பாரிஸில் உள்ள 500 புதிய தெருக்களை பசுமைப்படுத்த பரிசியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது பாரிஸ் நகரம் மூன்றாவது முறையாக நடத்தும் குடிமக்கள் வாக்கெடுப்பாகும். திட்டமிட்டபடியே வாக்கெடுப்பு வெற்றியடைந்துள்ளது.
இதில் பாரிஸின் 500 தெருக்களை பசுமை நிறைந்த நடைபாதையாக மாற்றுவதற்கு 66% வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த சதவீதமானது முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முந்தைய 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடந்த இரு வாக்கெடுப்புகளில் 8% -க்கும் குறைவாக இருந்த வாக்குப்பதிவுடன் ஒப்பிடுகையில்,
இந்த வாக்கெடுப்பின் மிக முக்கியமான விவாதமாக வாக்காளர்களின் பங்கேற்பாக இருந்தது. ஆனால், இந்த முறை, வாக்குப்பதிவு மிக குறைவாக இருந்தது.
சுமார் 1.4 மில்லியன் பாரிசியர்கள் வாக்கு பதிவு செய்ய அழைக்கப்பட்டிருந்த போதிலும், 54,489 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர், இது 4% மட்டுமே ஆகும்.
2023 இல் நடந்த முதல் குடிமக்கள் வாக்கெடுப்பில், பாரிசியர்கள் பெரிதும் (89%) மின்சார ஸ்கூட்டர்களைத் தடை செய்ய ஒப்புதல் தெரிவித்தனர். 100,000 பேர் வாக்களித்தனர், இது 7.5% ஆகும்.
ஒரு வருடத்திற்கு பிறகு 2024 இல், கனரக வாகனங்களுக்கான சிறப்பு பார்க்கிங் கட்டணத்தை அறவிட 54% வாக்காளர்கள் ஒப்புக்கொண்டனர், ஆனால் வாக்குப்பதிவு 5.7% ஆக மட்டுமே இருந்தது.
இந்த 2025 வாக்குப்பதிவில் 16 மற்றும் 17 வயதினர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் பங்கு மிகக் குறைவாகவே இருந்தது; முன்னர் நடந்த வாக்கெடுப்புகளில் 300 பேர் மட்டுமே வாக்குப் பதிவு செய்திருந்தனர்.
“மிகக் குறைந்த (3.89%) வாக்குப்பதிவானது, இந்த புதிய கலந்தாய்வு ஜனநாயகத்தின் தோல்வியை வெளிப்படுத்துகிறது” என்று Rachida Dati தலைமையிலான எதிர்க்கட்சி Changer Paris தெரிவித்தது.
ஆனால் பாரிஸ் நகர மேயர் Anne Hidalgo பின்வாங்கவில்லை. தன்னார்வத்துடன் வாக்கெடுப்புக்கு வந்த பாரிசியர்களுக்கு நன்றி.
அவர்கள் வாழ விரும்பும் நகரத்தைப் பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி,” என்றார்.
“இந்த வகையான கலந்தாய்வு வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பது இயல்பான விடயம்தான்,
அதையும் தாண்டி மக்கள் வந்து வாக்களிக்கின்றனர் என்றால், அதற்கு மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை குறைக்கக்கூடாது.”
எல்லாவற்றுக்கும் மாறாக, மூன்று மாவட்டங்களில் “எதிர்ப்பு” வெளிப்படுத்தப்பட்டுள்ளது : அவை 7வது, 8வது, மற்றும் 16வது மாவட்டங்கள்,
அங்கு கார்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் விளக்கமாகக் கூறுவதானால் “பசுமை நடைபாதைத் திட்டம்” பாரிஸ் நகர மேலாட்சிக்கு நீண்டகால திட்டமான பாரிஸின் பசுமைப்படுத்தலை மேம்படுத்த உதவும்.
Anne Hidalgo இந்நிகழ்வு குறித்த தனது மகிழ்ச்சியை மக்களோடு பகிர்ந்துகொண்டுள்ளார்:
“இந்த வாக்கெடுப்பு எங்களைப் பிணைத்துள்ளது. குறிப்பிட்ட மாவட்டங்களில் வேலைகள் நாளை தொடங்கும்.”
எந்தெந்த தெருக்களில் மாற்றங்கள் இடம்பெறும் என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியவில்லை.
அவை நகர சேவைகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு படிப்படியாக வெளியிடப்படும்.
ஒவ்வொரு பகுதியில் ஆறு முதல் எட்டு புதிய தெருக்கள் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம், கார்களுக்கான இடத்தை மேலும் குறைத்து, நடைபாதைகளுக்கும் சைக்கிளோட்டிகளுக்கும் அதிக இடத்தை வழங்குவதற்காக 10,000 பார்க்கிங் இடங்களை நீக்க திட்டமிடப்பட்டுள்ளோம்.
ஆனால், Changer Paris இதற்கெதிராகக் கருத்து தெரிவித்துள்ளது: “மாற்றங்கள் பற்றிய ஆய்வு அல்லது மாற்றங்களுக்குள்ளாகவிருக்கும் தெருக்களின் விவரங்களை வெளிப்படுத்தாத கலந்தாய்வு இது. இதன் தாக்கம் போக்குவரத்து, காற்று மற்றும் ஒலி மாசுபாடு, அல்லது கடை உரிமையாளர்களுக்கு எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க இயலாது.
” மேலும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட “பூங்காக்கள், தோட்டங்களைச் சரியாக பராமரிக்க முடியாதது போல் 500 தெருக்களை பசுமைப்படுத்த வேண்டும் என்று கூறும் இந்த மேலாட்சியை எவ்வாறு நம்பலாம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், ஏழு மாவட்டங்களில் உள்ள பாரிசியர்களை உள்ளூர் பிரச்சினைகள் குறித்து வாக்களிக்கக் கேட்டனர், 19வது மாவட்டத்தில் செல்லப்பிராணிகளுக்கான நினைவுத் தோட்டத்தை உருவாக்குவது போன்றவை. இவை அனைத்திலும் வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்தனர்.