ஒவ்வொரு கோடையிலும் செயற்பட தொடங்கும் பிரான்ஸ் உணவகங்களின் மொட்டைமாடி (terrasses) அமைப்புகள் இன்றுமுதல் செயற்பட ஆரம்பிக்கு… இதுபோல் ஏப்ரலில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ள பல சட்டதிட்டங்கள் மற்றும் நடைமுறைகள்.👇
இன்று ஏப்ரல் 1, செவ்வாய்க்கிழமை புதிய மாதம் தொடங்குகிறது, மேலும் பல சட்டதிட்ட மாற்றங்கள் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. இவை தொடர்பாக மேலதிக தகவல்களை கீழே உள்ளே தரப்பட்டுள்ளது:
- சமூகநலக் கொடுப்பனவு (revenu de solidarité active)
சமூகநலக் கொடுப்பனவு (RSA) இன்று, ஏப்ரல் 1, 2025 முதல் 1.7% சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம், வீட்டுக்கொடுப்பனவு இல்லாமல் €1,334.98 யூரோக்களைப் பெறும் குடும்பங்கள் இப்போது €1,357.70 யூரோக்கள் பெறுவார்கள். இது பல குடும்பங்களுக்கு தேவையான உதவியை வழங்கும். - சுகயீன விடுமுறைக்கான ஊதியம் (Indemnité de congé de maladie)
சுகயீன விடுமுறைக்கான ஊதியம் குறைக்கப்படுள்ளது. ஏப்ரல் 1 முதல், சுகயீன விடுமுறைக்காக வழங்கப்படும் ஊதியம் அடிப்படைச் சம்பளத்தின் 1.4 மடங்கு அளவில் வழங்கப்படும். முன்னதாக இந்த ஊதியம் 1.8 மடங்காக வழங்கப்பட்டு வந்தது. இந்த புதிய மாற்றம் சுகயீன விடுமுறையில் உள்ளோரின் வருமானத்தை பாதிக்கும். - உணவகத்திற்கான நடைமுறைகள் (Terrasses)
ஒவ்வொரு ஆண்டின் கோடைகாலத்திலும் நடைமுறைக்கு வரும், உணவகங்களின் மொட்டை மாடிகள் (terrasses) இன்று, ஏப்ரல் 1 முதல் மீண்டும் அனுமதிக்கப்படுகின்றன. இந்த புதிய விதிமுறைகளின்படி, உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள் மற்றும் அருந்தகங்கள் தங்கள் முற்றங்களை அமைக்க முடியும். இவை அனைத்தும் ஒக்டோபர் 31 வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி வரை மட்டுமே இந்த முற்றங்களை அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. - மாற்றுத்திறனாளிகளுக்கான ஊக்கத்தொகை (Allocation aux adultes handicapés – AAH)
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை இன்று, ஏப்ரல் 1, 2025 முதல் 1.7% அதிகரிக்கப்படுகிறது. €1,016.05 இல் இருந்து €1,033.32 யூரோக்கள் ஆகும். இது மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த உதவியாக இருக்கும்.
இதனை விட, பல்வேறு பிற சட்ட மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. இது பொதுவாக சமூகத்திற்கு, பொருளாதாரத்திற்கு மற்றும் வாழ்வாதாரத்திற்கு முன்னேற்றத்தை கொண்டுவரும் என்பது நம்பிக்கை.