தொடருந்து பயணிகளுக்கான புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் மிகுந்த தீவிரமாக அமல்படுத்தப்படவுள்ளன.
பயணத்தின்போது பயணப்பெட்டிகளை (லக்கேஜ்) மறந்து விட்டுச் சென்றால், 1,500 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புதிய சட்டத் திருத்தம்: ஏன் அமலுக்கு வந்தது?
இத்தகைய வழக்குகள் தொடருந்து போக்குவரத்துக்கு பெரும் இடையூறாகும்.
பயணிகள் தங்களது பொதிகளை மறந்து விட்டுச் சென்றால், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி தொடருந்து சேவைகள் தாமதமாகின்றன.
இதனால் பெரும் போக்குவரத்து பிரச்சினைகள் உருவாகின்றன. இந்த நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
அபராதத் தொகைகள் எப்படி விதிக்கப்படும்?
முதல் முறையாக பயணப்பெட்டியை மறந்து விட்டால் – 75 யூரோக்கள் அபராதம்
இரண்டாம் முறை மீண்டும் தவறு செய்தால் – 180 யூரோக்கள் அபராதம்
மூன்றாம் முறை மீண்டும் இந்த தவறை செய்தால் – 1,500 யூரோக்கள் அபராதம்
இந்த விதிமுறைகள் அனைத்து தொடருந்து பயணிகளுக்கும் பொருந்தும். பயணிகள் எப்போதும் தங்களது சொந்தப் பொருட்களை கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு அம்சமாகவும், போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்தும் நடவடிக்கையாகவும் இந்த புதிய சட்டம் அமையவுள்ளது.
பொதுவாக, பயணிகள் தங்களது உடமைகளை தவறவிடாமல் பார்த்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது முக்கியம்.
பயணத்தின் முடிவில் பயணப்பெட்டிகள் மறந்துவிடாதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது இந்த அபராதங்களைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழியாகும்.