Archives
இன்று மீண்டும் சர்ச்சையில் மாட்டிய அருச்சுனா எம்பி
யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி. அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்றத்தில் மீண்டும் சர்ச்சையில்... யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட எம்.பி. அர்ச்சுனா இராமநாதன், இன்று (05) பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேசுவதற்கான வாய்ப்பு தனக்கு மறுக்கப்பட்டுள்ளதாகஅவர் குற்றம்சாட்டினார். 77 நாட்கள் நான் இங்கு பேச முடியவில்லை,என்று அவர் கூறினார். இது தொடர்பாக அவர் சமர்ப்பித்தஆவணத்தின் உள்ளடக்கத்தையே மட்டும் வாசிக்க வேண்டும் என்று சபாநாயகர் அறிவுறுத்திய நிலையில், இராமநாதன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இராமநாதன் கூறுகையில், ஜனவரி 20ஆம் தேதி அனுராதபுரம் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், உத்தியோகபூர்வமான பாராளுமன்ற அடையாள அட்டையை வழங்காத காரணத்தால் தன்னுடைய உரிமைகள்மீறப்பட்டதாக தெரிவித்தார். நான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வழிமத்திய சட்டத்தரணியுடன் பயணித்த போது, போக்குவரத்து காவலர்கள் தடுக்கின்றனர். ஆனால் ஏன் தடுக்கிறார்கள் என்பதை விளக்கவில்லை. நான் தமிழ்த்சமூகத்துக்கான பிரதிநிதி என்றும் விளக்கினேன். ஆனால், அவர்கள் உத்தியோகபூர்வ பாராளுமன்ற அடையாளஅட்டையை மட்டுமே கோரியிருக்கிறார்கள் என்று கூறினார். இதையடுத்து, இராமநாதன் பாராளுமன்றத்தில் தன்னுடைய உரிமைகள் மீறப்பட்டதாகக் குற்றம்சாட்டி, இரண்டுமாதங்களுக்கு பிறகும், எனக்கு வழங்கப்பட்ட ஒரே ஆவணம் இதுதான். பாராளுமன்ற அடையாள அட்டைமற்றும் அனுமதி அட்டை எதுவும் வழங்கப்படவில்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகே, ஜனவரி 22ஆம் தேதியன்றுகாலை எனக்கு வழங்கப்பட்டது என்று விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இவர் ஒருபக்கம் பாராளுமன்றத்தை குறை கூறுகிறார். மறுபக்கம் இனப்பிரச்சினையை தூண்டுகிறார். ‘சிறுபான்மை’ போன்ற சொற்களை எங்களால் ஏற்க முடியாது. இவருக்கு மனநிலை பாதிப்பு இருக்கலாம். அவரைமருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர்,உங்கள் மீது போக்குவரத்து மீறல் தொடர்பாக புகார் உள்ளது. இந்த நாட்டின்சட்டம் அனைவருக்கும் சமம். எம்.பி. என்கிற பதவி கொண்டவர் என்ற விதிவிலக்கு இல்லை,என்றுசுட்டிக்காட்டினார். இந்நிலையில், அவை தலைவர் பிமல் ரத்நாயக்க, அருச்சுனாவின் பேச வாய்ப்பு கொடுக்கும் உரிமைப்பிரச்சினையை எதிர்க்கட்சி தீர்க்க வேண்டும். ஆனால் அவர் வேறு விஷயங்களை முன்வைக்கிறார்,என்றுகூறினார். இராமநாதன் அறிக்கையில் தொடர்பில்லாத விடயங்களை பாராளுமன்ற நிகழ்வுகள் பதிவேட்டிலிருந்து நீக்கசபாநாயகர் உத்தரவிட்டார்.
பாரிசில் தமிழ் இளைஞர் அதிரடி கைது! பின்னணி இதோ!
Seine-Saint-Denis: பாரிஸ் புறநகர் பகுதி ஒன்றில் வைத்து தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸ் காவல்துறையால்கைது செய்யப்பட்டுள்ளார். பூபாலசிங்கம் பிரதீபன் என்ற 27 வயது யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டஇளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. காதல்/ குடும்ப தகராறு காரணமாக அண்மையில் தமிழ் பெண் ஒருவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்சம்பவத்தின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது.குற்றத்தில் இவருக்கு உதவியதாகஅல்ஜீரிய நாட்டு இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. குடும்ப/காநல் தகராறால் வந்த மோதலில் இவரால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் செய்த முறைபாடுகளைஅடுத்தே கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,முறையான வதிவிட அனுமதி எதுவுமில்லாத ஒருவர் என்றும்கூறப்படுகின்றது.இவர் மீது முறைப்பாடளித்த பெண்ணின் குற்றசாட்டில் இவர் தன்னை சில அல்ஜீரியர்களைகூலிக்கு அமர்த்தி கொலை செய்ய முயற்சித்தாக முறைபாடு கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
2025 பிரான்ஸில் புதிய மாற்றங்கள்!
01/01/2025 - 08:11 செம்ப்ஸ்எலிசேஸ் பகுதியில் புதுவருட கொண்டாட்டம்.REUTERS - BENOIT TESSIER பிரான்ஸ் புதிய பிரதமரை பெற்றுள்ளது – 2024ஆம் ஆண்டின் நான்காவது பிரதமராக பிரான்சுவா பய்ரூ பதவி ஏற்றுள்ளார். புதிய அரசாங்கமும் புதிய...
Northern Sri Lanka Explorer – 5 Days / 4 Nights
Northern Sri Lanka Explorer – 5 Days / 4 Nights (Jaffna Airport – Jaffna – Islands – Kilinochchi – Mullaitivu – Trincomalee – Mannar –...
4 Night 5 Days – Srilankan Nature and Culture
This 5-day Sri Lanka tour covers the best of the island’s nature, adventure, and colonial heritage. Explore the lush hill country, tea plantations, waterfalls,...
இன்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட முக்கிய அம்சங்கள்!
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு (DCC) கூட்டத்தின் 5 முக்கிய அம்சங்கள் ஜனவரி 31, 2025 | பிற்பகல் 2:46 மக்களின் நிலம் அவர்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும் – வட மாகாணத்தில் நில விசாரணைகள்...