பாரிஸ் 13வது வட்டாரத்தில், சனிக்கிழமை மாலை நடந்த குழு மோதலில், 24 வயதுடைய நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் Olympiades மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள Rue Charles Moureu வீதியில் நிகழ்ந்தது.
இளைஞர்கள் இரு குழுக்களாக பிரிந்து, ஒருவரை ஒருவர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நபர் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம், சமீபகாலமாக பாரிஸில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக, கடந்த மார்ச் 19ஆம் தேதி பாரிஸ் 16ஆம் வட்டாரத்தில் René-Cassin உயர்கல்வி நிலையத்தின் அருகே மாணவர் ஒருவர் தாக்குதலுக்குள்ளான சம்பவமும் இதற்கான சான்றாகும்.