Menton இல் புலம்பெயர்வை எதிர்க்கும் அரசின் கடுமையான நிலைப்பாட்டை பிரதமர் மிச்சல் பார்னியர் மற்றும் உள்துறை அமைச்சர் புரூனோ ரெடையோ அவர்கள் வெள்ளிக்கிழமை பிரான்சு-இத்தாலி எல்லையில் உறுதி செய்தார்கள். ஜோர்ஜியா மெலோனியின் கொள்கைகளுடன் ஒத்துழைப்பை உறுதி செய்து கொண்டது மட்டுமின்றி, ஐரோப்பாவில் புலம்பெயர்வுக்கு எதிரான “புதிய மனநிலையை” உருவாக்கும் முதன்மை நடவடிக்கையாக இது அமைகின்றது.
மிச்சல் பார்னியர்,வெள்ளிக்கிழமை, அதாவது அக்டோபர் 18 அன்று, சென்ட்-லூடோவிக் எல்லைச்சாவடியினில் வைத்து புலம்பெயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய அம்சங்களை தீர விளங்கப்படுத்தினார்.
பார்னியர், உள்துறை அமைச்சருடன் தாம் சிநேக பூர்வமாக இணைந்து செயல்படுவதற்கு தயாராக உள்ளார் என்பதைப் பொதுமக்களுக்கு வெளிப்படையாகக்காட்ட விரும்பினார். Place Beauvau இல் இருந்தவரின் திடுக்கிடும் கருத்துகள், சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் பேச்சுகளும் பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இறுதியில் “பிரதமரே முடிவெடுப்பார்” என்று மத்திய அரசினால் விளக்கப்பட்டது.
பிரான்சு மக்கள் புலம்பெயர்வை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த பயனுள்ள கொள்கையையினை எதிர்பார்க்கிறார்கள் என்று மிச்சல் பார்னியர் கூறினார். 2025 ஆம் ஆண்டில் புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் என்று அவர் உறுதியாக கூறினார்.
2023 டிசம்பரில் தேசிய ரேலி கட்சியின் ஆதரவில் நிறைவேற்றப்பட்ட முந்தைய சட்டம், அரசியல் சீர்குலைவுகளை ஏற்படுத்தியதுடன், அரசின் கூட்டணியில் திடீர்மையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.