பாரீஸ்: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை, இடியுடன் கூடிய பலத்த மழை, வானிலை மையம் எச்சரிக்கை!
ஓலிவர் (Oliver) என பெயரிடப்பட்ட புயல், ஸ்பெயினிலிருந்து பிரான்சின் தெற்கு பகுதிக்குள் நுழைவதாகவும், இன்று ஏப்ரல் 13, ஞாயிற்றுக் கிழமை அதிகாலை முதல் மாலை வரை தெற்குப் பிராந்தியங்களை கடுமையாக தாக்கும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.
புயலின் காரணமாக, மாலையில் 3 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய புயல் காற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது போக்குவரத்து, வெளிவிளையாட்டு நிகழ்வுகள், மற்றும் திறந்தவெளி சந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்கள்:
வானிலை மையம், மஞ்சள் நிற எச்சரிக்கை (Yellow Alert) எனப்படும் முன்செய்தியை கீழ்க்காணும் 12 மாவட்டங்களுக்கு விடுத்துள்ளது:
Ariège
Corrèze
Dordogne
Gers
Haute-Garonne
Landes
Lot
Lot-et-Garonne
Pyrénées-Atlantiques
Hautes-Pyrénées
Tarn-et-Garonne
Haute-Vienne
இப்பிராந்தியங்களில் உள்ள மக்களுக்கு தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும், புயல் மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயலின் பாதிப்பு – ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்:
ஒலிவர் புயல் முதலில் ஸ்பெயினில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போது பிரான்சின் தென்மேற்கு பகுதிகளுக்கு விரைந்து வருகின்றது. ஸ்பெயினில் இப்புயலால் மழை வெள்ளம், Strom Surge மற்றும் காற்றழுத்தத் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பிரான்ஸில், அதிகரித்த ஈரப்பதம் மற்றும் காற்றழுத்த மாற்றங்களால் வானிலை மாறுபாடுகள் திடீரென ஏற்படும் என்பதால், பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து நடக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பாதுகாப்பு ஆலோசனைகள்:வெளிவேலைகளை தவிர்க்கவும்
மின்சார சாதனங்களை பாதுகாப்பாக அணைத்து வைக்கவும்
வாகன ஓட்டம் குறைத்துவைத்து, பாதுகாப்பாக இயக்கவும்
அவசர தேவைக்காக அத்தியாவசிய பொருட்கள் தயாராக வைத்துக்கொள்ளவும்