லியோனின் 8ஆம் மாவட்டத்தில் உள்ள எ-லூயிஸ்-லுமியேர் உயர்நிலைப்பள்ளி அக்டோபர் 10,2024 காலை பட்டாசு தாக்குதலுக்கு உள்ளாகி அதில் ஒரு ஆசிரியர் காயமடைந்தார். மற்றும் அங்கிருந்த சில குப்பைத் தொட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
காலை 11:48 மணியளவில் நாட்டுக் காவல் படையினர் பள்ளி முன்னால் விரைந்து வந்து அங்கு திரண்டிருந்த குழுவினரை கலைத்தனர் யாரும் கைது செய்யப்படவில்லை.
“மாவட்ட ஆளுநர் மற்றும் கல்வி ஆய்வாளர் ஒலிவியர் டூக்ரிப், பள்ளி நிர்வாகிகளுடன் இணைந்து, இந்த காலை நிகழ்ந்த சம்பவங்களை கவனத்துடன் கையாண்டு அவர்கள் இந்த செயல்களை கடுமையாகக் கண்டித்தும், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து உள்ளனர் என்று அதிபரகம் தெரிவித்துள்ளது .
அத்துடன் இச்சம்பவத்தின் பின்னர் உயர்நிலைப்பள்ளிக்கு அருகிலுள்ள மின்மினி இயக்கம் நிறுத்தப்பட்டது, ஆனால் வகுப்புகள் வழக்கம்போல நடைபெற்றன என்று பள்ளிசமூகம் தெரிவித்தது. ஒரு வாரத்திற்கு முன்பு, லியோனின் கிழக்கு புறநகர் வெநிஸ்யூவில் உள்ள செம்பத்-செக்வின் பள்ளி வளாகம் மீதும் பலர் தாக்குதல் நடத்தினர், அதில் பட்டாசுகள் பள்ளி நுழைவு பகுதியை சேதமாக்கி உள்ளன. ஊழியர்கள் மீது கற்கள் வீசப்பட்டன என்றும் தொழிற்சங்கங்கள் ஊடகத்திற்கு செய்தி தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னர், தாக்கப்பட்ட பள்ளியின் மாணவர்கள், “ஆபத்தான முறையில் சொத்தை அழித்தல்” குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் ஒருவர் தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் நீதிபதியின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் கடந்த வருடம் (2023) நவம்பரில் லியோனின் 8ஆம் மாவட்டத்தில் உள்ள மற்றொரு உயர்நிலைப்பள்ளி பட்டாசு தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.