பாரிஸ் நகரின் 19 ஆவது வட்டாரத்தில் நேற்று மாலை (ஒக்ரோபர் 17) மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் பாதசாரியான ஆண் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்தனர்.
பாரிஸின் 19ஆம் வட்டாரத்தில் உள்ள குரியால் தெருவில் மரம் சரிந்ததில் ஒருவர் வியாழக்கிழமை மாலையில் உயிரிழந்துள்ளார் . இதற்கான காரணம் நேற்று மாலை(ஒக்ரோபர் 17) நகரில் பெய்த பலத்த மழையேயாகும். rue Curial தெருவிலுள்ள சமூகக் குடியிருப்புக் கட்டடம் ஒன்றின்(résidence du bailleur social Paris Habitat) வாசலில் நின்றிருந்த மரமே திடீரெனச் சாய்ந்து வீழ்ந்துள்ளது.
அதே தெருவில் வசிக்கின்ற சிறுமிகள் இருவரும் தந்தையாருடன் ஒன்றாக வந்துகொண்டிருந்த சமயத்திலேயே இந்த அனர்த்தத்தில் சிக்குண்டனர் என்று கூறப்படுகிறது.
இதேவேளை பாரிஸ் உட்பட நாடுமுழுவதும் கனத்த மழை பெய்து வருகிறது.
இதனால் போக்குவரத்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.