முன்கூட்டியே வழங்கப்படும் குடும்பநல கொடுப்பனவுகள் – புதிய திகதி அறிவிப்பு!
CAF (Caisse d’Allocations Familiales) என்பது பிரான்ஸில் சமூக நலனுக்காக செயல்படும் ஒரு அமைப்பு ஆகும். இது குடும்பங்களுக்கு,
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு, குழந்தைகள் வளர்ப்பு செலவுகளுக்காக மற்றும் சில தனிப்பட்ட தேவைகளுக்காக நிதியுதவி வழங்குகிறது.
திகதி மாற்றம் – ஏப்ரல் மாதம் குடும்பநல கொடுப்பனவுகள் முன்கூட்டியே!
வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி வழங்கப்படும் குடும்பநல கொடுப்பனவுகள், அந்நாளில் ஞாயிற்றுக்கிழமை வந்தால் மறுநாள் வங்கியில் வைப்பிலிடப்படும்.
ஆனால், இந்த முறை ஏப்ரல் 5ஆம் தேதி சனிக்கிழமை வந்துள்ளதால், அடுத்த தினம் (ஏப்ரல் 6) ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏப்ரல் 7ஆம் தேதி (திங்கட்கிழமை) கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், CAF அறிவிப்பின் படி, கொடுப்பனவுகள் ஏப்ரல் 4ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒருநாள் முன்பே வைப்பிலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பநல உதவிகளை பெறுவோர் இந்த மாற்றத்தைக் கவனித்து, ஏப்ரல் 4ஆம் தேதி தங்களுடைய வங்கிக் கணக்குகளை சரிபார்க்கலாம்.
CAF என்பது என்ன?
CAF (Caisse d’Allocations Familiales) என்பது பிரான்சில் செயல்படும் ஒரு சமூக நல அமைப்பாகும். இது குடும்பங்களுக்கு பொருளாதார ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு உதவித் திட்டங்களை வழங்குகிறது.
குறிப்பாக, குழந்தைகள் வளர்ப்பு உதவி, வீட்டு வசதி தள்ளுபடி (APL), குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவி, செயல்பாட்டு போனஸ் (Prime d’activité) போன்ற பல்வேறு நிவாரணங்களை CAF வழங்குகிறது.
இந்த அறிவிப்பு மூலம், பயனாளிகள் வங்கி வைப்புகளை சரியான நாளில் எதிர்பார்த்து, தேவையான பொருளாதார திட்டமிடல்களை மேற்கொள்ளலாம்.