு உள்ளங்களை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டும்.
நவீன உலகத்தில், தனிப்பட்ட சுதந்திரம் முக்கியமானதாக மாறியுள்ள நிலையில், உறவுகள் எவ்வாறு மாற்றம் அடைகின்றன என்பதற்கான விவாதங்கள் அதிகமாகின்றன. காதல், காமம், உறவு ஆகியவை ஒரே நேரத்தில் சமநிலை உடையதாக இருப்பது கடினமானதாக இருந்தாலும், அதன் உண்மையான அர்த்தம் அன்பு மற்றும் புரிதலிலேயே இருக்கிறது.