சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நிறுவனம் தனது பயணிகளுக்கான புதிய பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துள்ளது. 2025 ஏப்ரல் 1 முதல், SIA விமானங்களில் பயணிகளுக்கு பவர் பேங்க்களை (Power Banks) விமான பயணத்தின் முழு நேரத்திலும் விமானத்தின் யூ.எஸ்.பி (USB) போர்ட்டுகளுடன் இணைத்து சார்ஜ் செய்வது அல்லது பவர் பேங்க்களை(Power Banks) பயன்படுத்தி தனிப்பட்ட சாதனங்களை சார்ஜ் செய்வது அனுமதி இல்லை.
ஏன் இந்த புதிய விதிமுறை?
SIA குழுமம் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA) வழங்கிய ஆபத்தான பொருட்கள் விதிமுறைகளை (Dangerous Goods Regulations – DGR) பின்பற்றுகிறது. லித்தியம் பேட்டரிகளின் தீவிர ஆபத்து காரணமாக, விமானப் பயணங்களின் போது அதிக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
பவர் பேங்குகள்(Power Banks) தொடர்பான முக்கிய வழிமுறைகள்:
பயணிகள் பவர் பேங்க்களை(Power Banks) கேபின் பாகேஜில் மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும். அவை செக்-இன் பாகேஜில் அனுமதிக்கப்படாது.
100Wh வரை திறன் கொண்ட பவர் பேங்க்களை(Power Banks) எந்தவொரு சிறப்பு அனுமதியும் இல்லாமல் கொண்டு செல்லலாம்.
100Wh – 160Wh இடைப்பட்ட திறன் கொண்ட பவர் பேங்க்களுக்கு(Power Banks) விமான நிறுவனத்தின் முன்கூட்டிய அனுமதி தேவைப்படும்.
160Wh திறனை விட அதிக திறன் கொண்ட பவர் பேங்க்கள்(Power Banks) எந்தவொரு சூழ்நிலையிலும் விமானத்தில் அனுமதிக்கப்படாது.
பயணிகள என்ன செய்ய வேண்டும்?
புறப்படும் முன் பவர் பேங்கின்(Power Banks) திறனை சரிபார்க்கவும் (Wh அளவை பொதுவாக சாதனத்தின் மீது காணலாம்).
விமான பயணத்தின்போது பவர் பேங்க்களை(Power Banks) கைப்பையில் பாதுகாப்பாக வைத்திருக்கவும்.
SIA வழங்கிய பயண விதிமுறைகளை சரிபார்த்து, மேலதிக சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை (www.singaporeair.com) அல்லது பயண அலுவலகங்களை அணுகவும்.
SIA நிறுவனம், பயணிகளின் பாதுகாப்பு எப்போதும் முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என்பதை வலியுறுத்தி, இந்த மாற்றத்திற்கான பயணிகளின் புரிதலை எதிர்பார்க்கிறது.
இந்த அறிவிப்பு 12 மார்ச் 2025, 12:00 PM (Singapore Time) அன்று வெளியிடப்பட்டது.