Read More

Read More

பிரான்ஸ்: பாரிஸ் தமிழர்களுக்கான கடன் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்

பிரான்ஸ், குறிப்பாக பாரிஸ், பல தமிழ் மக்களுக்கு வேலை, கல்வி அல்லது தொழில்வாய்ப்பு என்பவற்றின் அடிப்படையில் ஒரு முக்கியமான பிராந்தியமாக இருக்கிறது. பிரான்ஸ் நிதி மற்றும் வங்கி முறைகளைப் புரிந்துகொள்வது, அன்றாட வாழ்கைக்குத் தேவையான நிலையான பொருளாதார அமைப்பை உருவாக்க அவசியமானதொன்றாகிறது. இந்த வழிகாட்டியில் புலம்பெயர் தமிழர்கள் பிரான்சில் வாங்கிக்கணக்கொன்றைத் திறப்பது முதல் முதலீடு செய்வது வரை தேவையான அடிப்படைத் தகவல்களை காணலாம்.

வங்கிக் கணக்கு ஏன் அவசியம்? கணக்கொன்றை ஆரம்பிப்பது எவ்வாறு?
சம்பளம் பெற்றுக்கொள்ள, செலவுகளை நிர்வகிக்க, மற்றும் வியாபாரம் சார்ந்த தினசரி பரிவர்த்தனைகளுக்கு என பலதரப்பட்ட தேவைகளுக்காக வங்கிக்கணக்கு ஒன்றை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
வங்கிக்கணக்கு வகைகள்
➡️Compte Courant (நடப்பு கணக்கு அல்லது நடைமுறைக்கு கணக்கு) – தினசரி பரிவர்த்தனைகளுக்கு – உணவகங்கள் மற்றும் பிற வியாபாரங்களை நடத்துபவர்களுக்கு பொருத்தமானது
➡️Compte d’épargne (சேமிப்பு கணக்கு) – பணத்தைச் சேமிக்க மற்றும் வட்டி வருவாய் பெற.

தேவையான ஆவணங்கள்
வங்கிக்கணக்கு திறக்க நீங்கள் கொண்டுவரவேண்டியவை:
➡️கடவுச்சீட்டு அல்லது குடியுரிமை அனுமதி (Titre de Séjour)
➡️முகவரி ஆதாரம் (Justificatif de domicile) – வீட்டு குத்தகை ஒப்பந்தம், மின்சாரக் கட்டண ரசீது
➡️வேலை செய்பவராயின் வருமானம் அல்லது வேலை ஆதாரம் (சம்பளச்சீட்டு, வேலை ஒப்பந்தம்,) மாணவராயின் – மாணவர் சேர்க்கை கடிதம்.
➡️பிரான்ஸ் தொலைபேசி எண்.

பாரிஸில் தமிழர்களுக்கு ஏற்ற சிறந்த வங்கிகள்
➡️BNP Paribas – ஆங்கில சேவைகள் வழங்கும்.
➡️Société Générale – மாணவர்களுக்கான சிறப்பு கணக்குகள்.
➡️Crédit Agricole – வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு சேவைகள்.
➡️நிகழ்நிலை வங்கிகள் (N26, Revolut, Boursorama) – எளிதாக கணக்கு திறக்கலாம்.

ஒன்லைனில் கணக்கு திறக்கும் முறை
வங்கி இணையதளத்தில் சென்று, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, பின்னர் வீடியோ அழைப்பு மூலம் அல்லது நேரில் சென்று தகவல்களை உறுதிப்படுத்தி கணக்கைத் திறக்கலாம்.

தமிழர்களுக்காக சிறந்த கிரெடிட் அட்டைகள் (வருடாந்த கட்டணம் மற்றும் பணம் மீளப்பெறல் இல்லை) -Best Credit Cards for Tamils ​​(Zero Annual Fees & Cashback)
➡️கிரெடிட் கார்டு வெளிநாடுகளில் பயணிக்க, ஒன்லைன் ஷாப்பிங் செய்ய, கேஷ்பேக் பெற மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சிறந்த, கட்டணமற்ற கடன் அட்டைகள்(Best zero-fee credit cards)
➡️Boursorama Ultim Card – வருடச்சலுகை இல்லை, சர்வதேச கொடுப்பனவுக்கு இலவசம்.
➡️Hello Bank Visa Card – மறைமுகச் செலவுகள் இல்லை.
➡️N26 You – அதிகமாக பயணங்களை மேற்கொள்வோருக்குப் பயன்படும், இன்சூரன்ஸ் வழங்கப்படும்.

சிறந்த பணம் மீளப்பெறக்கூடிய மற்றும் வெகுமதிகளை வழங்கக்கூடிய அட்டைகள்(Best Cashback & Rewards Cards)
➡️American Express France – அதிக புள்ளிகள், பயண வசதிகள்.
➡️Carte Zéro (Advanzia Bank) – வருட கட்டணம் இல்லை, கேஷ்பேக் வசதி.
➡️Crédit Mutuel Mastercard – ரிவார்ட்ஸ் மற்றும் தள்ளுபடி சலுகைகள்.
விண்ணப்பிக்கும் முறை
➡️பிரான்ஸ் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும்.
➡️வருமான ஆதாரம் (சம்பளச்சீட்டு, வரித்தீர்வு ஆவணங்கள்).
➡️பிரான்சில் நிலையான முகவரி.

தனிப்பட்ட கடன்கள் & தொழில் கடன்கள் – விண்ணப்பிக்கும் முறை
➡️பிரான்சில் பல்வேறு தேவைகளுக்காக கடன்கள் பெறலாம்.
தனிப்பட்ட கடன்கள் (Prêt Personnel)
➡️வீடு புதுப்பித்தல், பயணம், மருத்துவ செலவுகள் போன்றவற்றிற்கு பயன்படும்.
விண்ணப்பிக்கும் முறை
➡️வருமான ஆதாரம், வங்கிக் கணக்கு விவரங்கள்.
➡️நல்ல கடன் மதிப்பெண் (Credit Score) இருப்பது முக்கியம்.
தொழில் கடன்கள் (Prêt Professionnel)
➡️பிரான்சில் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு சிறப்பு கடன் வசதிகள் உள்ளன.

சிறந்த வங்கிகள்
➡️BNP Paribas – தொடக்க நிறுவனங்களுக்கு சிறந்த கடன் வசதி.
➡️BPCE Group – சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவுகிறது.
➡️BPI France – அரசாங்க ஆதரவு கடன்கள்.
கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான அடிப்படைத் தகுதிகள்
➡️வலுவான தொழில் திட்டம் (Business Plan).
➡️தொடக்க முதலீடு அல்லது அடமானம்.
➡️பிரான்சில் பதிவு செய்யப்பட்ட தொழில் ஆவணங்கள்.

முதலீடு & பங்கு சந்தை தெரிவுகள்
➡️பிரான்சில் முதலீடு செய்வது செல்வத்தை அதிகரிக்க நல்ல வழி.
பங்கு சந்தை முதலீடு
➡️Euronext Paris – பிரான்ஸின் முக்கிய பங்குச்சந்தை.
➡️PEA (Plan d’Épargne en Actions) – வரி சலுகை.
➡️CAC 40 Index Funds – பிரான்சின் முன்னணி 40 நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.
நிலையான சொத்துக்கள் மீதான முதலீடு
➡️பாரிஸ் நகரத்தில் வீட்டு முதலீடு லாபகரமானது.
➡️வாடகைக்கு வீடுகள் மூலம் நிலையான வருமானம் பெறலாம்.
ஏனைய முதலீட்டுத் தெரிவுகள்
➡️Assurance Vie (வாழ்க்கை காப்பீடு) – வரி சலுகையுடன் முதலீடு.
➡️Cryptocurrency – Binance, Coinbase போன்ற தளங்கள் பிரான்சில் இயங்குகின்றன.
➡️தங்கம் & பத்திரங்கள் – நிலையான வருவாய் வழங்கும் விருப்பங்கள்.

பிரான்சில் வாழும் தமிழ் வெளிநாட்டவர்களுக்கு நிதி மற்றும் வங்கி முறைகளைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். வங்கிக்கணக்கு திறப்பது முதல், சிறந்த கிரெடிட் கார்டு தேர்வு, கடன் பெறுதல் மற்றும் முதலீடு செய்வது வரை இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவியாக இருக்கும். மாணவர்கள், வேலைக்காரர்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் இந்த தகவல்களைப் பயன்படுத்தி பொருளாதாரமாக முன்னேறலாம்.

Today Jaffna Tamil Youtube Videos

Video thumbnail
🔥 பிச்சுணாவால் குழப்பம் | அபிவிருத்திக் குழு கூட்டம் | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam
11:29
Video thumbnail
ஊரியான் - கொம்படி பாதை! துயரம் நிறைந்த எங்கள் கதை! #jztamil #jztamilvlog #travel #jaffna #vanni #jz
20:42
Video thumbnail
சிக்கலா..? | City Tamils
05:44
Video thumbnail
அன்றே கணித்த அருச்சுனா | City Tamils
06:54
Video thumbnail
நடக்க போவதை சொன்ன டொக்டர் | City tamils
17:12
Video thumbnail
அவ்ளோதான் முடிஞ்சு போச்சு | City Tamils
08:11
Video thumbnail
🤩யாழ்ப்பாணத்தின் 2025 Drone View🔥 | Sri Lanka | Jaffna Tamil YouTubers | Jaffna Tamil Vlogs
08:44
Video thumbnail
லண்டனில் தமிழர் வாழும் பகுதி | Biggest Tamil Area in UK | Tamil people living in UK
33:38
Video thumbnail
💵 இத்தனை கோடி அடித்தார்களா? 😲 | Jaffna YouTuber | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam 2025
12:14
Video thumbnail
யாழில் காய்த்து குலுங்கும் மரங்கள் விற்பனைக்கு! Jaffna youtubers | canada Tamil Vlog
22:27
Video thumbnail
யாழில் பழமை மாறாத அழகிய கிராமம்🥰 | Vasavilan Village Explore | Jaffna | Sri Lanka
52:47
Video thumbnail
மக்ரோனின் சர்ச்சைக்குரிய உரையால் அதிர்ச்சியில் உறைந்த உலகம் #foryou #tamil
10:05

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Latest

spot_img
spot_img
spot_img

Don't Miss

spot_img
spot_img
spot_img