நேற்று மார்ச் 24, திங்கட்கிழமை மாலை, Essonne மாவட்டத்தில் Yerres நகரில் உள்ள Louis-Armand உயர்கல்வி பள்ளிக்கூடத்திற்கு அருகில் ஒரு கத்திக்குத்து தாக்குதல் நடந்தது.
இந்த சம்பவத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பிலான தகவல் உடனடியாக அவசர உதவிப் பிரிவிற்கு அறிவிக்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு நடைபெற்ற இந்த தாக்குதல் குறித்து மருத்துவ குழுவினர் தகவல் பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மாணவர் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார்.
இது இல்-து-பிரான்சு பகுதியில் கடந்த 10 நாட்களில் இது மூன்றாவது கத்திக்குத்துச் சம்பவமாகும். இது நாட்டில் வன்முறை சம்பவங்களின் அதிகரிப்பைக் காட்டுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.