Read More

Read More

பாரிஸ்: அகதிகள் நாட்டை விட்டு வெளியேற்றம்! சட்டப் போராட்டம் தீவிரம்!

பரிசில் Gaîté Lyrique அரங்கில் தங்கியிருந்த 150 அகதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறையினரால் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையே, பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அகதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

காவல்துறையினர் மீது அகதிகள் தாக்குதல் நடத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தியதன் பின்னர், 27 அகதிகளுக்கு “Obligation to leave French territory” (OQTF) என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அவர்கள் உடனடியாக பிரான்சை விட்டு வெளியேற வேண்டும்.

அகதிகள் வெளியேற்றம்: பின்னணி
Gaîté Lyrique அரங்கில் கடந்த நான்கு மாதங்களாக அகதிகள் தங்கியிருந்தனர்.

இவர்களில் பலர் சர்வதேச ரீதியில் பாதுகாப்பு கோரியவர்களாக இருக்கலாம்.

பிரான்ஸ் அரசு, அகதிகள் தாம் தங்கிய இடங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.

அகதிகள் மற்றும் காவல்துறையினருக்கிடையிலான மோதல்கள் தொடர்ந்து பாரிய சிக்கல்களை உருவாக்கியுள்ளன.

OQTF – நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு:
OQTF என்பது, பிரான்ஸ் அரசால் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவாகும்.

இந்த உத்தரவை மீறினால், தண்டனை அல்லது மீண்டும் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும்.

வெளியேற்றத்திற்கு 30 நாட்களுக்குள் அகதிகள் மீது பிரயோகிக்கப்படும் சட்ட நடவடிக்கைகள்.
நிதி உதவி பெற முடியாது.
மறுதலிப்பு முறைகள் கடினமாக இருக்கும்.

முறையீட்டு போராட்டங்கள்:
சில மனித உரிமை அமைப்புகள் மற்றும் சட்ட ஆலோசகர்கள், OQTF உத்தரவை எதிர்த்து போராடும் திட்டத்தில் உள்ளனர்.

அகதிகளின் பாதுகாப்பு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை.

சிறுவர்கள், பெண்கள் போன்ற பொருளாதார, சமூக ரீதியிலான பாதுகாப்புகள் சலுகைகள் ஏதேனும் குறித்த அகதிகளால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் அகதி நிலைமைகள்:
கடந்த சில வருடங்களாக பிரான்ஸில் அகதிகள் பிரச்சினை அதிகரித்து வருகிறது.

இவ்வாறான வெளியேற்ற நடவடிக்கைகள் பிரான்சின் அரசியல் மற்றும் சமூக சூழலில் பெரும் எதிர்ப்புகளையும், ஆதரவுகளையும் எதிர்நோக்கி வருகிறது.

பரிசில் இருந்து வெளியேற்றப்பட்ட 27 அகதிகளின் நிலைமை, பிரான்சின் அகதி கொள்கைகளின் எதிர்காலத்தை மீண்டும் பரிசீலிக்கச் செய்துள்ளது.

மனித உரிமை அமைப்புகள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் இம்முடிவை எதிர்க்கும் சூழல் உருவாகியுள்ளது.

பிரான்ஸ் அரசாங்கம், அகதிகள் பிரச்சினையை தீர்க்க புதிய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்களா என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Today Jaffna Tamil Youtube Videos

Video thumbnail
ஊரியான் - கொம்படி பாதை! துயரம் நிறைந்த எங்கள் கதை! #jztamil #jztamilvlog #travel #jaffna #vanni #jz
20:42
Video thumbnail
சிக்கலா..? | City Tamils
05:44
Video thumbnail
அன்றே கணித்த அருச்சுனா | City Tamils
06:54
Video thumbnail
நடக்க போவதை சொன்ன டொக்டர் | City tamils
17:12
Video thumbnail
அவ்ளோதான் முடிஞ்சு போச்சு | City Tamils
08:11
Video thumbnail
🤩யாழ்ப்பாணத்தின் 2025 Drone View🔥 | Sri Lanka | Jaffna Tamil YouTubers | Jaffna Tamil Vlogs
08:44
Video thumbnail
லண்டனில் தமிழர் வாழும் பகுதி | Biggest Tamil Area in UK | Tamil people living in UK
33:38
Video thumbnail
💵 இத்தனை கோடி அடித்தார்களா? 😲 | Jaffna YouTuber | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam 2025
12:14
Video thumbnail
யாழில் காய்த்து குலுங்கும் மரங்கள் விற்பனைக்கு! Jaffna youtubers | canada Tamil Vlog
22:27
Video thumbnail
யாழில் பழமை மாறாத அழகிய கிராமம்🥰 | Vasavilan Village Explore | Jaffna | Sri Lanka
52:47
Video thumbnail
மக்ரோனின் சர்ச்சைக்குரிய உரையால் அதிர்ச்சியில் உறைந்த உலகம் #foryou #tamil
10:05
Video thumbnail
உள்நுழையாதீர்: மர்மக் குகைக்குள் நுழைந்தவரின் திகில் அனுபவம் #tamilnews
22:18

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Latest

spot_img
spot_img
spot_img

Don't Miss

spot_img
spot_img
spot_img